ஹாக்கியில் இந்தியா கோல் மழை

அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் ஆனது மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் போலந்தை சந்தித்தது.

இதில் இந்திய அணி வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். இந்திய வீரர்கள் வருண் குமார், சந்திப் சிங் அதிகபட்சமாக இரண்டு கோல்கள் அடித்தனர். இந்திய அணி 10 -0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

6 அணிகள் பங்கு பெற்ற இந்த தொடரில் புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்தியாவும், இரண்டாம் இடம் பிடித்த தென் கொரியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன.

இன்று மாலை 6 மணிக்கு இறுதிப்போட்டியானது நடைபெறுகிறது. லீக் சுற்றில் இரண்டு அணிகளும் மோதிய ஆட்டமானது டிராவில் முடிந்தது குறிப்பிடதக்கது

அஸ்லான் ஷா ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா?

அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் ஆனது மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடைபெற்று வருகிறது. ஆறு அணிகள் பங்கு பெற்ற இந்த ஹாக்கி தொடரில் நேற்றைய போட்டியில் இந்தியா கனடாவை சந்தித்தது.

இந்த போட்டியில் 7_3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய வீரர்கள் மந்தீப் சிங் 3 கோல்களும் அமித் ரோஹிதாஸ், வருண் குமார், விவேக் பிரசாத், நீலகண்ட ஷர்மா தலா ஒரு கோலும் அடித்தனர்.

இந்தியா மற்றும் தென் கொரியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன.நாளை நடைபெறும் லீக் போட்டியில் இந்திய அணி போலந்தை சந்திக்க உள்ளது.

ஹாக்கியில் இந்திய அணி வெற்றி

அஸ்லான் ஷா ஹாக்கி போட்டிகள் ஆனது மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் 4_2 கோல் கணக்கில் இந்திய அணி மலேசியாவை வென்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தரப்பில் சுமித், சுமித் குமார், வருன் குமார், மன்தீப் சிங் ஆகியோர் கோல் அடித்தனர். மலேசிய அணி தரப்பில் ராஷி ரஹீம் மற்றும் முகமது பிர்ஹான் ஆகியோர் கோல் அடித்தனர். இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி கனடா அணியை எதிர்கொள்கிறது.

ஹாக்கி மைதானமே வீடு

ANNA HOCKEY FAMILY

 

பள்ளியில் விளையாடியதால் மட்டுமல்ல ஹாக்கி மீது அவர்களுக்கு இருத்த பற்றும் காதலும் தான் காரணம் அவர்கள் கால் அண்ணா பல்கலைக்கழக மைதானத்தில் பதிய.கண்கள் ஓரிடத்தில் பதியவில்லை நாலாபுறமும் சுழன்றது இல்லை தேடியது ஆம் ஹாக்கி மைதானத்தை கிடைக்கவில்லை அவர்களும் சோர்ந்துவிடவில்லை.
2005-ல் இவர்களின் ஹாக்கி காதலை மேலும் அதிகரிக்கவும் ஒரு சீரான முறையில் அவர்களை வழிநடத்தவும் வரமாகக் கிடைத்தவர் இவர் (வாத்தியார்)
ஆனால் வாத்தியாராக பழகாமல் தோழமையோடு பழகிய இவருடைய குணம் அவர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்தது.உடைந்த ஹாக்கி மட்டையையும், கிடைத்த சின்ன இடத்தையும் வைத்து இவர் அவர்களை வடிவமைத்தார். பல வெற்றிகள் அவர்களுக்குக் கிடைக்க வழிவகுத்தார். இவர் குணத்திற்கு கிடைத்த பரிசு என்றே கூறலாம். ஹாக்கி அணியாக இருந்தது. 2006-ல் ஹாக்கி குடும்பமாக உருமாறியது.
இவரின் கற்றுக்கொடுக்கும் ஆர்வம் மேலும் வளர்ந்தது. இந்த ஹாக்கி குடும்பத்தின் இடைவிடாத உழைப்பிற்கும் வெற்றியை நோக்கிய பயணத்திற்கும் ஒரு அங்கிகாரமாகவும் ஒரு கிரிடம் ஆகவும் 2012-ல் கிடைத்தது ஹாக்கி மைதானம்.

ஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.


விளையாட்டின் மீது அவர்களுக்கு இருந்த ஆர்வம் எந்த விதத்திலும் கல்வியை பாதிக்கவில்லை பாதிக்கவும் விட்டுவிடவில்லை இவர்.
இந்த குடும்பத்திற்கு மேலும் அழகு சேர்க்கவும் வலு சேர்க்கவும் 2015-ல் உருவானது மகளிர் அணி மகளிர் அணியையும் ஆண்கலள் அணிக்கு இணையாக உருவாக்கும் சவாலை ஏற்றுக்கொண்டார் இவர்.


பலதடைகளையும் எதிர்ப்புகளையும் தகர்த்து எரிய முயற்சிகள் பல மேற்கொண்டார்.
அடுப்பங்கரையை விட்டு அகன்று வகுப்பறைக்குள் குவிந்து கொண்டு இருக்கும் பெண்கள் வகுப்பறையோடு நின்றுவிடக்கூடாது.

மைதானத்திலும் அவர்கள் கால்கள் பதியவேண்டும் என நினைத்தார் முயற்சிகள் பல எடுத்தார். முடியாதோ என மூளையிலேயே முடங்கநினைத்த பெண்கள் இன்று வாகைகள் பல சூடி வலம்வர வழிவகுத்தார். விளையாட்டில் மட்டும் வெற்றிகள் காண வைப்பவர் அல்ல இவர் நம் வாழ்க்கையிலும் வெற்றிகள் குவிய வழிநடத்துபவர். அப்படிப்பட்ட உங்களை வாழ்த்த வயதில்லை ஆதலால் வணங்குகிறோம் வாத்தியாரே !…

முதல் முறையாக அரை இறுதியில்

உலக ஹாக்கி லீக் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. லீக் ஆட்டங்களில் பல அதிர்ச்சியான முடிவுகள் கிடைத்துள்ளன.

ஆஸ்திரெலியா அணி பிரான்ஸை எதிர் கொண்டது கடந்த ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரான்ஸ் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரான்ஸ் 0 கோல்களும், ஆஸ்திரெலியா மூன்று கோல்களும் அடித்தன. இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று ஆஸ்திரெலியா சாதனை படைத்தது.

ஹாக்கி அரை இறுதியில்?

உலக ஹாக்கி லீக் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  ஆட்டங்களில் பல அதிர்ச்சியான முடிவுகலும் கிடைத்துள்ளன.

ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டீனா அணி இங்கிலாந்தை எதிர் கொண்டது கடந்த ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜென்டீனா வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்த் 3 கோல்களும், அர்ஜென்டீனா 2 கோல்களும் அடித்தன. இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.

இந்திய அரை இறுதிக்கு தகுதி பெறுமா?

உலகக் கோப்பை ஹாக்கி போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வலிமையான நெதர்லாந்தை இன்று இந்தியா சந்திக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் ஆதலால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இந்தியாவில் போட்டி நடைபெறுவதால் இந்தியாவுக்குச் சாதகமாக இருக்கும் ஆனால் நெதர்லாந்து அணி தற்காப்பு ஆட்டத்தில் சிறந்த அணி ஆதலால் இருவரும் வெற்றி வாய்ப்புச் சமஅளவில் உள்ளது.

அர்ஜென்டீனா அதிர்ச்சி தோல்வி

உலக ஹாக்கி லீக் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. லீக் ஆட்டங்களில் பல அதிர்ச்சியான முடிவுகலும் கிடைத்துள்ளன.

ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டீனா அணி பிரான்ஸை எதிர் கொண்டது கடந்த ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜென்டீனா வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரான்ஸ் ஐந்து கோல்களும், அர்ஜென்டீனா மூன்று கோல்களும் அடித்தன. இறுதியில் 5-3 என்ற கோல் கணக்கில் வென்று பிரான்ஸ் சாதனை படைத்தது.

 

ஹாக்கி போட்டி டிரா

மற்றொரு லீக் போட்டி ஆட்டத்தில் மலேசியா அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின.

இரண்டு அணிகளும் சம பலத்துடன் ஆடியதால் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவானது.

ஜெர்மனி அபாரம்

உலகக் கோப்பை லீக் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டத்தில் வலுவான நெதர்லாந்து அணியை, ஜெர்மனி அணி சந்தித்தது.

யாரும் எதிர்பாரத விதமாக ஜெர்மன் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது 4-1 என்ற கோல்கணக்கில் வென்று நேரிடையாகக் கால் இறுதிக்கு தகுதி பெற்றது.