மாரடோனா,மாரடோனா.மாரடோனா

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டீகோ மாரடோனா (வயது 60) கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, மாரடோனா வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்றிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மரடோனாவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது திடீர் மறைவு கால்பந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவையொட்டி அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் உள்பட பலரும் மரடோனா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

 தேவையான உடற்கூறு மற்றும் நெருக்கடி அளிக்கும் முறைகளை மரடோனா கொண்டிருந்தார். இவரது வலிமையான கால்கள் மற்றும் மைதானத்தின் மையப் பகுதியில் திறமையாக கையாளும் விதம் விளையாட்டில் முன்னேற்றத்தை அளித்தது.  பெல்ஜியம் அணிக்கு எதிராக அடித்த இரண்டு கோல்கள் இவரது வலிமையை விளக்குகிறது. மரடோனா வியூகங்களை வகுப்பவராகவும் குழு வீரராகவும் இருந்தார்,

மேலும் தன்னிடம் பந்து வந்தால் மிகவும் சிறப்பாக செயல்படுவார். இடவசதி குறைவாக உள்ள இடங்களில் தன்னைத் தானே சமாளித்துக் கொள்வார், மேலும் எதிரணியினர் எதிர்பாராத (1986 ஆம் ஆண்டுப் போட்டியில் இங்கிலாந்திற்கு எதிரான கோல்) விதத்தில் பந்தை தனது அணி வீரர்களுக்கு அனுப்புவதிலும் சிறப்பாக செயல்படுவார். உயரம் குறைவாக இருந்த போதிலும் வலிமையுடன் இருப்பார், எதிரணியினர் பின்புறம் இருக்கும் போது தனது சக அணி வீரருக்கு பந்தை அனுப்பி கோல் அடிக்குமாறு செய்யும் வண்ணம் திறமையாக பந்தைக் கையாளக் கூடியவர்.

மைதானத்தின் இடது வளைவில் இருந்து முழு வேகத்துடன் முறையில் நகர்ந்து எதிரணியின் கோல் பகுதியை அடைவது, மற்றும் அணி வீரர்களுக்கு பந்தை மாற்றுவது போன்றவை விளையாட்டில் மரடோனாவின் சிறப்பான செயல்களாகும். முழு எடையையும் தாங்கிக் கொண்டு பின்னங்காளால் எதிர்முறையில் அனுப்பும் , எனப்படுவது மற்றொரு சிறப்பான செயலாகும்.

 நூற்றாண்டின் சிறந்த வீரரை தேர்ந்தெடுக்க 2000 ஆம் ஆண்டு ஒரு . 53.6% ஓட்டுகளைப் பெற்று மரடோனா முதலாவதாக வந்தார். பின்னதாக, விருதை எவ்வாறு மற்றும் யாருக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக ஃபிஃபா “ஃபுட்பால் ஃபேமிலி” என்ற குழுவில் கால்பந்தாட்ட வல்லுநர்களை அமைத்து  எதிர்நிலையாக அறிவித்தது. செயல்முறையில் மாற்றம் கொண்டு வந்ததற்கு மரடோனா எதிர்ப்பு தெரிவித்தார், மேலும் தனக்கு பதிலாக பீலேவிற்கு விருது அளிப்பதாக இருந்தால் அந்த விழாவில் கலந்து கொள்வதில்லை என்றும் அறிவித்தார். இறுதியில் இரண்டு விருதுகள் உருவாக்கப்பட்டு இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த விருதை மரடோனா ஏற்றுக் கொண்டார், ஆனால் விருதைப் பெற்றவுடன் பீலே வரும் வரை காத்திருக்காமல் விழாவை விட்டு வெளியேறினார்.

 

2001 ஆம் ஆண்டில் (AFA) மரடோனாவிற்கான 10 என்ற அதிகாரத்தை வழங்குமாறு ஃபிஃபாவைக் கேட்டுக் கொண்டது. இந்த வேண்டுகோளை ஃபிஃபா ஏற்றுக் கொள்ளவில்லை, எனினும் இது மாற்றப்படும் என்ற ஃபிஃபா கூறியதாக அர்ஜென்டினா அதிகாரிகள் கூறினர்.

 இங்கிலாந்து அணிக்கு எதிராக மரடோனா அடித்த கோல் 2002 ஆம் ஆண்டில் ஃபிஃபா நடத்திய வாக்கெடுப்பில் சிறந்த கோலாக தேர்ந்தெடுக்கப்பட்டு மரடோனா ரசிகர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்; அனைத்து காலங்களிலும் சிறந்த உலகக் கோப்பை அணி என்பதை தீர்மானிக்கும் வாக்கெடுப்பிலும் அதிகமான வாக்குகளை மரடோனா பெற்றார்.

 

 

சாம்பியன்ஸ் லீக்

உலக நட்சத்திர கால் பந்து வீரர் ரொனால்டினோ தனது அணியின் வீரர்களின் குரூப் போட்டோ வை வெளியிட்டுள்ளார் மேலும் எந்த அணியையும் சந்திக்க தனது அணி தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

 

கால்பந்து நட்சத்திரம் இன்ப சுற்றுலா ?

பிரபல கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது எந்தவித கால் பந்து போட்டிகளும் நடைபெறாததால் குடும்பத்துடன் உற்சாகமாக தனது  நேரத்தை செலவழித்து வருகிறார்.

சாம்பியன் ஆன பார்சிலோனா அணி

ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனாவில் நடைபெற்ற லாலிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணியும், லெவன்டி அணியும் மோதின. இந்த ஆட்டத்தின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் 62 வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் லா லிகா சாம்பியன் பட்டத்தை பார்சிலோனா அணி 8வது முறையாக கைபற்றி உள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் இறுதிப்போட்டியில் கோவா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றில் விளையாட கோவா அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதி ஆட்டத்தில் கோவா மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இருப்பினும் அரையிறுதியின் முதல் சுற்றில் கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தியிருந்தது. இரண்டு சுற்று ஆட்டங்களின் அடிப்படையில் 5-2 என்ற கோல் கணக்கில் கோவா அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஞாயிறு அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பெங்களூர் மற்றும் கோவா அணிகள் மோதுகின்றன.

நட்சத்திர கால்பந்து வீரர் காயம்

பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் நெய்மார் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகளில்  விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சோகத்தில் கால்பந்து ரசிகர்கள்

எகிப்தின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் மொஹம்மத் சலாஹ் தன்னுடைய முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள கணக்குகளை டெலீட் செய்து உள்ளார். இதனால் அவரை பின்தொடர்ந்த கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள்  சோகத்தில் முழ்கி உள்ளனர்.

பார்ச்சிலோனா முதலிடம்

லீ லிகா கால்பந்து போட்டி  நடைப்பெற்று வருகிறது.

தரவரிசை பட்டியலில் பார்ச்சிலோனா  19-போட்டிகளில், 13-வெற்றி, 2-தோல்வி, 4-டிரா உடன் 43 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.

மெஸ்சி 400

லீ லிகா கால்பந்து போட்டி  நடைப்பெற்று வருகிறது. பார்ச்சிலோனா அணியின் கேப்டனும் நட்ச்சத்திர வீரருமான மெஸ்சி அவர்கள் தனது 400-வது கோலை அடித்து சாதனை படைத்துள்ளார்.

அந்த அணி  தரவரிசை பட்டியலில்  19-போட்டிகளில், 13-வெற்றி, 2-தோல்வி, 4-டிரா உடன் 43 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து அதிசயம்

உலகக் கோப்பை அரையிறுதியில் பிரான்ஸால் வீழ்த்தப்பட்ட பெல்ஜியம் தரவரிசையில் முதல் இடம் பிடித்து வரலாறு படைத்துள்ளது. பெல்ஜியத்தில் 1,727 புள்ளிகளும், பிரான்சிற்கு 1,726 புள்ளிகளும் கிடைத்தன. பிரேசில் 1,676 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் பத்து இடங்களை பிடித்த அணிகள் 

1. பெல்ஜியம்

2. பிரான்ஸ்

3. பிரேசில்

4. குரோஷியா

5. இங்கிலாந்து

6. போர்ச்சுகல்

7. உருகுவே

8. சுவிட்சர்லாந்து

9. ஸ்பெயின்

10. டென்மார்க்