கண்டுபட்டியில்-மஞ்சு விரட்டு

ஞாயிற்றுக்கிழமை கண்டுபட்டியில் நடைபெற்ற இரண்டு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் ,ஒரு பார்வையாளர் கொல்லப்பட்டார் மற்றும் 70 நபர்கள் காயப்பட்டனர்.

151 காளைகள் மற்றும் 45 காளை பழக்குபவர்கள் மாவட்ட அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .இதற்கு இணையாக 700 காளைகள் தண்ணீர் இல்லாத குளத்தில் இறக்கிவிடப்பட்டன ,

பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் ,அவர்கள் காயப்பட்டனர்,மேலும் அவர்கள் சிவகங்கை மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர்

பளு தூக்கும் வீராங்கனை அனுராதாவுக்கு மு க ஸ்டாலின் வாழ்த்து!

நேபாளத்தில் நடைபெற்றுவரும் #SouthAsianGames2019-ல் 87 கிலோ பிரிவு பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற அனுராதா அவர்களுக்கு வாழ்த்துகள்! ஏற்கனவே காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அவர், உலக அரங்கில் மென்மேலும் பல வெற்றிகளைப் பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்க்கட்டும் என வாழ்த்து  தெரிவித்து மு க  ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

இளவேனில் வாலறிவனுக்கு டிடிவி தினகரன் பாராட்டு!

சீனாவில் நடைபெறும் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் 10மீ. ஏர் ரைபில் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களை பாராட்டி மகிழ்கிறேன் என்று டிடிவி  தினகரன் தனது  ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்

சிந்து தோல்வி

சீனா வில் நடந்துவரும் சீன பேட்மிட்டன் தொடரிலிருந்து சிந்து வெளியேறி உள்ளார் நேற்று நடை பெற்ற  போட்டியில் தாய்லாந்தை  சேர்ந்த போர்ன்பாவீ  இடம் 21-12,13-21,19-21, என்ற செட் கணக்கில் இழந்தார் இதற்க்கு முன்பு  பி வி சிந்து கால் இறுதிக்கு முந்தய சுற்றில் அபாரமாக விளையாடி முன்னாள் ஒலிம்பிக் தங்க பதக்கம் வென்ற சீனா வீராங்கனையான  ஸுருசி அக்கார்களை 21-18, 21-12 என்று வெற்றி கொண்டார் இந்த ஆட்டம் ஆரம்பித்த முப்பத்திநாலு நிமிடத்திற்குள் வீழ்த்தி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

பிரியங்காவா? கோலியா?

கோடிகளில் பணம்,  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பணம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது ,இந்தியாவில் பிரியங்கா சோப்ராவும் ,விராட் கோலியும்  இடம் பெற்றுள்ளார்கள் 

 

முதல்வருக்கு நன்றி

மலேசியா நாட்டில் நடைபெற்ற உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற சென்னை சேர்ந்த மாணவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தமிழக வீரரை வாழ்த்தும் டிடிவி தினகரன் அவர்கள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியின் 4 x 400 மீ  கலப்பு தொடர் ஓட்டப்பந்தயத்தில்  வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவ் உள்ளிட்ட இந்திய அணியினருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றும் திருச்சி, லால்குடியைப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், இதன் மூலம் தமிழகத்திற்குப் பெருமை தேடித்தந்திருக்கிறார். எதிர்காலத்தில் அவர் நிறைய வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

 

மலேசிய பேட்மின்டனில் சிந்து வெற்றி

மலேசியா ஓபன் டென்னிஸ் போட்டி கோலாலம்புரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து 22_20, 21_12 என்ற செட் கணக்கில் ஜப்பானை சேர்ந்த அயா ஓஹோரியாவை வென்றார். மற்றோ  ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் 22_20, 15_21, 10_21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தை சேர்ந்த போர்பவீ  சோச்சுவாங்கிடம் தோல்வி அடைந்தார்.

கிராண்ட் மாஸ்டரானார் இனியன்

ஈரோடு இடையன்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த கே.பன்னீர் செல்வம், சரண்யா தம்பதியரின் மகன் ப.இனியன். தனியார் பள்ளி மாணவர். காமன்வெல்த் சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

சர்வதேச அளவில் சதுரங்க கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற வேண்டுமானால் மூன்று முறை கிராண்ட் மாஸ்டர் நார்ம் தகுதியை பெற வேண்டும். கடந்த ஆண்டு ஜூலை மாதமே இந்த மூன்று நார்ம்களையும் இனியன் நிறைவு செய்தார். எனினும் அவர், 2478 புள்ளிகளே பெற்றிருந்தார்.  கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல 2500 புள்ளிகளை எட்ட வேண்டும் என்ற நிலை இருந்தது.இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நடந்த போட்டியில் இனியன் 17 புள்ளிகள் பெற்றார்.

கடந்த 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற சர்வதேச சதுரங்கப் போட்டியில் 18 புள்ளிகளை பெற்ற இனியன் ஒட்டுமொத்தமாக 2513 புள்ளிகளை கடந்து இந்தியாவின் 61-வது கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப் பட்டார்.

சாய்னா அபார வெற்றி

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து சாம்பியன் ஷிப் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-17, 21-18 என்ற நேர் செட்களில் ஸ்காட்லாந்தை சேர்ந்த கிறிஸ்டி கில்மறை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளார்.