பதவி வெறி கங்குலி? நிலைக்குமா நீதி?

 

2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகின் அதிக பணம் கொழிக்கும கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கில் நடைபெற்ற சூதாட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட பலதரப்பு புகார்களின் காரணமாக சென்னை சூப்பர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடையும்,ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடையும் வழங்க பட்டது. 
இதனை உற்றுநோக்கிய உச்ச நீதிமன்றம் பிசிசிஐ அமைப்பில் சீர்திருத்தங்களை ஏற்படுத்த முன்னாள் நீதிபதி லோத்தா அவர்களின் தலைமையில் கமிட்டி ஒன்றைத் அமைத்தது.லோத்தா கமிட்டி பிறப்பிக்கும் பரிந்துரைகளை பிசிசிஐ கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தால் கூறப்பட்டது. நீதிபதி லோத்தா அவர்களின் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரைகளில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும், ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு, எழுபது வயதிற்கு மேல் யாரும் பதவியில் இருக்க கூடாது, அரசியல்வாதிகள் பிசிசிஐ யில் அங்கம் வகிக்க கூடாது, ஒருவர் இந்திய கிரிக்கெட் வாரியம் அல்லது மாநில கிரிக்கெட் வாரியத்தில் ஆறு ஆண்டுகள் பதவியில் இருந்தால் அடுத்த மூன்று ஆண்டுகள் கட்டாயமாக இந்த அமைப்புகளில் எந்த பதவியும் வகிக்க கூடாது போன்றவை முக்கிய அம்சங்கள் ஆகும்.
லோத்தா கமிட்டியின் இந்த பரிந்துரைகள் நிரந்தரமாக பதவிகளை விரும்பிய பிசிசிஐயின் முக்கிய புள்ளிகளை எரிச்சல் அடைய செய்தது.லோத்தா கமிட்டியின் பரிந்துரைகள் செயல் படுத்தபட்டால் சீனிவாசன் , நிரஞ்சன் ஷா போன்றவர்களும் தங்கள் மாநில கிரிக்கெட் சங்க பதவிகளை இழக்க நேரிடும் என்பதால் பரிந்துரைகளுக்கு தடையாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.முன்னாள் தலைவரும்  ஆன அனுராக் தாகூர் இந்த பரிந்துரைகளை செயல் படுத்தாமல் உச்ச நீதிமன்றத்திடம் கால அவகாசம் கேட்டு கொண்டே இருக்க ஒரு கட்டத்தில எரிச்சல் அடைந்த உச்ச நீதிமன்றம் பிசிசிஐ அமைப்பில் இருந்து அவரை வெளியேற்றியது.
அதன் பின் லோத்தா கமிட்டியின் பரிந்துரைகள் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏற்றுக்கொள்ள பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இந்த பரிந்துரைகளை செயல்படுத்த ஏழு பேர் கொண்ட குழுவானது பிசிசிஐ ஆல் அமைக்கப்பட்டது. ராஜீவ் சுக்லா வை தலைவராக கொண்ட இக்குழுவில் அப்போதைய பிசிசிஐ செயலாளர் அமிதாப் சௌத்ரி, பொருளாளர் அனிருத் சௌத்ரி, சவ்ரவ் கங்குலி ஆகியோரும் இடம்பெற்று இருந்தனர்.
2017 ஆம் ஆண்டு முதல் பிசிசிஐயின் செயல்பாடுகளை சிஓஏ மேற்பார்வை செய்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பிசிசிஐ தலைவராக கங்குலியும், செயலாளர் ஆக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் பிசிசிஐ ஆல் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பிசிசிஐயின் தலைவராக பிரிஜேஷ் படேல் வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சீனிவாசன், நிரஞ்சன் ஷா, ராஜீவ் சுக்லா, மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் பங்கு பெற்ற இந்த கூட்டத்தில் கங்குலி போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டது அனைவரின் புருவங்களையும் உயர செய்தது.

கங்குலி மேற்கு வங்க கிரிக்கெட் வாரியத்தில் ஐந்து ஆண்டுகளும், ஜெய் ஷா குஜராத் கிரிக்கெட் வாரியத்தில் ஐந்து ஆண்டுகளும் பதவி வகித்த நிலையில் தான் பிசிசிஐ யின் தலைவராகவும், செயலாளர் ஆகவும் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கங்குலியின் தலைமையில் நடைபெற்ற பிசிசிஐ யின் 88 ஆம் ஆண்டு கூட்டத்தில் லோத்தா கமிட்டியின் பரிந்துரைகளுக்கு எதிராக சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக கங்குலியும், ஜெய் ஷாவும் ஆறு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக பதவி வகிக்க முடியாது, கட்டாயம் மூன்று ஆண்டுகள் இடைவெளி வேண்டும் என்ற விதியை மாற்ற வேண்டும் எனவும், பிசிசிஐ செயளாலர்க்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் எனவும் ஏப்ரல் 21 ஆம் தேதி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஜெய் ஷா வின் பிசிசிஐ செயலாளர் பதவி காலம் மே 7 ஆம் தேதி முடிந்த நிலையில் பிசிசிஐ கூட்டங்களில் அவர் தொடருந்து பங்கு பெற்று வருகிறார். தலைவர் சவுரவ் கங்குலியின் பதவி காலமும் ஜூலை 27 ஆம் தேதி உடன் முடிவு பெற்று உள்ளது. ஏற்கனவே பிசிசிஐ பொது மேலாளர் சாபா கரீம் , தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி பதவி காலம் முடிந்து பதவி விலகி உள்ளனர்.
நடைபெற இருக்கும் ஐபிஎல், ஆஸ்திரேலிய தொடர்களுக்கு தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டிய கால கட்டத்தில், பிசிசிஐ புதிய தலைவரை தேர்வு செய்யாமல் 2024 ஆம் ஆண்டு வரை கங்குலி மற்றும் ஜெய் ஷாவின் பதவி காலத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் பிசிசிஐ யை வளர்ச்சி அடைய செய்ய நிலையான நீண்ட நிர்வாகம் வேண்டும் எனவும் உச்ச நீதி மன்றத்தில் முதலை கண்ணீர் வடித்து கொண்டு உள்ளது.
இந்நிலையில் உச்ச நீதி மன்றத்தில் மீண்டும் மனு ஆகஸ்ட் 17 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. கங்குலி மற்றும் ஜெய்ஷாவின் பதவி காலம் நீட்டிக்க படுமா அல்லது பிசிசிஐ அமைப்பில் இருந்து உச்ச நீதி மன்றத்தால் வெளியேற்ற படுவார்களா என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

 

இங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி

இங்கிலாந்து மற்றும் வெண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது சவுத்தம்டன் கிரிக்கெட் மைதானத்தில் 8 ஆம் தேதி துவங்கியது. கொரோன வைரஸ் தாக்கத்தால் 117 நாட்களுக்கு பிறகு நடைபெறும் சர்வதேச போட்டி என்பதால் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை இப்போட்டி பெற்றது. இந்த போட்டியில் ரசிகர்களுக்கு நேரடியாக பார்க்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.ரூட் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியதால் முதல் முறையாக பென் ஸ்டோக்ஸ் அணியை வழி நடத்தினார்.
2012 ஆம் ஆண்டு முதல் 51 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக ஆடிய ஸ்டுவர்ட் பிராட்க்கு இப்போட்டியில் ஆடும் வாய்ப்பை ஸ்டோக்ஸ் வழங்கவில்லை.8 ஆம் தேதி காலையில் கடுமையான மழை பெய்ததால் போட்டி உணவு இடைவேளைக்கு பிறகுதான் ஆரம்பம் ஆனது.
டாசில் வென்ற வென்ற பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் ஐ தேர்வு செய்தார். இந்த முடிவும் இங்கிலாந்து அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தியது. ஈரப்பதமான சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட வெண்டீஸ் அணியின் வேகபந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்களை வேகமாக கைப்பற்றினர். இதனால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 204 ரன்களில் தனது அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. சிறப்பாக பந்து வீசிய வென்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் 6 விக்கெட்களையும், கேப்ரியல் 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டோக்ஸ் 43 ரன்களும், விக்கெட் கீப்பர் பட்லர் 35 ரன்களும், ரோரி பர்ன்ஸ் 30 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய வென்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர் பிரத்வெயிட் 65 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மூன்றாம் நாள் தேநீர் இடைவேளைக்கு பிறகு டோரிச் மற்றும் ரோஸ்டம் சேஸ் இணைந்து ஆடிய அற்புதமான ஆட்டதால் வென்டீஸ் அணி 114 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்திய டோரிச் 61 ரன்களும், ரோஸ்டம் சேஸ் 47 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து அணியின் தரப்பில் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்களையும், ஆண்டர்சன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
114 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாம் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 42 ரன்களும் சிப்லி 50 ரன்களும் குவித்து ஆட்டம் இழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாக் கிரேலி 76 ரன்களும், ஸ்டோக்ஸ் 46 ரன்களும் எடுத்தனர். நான்காம் நாள் தேநீர் இடைவேளையின் போது 249 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என வலுவான நிலையில் இருந்த இங்கிலாந்து அணி அதன் பின் சறுக்கலை கண்டது. ஸ்டோக்ஸ் ஆட்டம் இழந்த பின் ஆட்டத்தின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அதன் பின் 64 ரன்களை எடுப்பதற்குள் ஆறு விக்கெட்களை பறி கொடுத்தது இங்கிலாந்து அணி. போட்டியின் ஐந்தாம் நாள் துவக்கத்தில் 313 ரன்களில் ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து.வென்டீஸ் அணியின் கேப்ரியல் அதிகபட்சமாக ஐந்து விக்கெட்களை கைபற்றி அசத்தினார்.
அதன் பின் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வென்டீஸ் அணி 27 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின் இணைந்த பிளாக்வுட் ,ரோஸ்டன் சேஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.ரோஸ்டன் சேஸ் 37 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதன் பின் வரலாற்று சிறப்பு மிக்க இன்னிங்ஸ் ஆடிய பிளாக்வுட் 95 ரன்களில ஆட்டம் இழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.இருந்தபோதிலும் அதன் பின் ஆறு விக்கெட்களை இழந்து 200 ரன்கள் குவித்த வென்டீஸ் அணி நீண்ட நாட்களுக்கு பிறகு தனது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்தது.  போட்டியில் 99 ரன்களும், 6 விக்கெட்களையும் கைப்பற்றிய பென் ஸ்டோக்ஸ் ஆல் கேப்டன் ஆக தனது அணிக்கு வெற்றியை தேடி தர முடியவில்லை. ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் இந்த போட்டியில் ஜொலிக்காத நிலையில் ஸ்டுவர்ட் பிராட் ஐ பெஞ்சில் அமர வைத்த ஸ்டோக்ஸ்ன் நிலைப்பாடு அவரின் கேப்டன் ஷிப் திறமையை கேள்விக்குறியாக்கி உள்ளது. காயத்தில் இருந்து விடுபட்டு கடைசி நேரத்தில் அணியில் இடம் பெற்ற வென்டீஸ் வீரர் கேப்ரியல் ஒன்பது விக்கெட்களை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை பெற்று அசத்தி உள்ளார்.

 

இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் ஏற்க மறுத்து விட்டார் என்று வினோத்ராய் கூறினார்.

2017-ம் ஆண்டில் கேப்டன் விராட்கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ப்ளே விலகியதை அடுத்து தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும்படி ராகுல் டிராவிட்டிடம் கேட்டதற்கு அவர் மறுத்து விட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவராக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டிருந்த வினோத் ராய் தற்போது ரகசியத்தை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,

கும்ப்ளே விலகலை தொடர்ந்து 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்குமாறு கேட்டுக் கொண்டோம்.

ஆனால் அவர் தனது மகன்களை கவனிக்க வேண்டிய பொறுப்பும், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டியதும் இருப்பதால் தன்னால் அந்த பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். அவரது வேண்டுகோள் நியாயமாக இருந்ததால் நாங்கள் அதனை ஏற்றுக் கொண்டோம் என்றார்.

MS டோனி ஓய்வு?

டோனியின் எதிர்கால திட்டம் என்ன? என்பது குறித்து அவரது மானேஜரும், நண்பருமான மிஹிர் திவாகரிடம் கேட்ட போது, ‘நண்பர்களான நாங்கள் அவரது கிரிக்கெட் குறித்து பேசுவது கிடையாது. ஆனால் அவரை பார்க்கும் போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசித்த மாதிரி தெரியவில்லை. ஐ.பி.எல். போட்டியில் விளையாட அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். அதற்காக உண்மையிலேயே கடுமையாக உழைத்தார். ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு ஒரு மாதம் முன்னதாகவே அவர் சென்னை சென்று தனது பயிற்சியை தொடங்கியது எல்லோருக்கும் தெரியும். தனது பண்ணை வீட்டில் அதிக நேரத்தை செலவிட்டு வரும் டோனி உடல் தகுதியை நன்றாகவே பேணி வருகிறார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் அவர் பயிற்சியை தொடங்குவார். தற்போது எவ்வளவு வேகமாக இயல்பு நிலை திரும்புகிறது என்பதை பொறுத்தே எல்லாம் அமையும்’ என்று தெரிவித்தார்

நான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார்

 

சச்சின் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆக்தர் பந்தையும், சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பந்தையும் எதிர்கொள்ள அஞ்சினார் என்று ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.  இது குறித்து ஷாகித் அப்ரிடி கூறுகையில்,

நான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார். சோயிப் அக்தரின் சில ஸ்பெல்களில் சச்சின் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகின் சிறந்த பேட்ஸ்களும் நடுங்கினர். மிட் – ஆப் அல்லது கவர் திசையில் பீல்டிங் செய்யும் போது நீங்கள் அதை கவனிக்கலாம். அப்போது ஒரு வீரரின் உடல் அசைவுகள் தெரியும்.

ஒரு பேட்ஸ்மேன் வழக்கமான நிலையில் விளையாடுகிறாரா? அல்லது நெருக்கடியில் இருக்கிறாரா? என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும். சோயிப் அக்தர் பயந்தார் என்று நான் சொல்ல மாட்டேன். சச்சின் டெண்டுல்கர் உள்பட பல முன்னணி பேட்ஸ்மேன்கள் அக்தரை எதிர்கொள்ளும் போது பேக்புட் செல்ல வேண்டியிருந்தது. உலக கோப்பையின் போது சச்சின் டெண்டுல்கர் சயீத் அஜ்மல் பந்தையும் எதிர்கொள்ள அஞ்சினார்.

இது பெரிய விஷயல்ல. வீரர்கள் நெருக்கடிக்குள்ளாகும் போது, எதிர்கொள்வது கடினமானதாகி விடும். அப்ரிடி இப்படி சொல்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, நான் ஸ்கொயர் லெக்கில் பீல்டிங் செய்த போது, சோயிப் அக்தர் பந்து வீசும் போது சச்சின் கால்கள் நடுங்கியதை நான் பார்த்தேன் எனக் கூறியிருக்கிறார்.

ஹோல்டர் 6 vs இங்கிலாந்து 204

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர் இதுவாகும்.3 போட்டிகளும் இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. மழையால் 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட தொடக்க நாளில் ஒரு விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது.முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 67.3 ஓவர்களில் 204 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாசன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளும், கேப்ரியல் 4 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. 18 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 1 விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்திருந்தது

 

 

 

இங்கிலாந்து அணி அபார வெற்றி!

தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில், இங்கிலாந்து அணி 189 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 269 ரன், தென் ஆப்ரிக்கா 223 ரன் எடுத்தன. 46 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 391 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்ததுதென் ஆப்ரிக்கா 137.4 ஓவரில் 248 ரன்னுக்கு 2வது இன்னிங்சை இழந்து 189 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ரபாடா 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் 3, ஆண்டர்சன், டென்லி தலா 2, பிராடு, பெஸ், கரன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 30 புள்ளிகளை தட்டிச் சென்றது. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது டெஸ்ட் போர்ட் எலிசபத்தில் ஜன. 16ம் தேதி தொடங்குகிறது.

இந்தியா அபாரம் !

இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. கவுகாத்தியில் கடந்த 5ம் தேதி நடைபெற இருந்த முதல் போட்டி மழை காரணமாக களம் ஈரமாக இருந்ததால் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இந்த நிலையில், 2வது டி20 போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர், ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது.

டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார்.இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன் குவித்தது. ஹசரங்கா 16 ரன் (10 பந்து, 3 பவுண்டரி), லாகிரு குமாரா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் 3, குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி தலா 2, சுந்தர், பூம்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இந்திய அணி 20 ஓவரில் 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியதுஇந்திய அணி 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது.

விராத் கோஹ்லி 30 ரன், ரிஷப் பண்ட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 போட்டி புனேவில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபில் குடும்பம்

சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, பாப் டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், என் ஜகதீசன், முரளி விஜய், ரிதுராஜ் கெய்க்வாட், தோனி, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், மோனு சிங் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், கரன் சர்மா, லுங்கி நிகிடி, தீபக் சாஹர், ஷார்துல் தாக்கூர், கேஎம் ஆசிப்

ஏலத்தில் வாங்கிய வீரர்கள்: பியுஷ் சாவ்லா (ரூ. 6.75 கோடி), சாம் கர்ரன் (ரூ.5.5 கோடி), ஜோஷ் ஹேசல்வுட் (ரூ.2 கோடி), ஆர் சாய் கிஷோர் (ரூ.20 லட்சம்)

மும்பை இந்தியன்ஸ் ஐபில் குடும்பம்

மும்பை இந்தியன்ஸ் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் : ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், க்வின்டன் டி காக், ஆதித்யா தாரே, அன்மோல்பிரீத் சிங், கீரான் பொல்லார்ட், இஷான் கிஷன், ஷெர்பேன் ரூதர்போர்டு, ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா, ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், அனுகுல் ராய், ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா, ட்ரெண்ட் போல்ட், தவால் குல்கர்னி, மிட்செல் மெக்லெனகன்

ஏலத்தில் வாங்கிய வீரர்கள்: நாதன் கோல்டர் நைல் (ரூ.8 கோடி), கிறிஸ் லின் (ரூ.2 கோடி), சௌரப் திவாரி (ரூ.50 லட்சம்), மொஹ்சின் கான் (ரூ.20 லட்சம்), திக்விஜய் தேஷ்முக் (ரூ.20 லட்சம்), இளவரசர் பல்வந்த் ராய் சிங் (ரூ.20 லட்சம்)