புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது

11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று இரவு அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி அருகே இரவு 8 மணிக்கு பிறகு கரையை கடக்கும். புயல் கரையை கடந்த பின்பும் புயலின் தாக்கம் 6 மணி நேரம் நீடிக்கும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; தற்போது நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது. புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டதன் காரணகாவே பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நிவர் புயலின் மையப்பகுதி மட்டுமே 150 கி.மீ  விட்டம் கொண்டது. நிவர் புயல் கரையை கடந்த பிறகும் 6 மணி நேரம் அதன் தாக்கம் இருக்கும். நிவர் புயல் காரணமாக கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை 13 முதல் 23 அடி வரை ராட்சத அலைகள் எழும்பும்.

குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடற்கரை பகுதி கொந்தளிப்புடன் காணப்படும். நிவர் புயல் கரையைக் கடந்தபின் உள் மாவட்டங்களிலும் கன மழை பெய்யும். ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

முக்கிய சாலைகள் மூடப்பட்டன

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 3,000 கன அடியாக அதிகரிக்கபட்டு உள்ளதால் சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டு உள்ளது.சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் மூடப்பட்டன மறுஅறிவிப்பு வரும் வரை சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டிருக்கும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே அனுமதிக்க்ப்படும். .

இரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து?

சென்னைக்கு மிக அருகில் 200 கி.மீ. தொட்டு இருக்கிறது. இந்த  நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரயில்களானது இயக்கப்படும். அதே சமயம், காற்று, மழை ஆகிய சூழலை பொறுத்து ரயில்கள் இயக்கமானது மாறுப்படக்கூடும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.

இதனையடுத்து, நிவர் புயலின் தீவிரம் அதிகரித்துள்ளதால் இன்று இரவு 7 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், சூழலைப் பொறுத்து நாளை ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் இரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வேகத்தில் நகரும் நிவர் புயல்?

மணிக்கு 11 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வந்த நிவர் புயல், சென்னையில் இருந்து 214 கி.மீட்டர் தொலைவிலும், கடலூரில் இருந்து 110 கி.மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 120 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.
தற்போது அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என வானிமை மையம் தெரிவித்துள்ளது. நகர்ந்து வரும் வேகம் 11 கி.மீட்டரில் இருந்து 16 கி.மீட்டர் வேகமாக அதிகரித்துள்ளது. தற்போது அதிதீவிர புயலாக நிவர், கடலூரில் இருந்து 90 கி.மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 570 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

3 ஆயிரம் கனஅடியாக உயர்வு?

சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கியது.
இதனால் இன்று மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அதன்பின் 1500 கனஅடியாக உயர்த்தப்பட்டது
தற்போது ஏரிக்கு சுமார் 3500 கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதாக தெரிகிறது. இதனால் அணையில் இருந்து 3000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

மின்சாரம் துண்டிக்கப்படும்?

இன்று இரவு 8 மணியில் இருந்து காற்று வீசத் தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காற்று வீசத் தொடங்கியதும் மின்சாரம் துண்டிக்கப்படும் என கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் டார்ச் லைட், மெழுகுவர்த்திகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை பொதுமக்கள் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளார்.

நாளை பொது விடுமுறை?

காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை பெய்வதாலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்கும்படி அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
1)சென்னை
2)வேலூர்
3)கடலூர்
4)விழுப்புரம்
5), நாகை
6)திருவாரூர்
7)செங்கல்பட்டு
8)காஞ்சிபுரம்
9)தஞ்சை
10)மயிலாடுதுறை
11)திருவண்ணாமலை
12)அரியலூர்
13)பெரம்பலூர்
ஆகிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

கண்டுபட்டியில்-மஞ்சு விரட்டு

ஞாயிற்றுக்கிழமை கண்டுபட்டியில் நடைபெற்ற இரண்டு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் ,ஒரு பார்வையாளர் கொல்லப்பட்டார் மற்றும் 70 நபர்கள் காயப்பட்டனர்.

151 காளைகள் மற்றும் 45 காளை பழக்குபவர்கள் மாவட்ட அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .இதற்கு இணையாக 700 காளைகள் தண்ணீர் இல்லாத குளத்தில் இறக்கிவிடப்பட்டன ,

பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் ,அவர்கள் காயப்பட்டனர்,மேலும் அவர்கள் சிவகங்கை மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர்

அதிமுக அரசு முன்வருமா?-முக ஸ்டாலின்

சட்டமன்றத்தில் உறுதியளித்தபடி, “#Hydrocarbon திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்” என்று நாளை கூடவிருக்கும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை முடிவு எடுத்து,
காவிரி டெல்டா பகுதிகளை சகாரா பாலைவனமாக்கும் சதிச் செயலை தடுத்திட அதிமுக அரசு முன்வருமா? #savedeltafarmers  என்று கேள்வி எழுப்பி முக ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.