ஆஸ்திரேலிய ஓப்பனில் அதிர்ச்சி தோல்வி

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்சில் மகளிர் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார். செரீனா வில்லியம்ஸ்  4-6, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் கரோலினா பிளிஸ்கோவா விடம் தோல்வி அடைந்தார்.

ரோஜர் பெடரரை பாராட்டும் சச்சின் டெண்டுல்கர்

ஆஸ்திரேலிய ஓப்பனில் பாதுகாப்பு அதிகாரி தனது பணியை சரியாக செய்து உள்ளார். ரோஜர் பெடரர் அதற்கு பிரிதிபலித்த விதமும் பாராட்டுதலுக்கு உரியது. இதுபோன்ற நிகழ்வுகள் ரோஜர் பெடரர் போன்ற பெரிய விளையாட்டு வீரர்களின் மீது உள்ள மரியாதையே மேலும் அதிகரிக்க செய்கிறது என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் மரியா ஷரபோ தோல்வி

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் நான்காம் சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவை 4-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்சில் வெளியேறினார் ரோஜர் பெடரர்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்சில் நேற்று நடந்த 4 ஆம் சுற்று ஆட்டத்தில் சுவிட்சரலாந்து வீரர் ரோஜர் பெடரர், கிரிஸ் வீரர் ஸ்ரேபனோஸ்சித்சிபாசிடம் 6-7, 7-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்சில் வோஸ்னியாக்கி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்சில் நேற்று நடை பெற்ற மகளிர் பிரிவு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் ஷரபோவா 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வோஸ்னியாக்கியை வென்று 4 ஆம் சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் 6-2, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் டெய்லர் ரிட்ஸை வென்றார். ரபெல் நாடலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ்

மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்சில் நேற்றைய போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 6-3, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் சோங்காவை வென்று 3 வது சுற்றில் நுழைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோன ஹாலெப் 6-3, 6-7,6-4 என்ற செட் கணக்கில் சோபியா கெனினை வென்றார். செரீனா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸ்ம் நேற்றைய போட்டிகளில் வெற்றி பெற்றனர்.

ஆஸ்திரேலிய ஓபன் கிரான்ட்ஸ் லாம் டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் கிரான்ட்ஸ் லாம் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் ரோஜர் பெடரர் 7-6,7-6,6-3 என்ற செட் கணக்கில் டான் எவான்சுவை வென்றார். மற்றொரு ஆட்டத்தில் ரபேல் நடால் 6-3,6-2,6-2 என்ற புள்ளி கணக்கில் மேத்யூ எப்டன் ஐ வென்று மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

டென்னிஸ் வீரர் ஆன்டி முரே ஓய்வு?

இந்த வருடம் நடைபெறும் விம்பிள்டன் போட்டியுடன் ஓய்வு பெற போவதாக பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முரே தெரிவித்து உள்ளார். இடுப்பில் ஏற்பட்ட காயம் முற்றிலும் குணமாகததால் விளையாடக் கடினமாக உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இந்த வருடத்திர்க்கான விம்பிள்டன் போட்டிகள் ஜூலை மாதம் நடைபெற இருப்பது குறிப்பிடதக்கது.

டென்னிஸ் ஆடுபுலி ஆட்டம்

டென்னிஸ் வீரர்களின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது டென்னிஸ் மும்மூர்த்திகளான நடால், பெடரர் ,ஜோகோவிச் முதல் மூன்று இடங்களை தக்கவைத்துள்ளனர். முதலிடத்தை நடால், இரண்டாம் இடத்தை ஜோகோவிச், மூன்றாம் இடத்தை பெடரர் பெற்றுள்ளனர்.

சர்ச்சை கார்ட்டூன்.

நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் குறித்து தங்கள் பத்திரிக்கையில் வெளியான கார்ட்டூன் சித்தரிப்புக்கு உண்டான எதிர்ப்பு மற்றும் இன ரீதியான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கார்ட்டூன் கலைஞருக்கு தங்கள் ஆதரவை ஆஸ்திரேலிய பத்திரிக்கையான ‘ஹெரால்ட் சன்’ மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. பிரபல கார்ட்டூன் கலைஞரான மார்க் நைட் வரைந்த அந்த ஓவியம்,ஒரு குழந்தை போல உடைந்த தனது ராக்கெட்டுக்கு அருகில் குதித்து குதித்து செரீனா அழுவது போல இருந்தது. இந்த கார்ட்டூன் குறித்து விமர்சித்தவர்கள் இனவாத மற்றும் பாலியல்… Continue reading சர்ச்சை கார்ட்டூன்.