பிரியங்காவா? கோலியா?

கோடிகளில் பணம்,  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பணம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது ,இந்தியாவில் பிரியங்கா சோப்ராவும் ,விராட் கோலியும்  இடம் பெற்றுள்ளார்கள்   

சச்சின் டெண்டுல்கருக்கு மேலும் ஒரு மகுடம்

  ICC Hall of fame அவார்ட் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கப்பட்டுள்ளது ,இதற்கு முன்பு டிராவிட் இந்த அவார்ட்  பெற்று இருக்கிறார்.        

இங்கிலாந்து கேப்டன் என்ன சொல்கிறார்

2019 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று ஆஸ்திரேலிய – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் அடித்த சதம் மற்றும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பெகரன்டார்ஃப், ஸ்டார்க் ஆகியோரின் அதிரடி பவுலிங்கால், 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 221 ரன்களுக்கு ஆல் அவுட்… Continue reading இங்கிலாந்து கேப்டன் என்ன சொல்கிறார்

மேற்கிந்திய தீவுகள் முன்னாள் வீரர் லாரா!

மும்பை: விண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா, நெஞ்சு வலி காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விண்டீஸ் முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் பிரையன் லாரா 50. டெஸ்டில் 11,953 ரன்கள், ஒருநாள் அரங்கில் 10,405 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆன்டிகுவா டெஸ்டில், ஒரு இன்னிங்சில் 400 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்தவர். டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் சதம் அடித்த இவர், 2007ல் ஓய்வு பெற்றார். கடந்த மே 2ம் தேதி… Continue reading மேற்கிந்திய தீவுகள் முன்னாள் வீரர் லாரா!

தோனியை விமர்சித்த சச்சின்

மகேந்திர சிங் தோனி… பல கிரிக்கெட் ரசிகர்களின் மந்திரச் சொல் இது. இந்த மந்திரச் சொல்லை யார் கலங்கப்படுத்தினாலும் தோனி ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. தற்போது ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர், தோனியின் ஆட்டம் குறித்து விமர்சித்துள்ளார். இதைப் பொறுத்துக் கொள்ளாத தோனி ரசிகர்கள், சச்சினை வறுத்தெடுத்துள்ளனர். 2019 உலகக் கோப்பைத் தொடரில் சில நாட்களுக்கு முன்னர் இந்தியா – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்தியா போராடி கடைசி ஓவரில் வெற்றி… Continue reading தோனியை விமர்சித்த சச்சின்

ஆண்ட்ரே ரஸல் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகல்!

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக 26 வயது வீரர் அம்ரிஸ் அணியில் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 5 விக்கெட்டுகளை ரஸல் எடுத்துள்ளார். பாயின்ட்ஸ் டேபிளில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த ஆட்டம் வரும் வியாழன் அன்று வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவை எதிர்கொள்கிறது.

விராட் கோலி சாதனை !

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, சாதனைகளை முறியடிப்பது டீ சாப்பிடுவது போல இருக்கிறது. தனது கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை அநாயாசமாக முறியடித்தவர் கிங் கோலி. தற்போது இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனையை அவர் முறியடிக்க உள்ளார். ஒருவர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். இன்னொருவர் ‘நி லெஜண்டு’ பிரயன் லாரா. சச்சின் டெண்டுல்கர் மற்றும் லாராவுக்குத் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் 20,000 சர்வதேச ரன்களை ஸ்கோர் செய்ய 453 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டனர்.… Continue reading விராட் கோலி சாதனை !