நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

1) ராமேஸ்வரம்,

2) திருராமேஸ்வரம்,

3) குருவிராமேஸ்வரம், 4) காமேஸ்வரம்,

ஆகிய நான்கும் சதுர்த்த ராமேஸ்வரம் எனப் போற்றப்படுகின்றன.
இந்த நான்கு திருத்தலங்களிலும் மகா கணபதிக்கான `சதுராவ்ருத்தி தர்ப்பணம்’ எனும் விசேஷமான பூஜையை, ஆகமப் பூர்வமாக அகத்தியரின் முன்னிலையில், ஸ்ரீராமபிரான் நிகழ்த்தியாக ஞானநூல்கள் சொல்கின்றன.

தொடர்ந்து நான்கு மாதங்கள்… ஒவ்வொரு மாதத்தின் அமாவாசை திதியில் ஒரு திருத்தலம் என்ற கணக்கில்,

ராமேஸ்வரம் தொடங்கி இந்த நான்கு தலங்களுக்கும் சென்று, இறை தரிசனத்தோடு பிதுர் வழிபாடு செய்து வருவது மிகவும் விசேஷம். இதனால், நமக்கும் நம் சந்ததியினருக்கும் சகல நன்மைகளும் உண்டாகும்.

1. ராமேஸ்வரம்

தென்னாட்டு புண்ணிய க்ஷேத்திரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராமேஸ்வரத்தின் மகிமைகளும் திருக்கதைகளும் நம்மில் பெரும்பாலானோர் அறிந்தவையே. ஆகவே, இத்தலம் குறித்த அபூர்வ தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

ஸ்ரீராமர் – சீதாதேவி இருவரும் ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்கு முன்பே, இந்தத் திருத்தலம் `அக்னித் தீர்த்த நீராடல்’ தலமாக, வெவ்வேறு திருப்பெயர்களில் பிரசித்தி பெற்றிருந்ததாம். இங்கிருந்து தனுஷ்கோடிக்குச் செல்லும் பாதையில், சுமார் 4 கி.மீ தொலைவில் கோயில் கொண்டிருக்கிறாள் நம்புநாயகி அம்பிகை. நம்பு, நம்பன், நக்கன் என்றால் ஈஸ்வரனையே குறிக்கும். இந்த நம்புநாயகி அம்மன் கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் ஜடாயு தீர்த்தம் உள்ளது. ஸ்ரீராமர் நீராடிய ஜடாயு தீர்த்தத்தின் மகத்துவத்தை சுகபிரம் மருக்கு வியாசர் விளக்கியுள்ளார். நம்புநாயகி அருளும் பூமியும், ஜடாயு தீர்த்தமும் ராமநாத சுவாமிப் பிரதிஷ்டைக்கும் மூத்தவை.

அதேபோல், ராமேஸ்வரம் சிவாலயத்தில் சேதுமாதவ பெருமாள் சந்நிதி அருகில் புண்ணிய தானேஸ்வரர், பாபபட்சேஸ்வரர் சந்நிதிகளும் உண்டு. ராமநாத ஸ்வாமியைத் தரிசிக்கச் செல்லும் அன்பர்கள், இந்த மூர்த்திகளையும் அவசியம் தரிசித்து வாருங்கள்.

கால விரயம், பொருள் விரயம் செய்ததால் ஏற் படும் பிரச்னைகளும், அறியாத வகையில் தவறான வழிகளில் பொருளீட்டியதால் ஏற்பட்ட பாவங்களும், பித்ரு தோஷங்களும் நீங்கிட ராமேஸ்வரம் சென்று வழிபடவேண்டும். இங்கு ஒரே நாளில் 32 தீர்த்தங்களில் நீராடுவது விசேஷம்.

2. திருராமேஸ்வரம்

மன்னார்குடி – திருத்துறைப்பூண்டி மார்க்கத் தில், சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ள திருத்தலம் திருராமேஸ்வரம். சீதாதேவிக்கு, அவள் மகா லட்சுமியின் அவதாரம் என்று ராமபிரான் உணர்த்திய திருத்தலம் என்பார்கள்.

திருமகள், சீதாலட்சுமியாக சிவலிங்க மூர்த்தத் துக்கு பூஜை செய்யும் அபூர்வ திருக்கோலத்தை இங்கே தரிசிக்கலாம். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், துவாதசி மற்றும் பஞ்சமி திதி நாள்களிலும், அனுஷ நட்சத்திர நாளன்றும், இங்கு உரலில் மஞ்சள் இடித்து மங்களாம்பிகைக்குச் சாற்றி வழிபடுவார்கள். இதனால் மங்கலகரமான வாழ்வு ஸித்திக்கும் என்பது நம்பிக்கை. சுவாமியின் திருப்பெயர் ஸ்ரீராமநாதஸ்வாமி. ஏமாந்து இழந்த பொருள் மற்றும் சொத்துகளை மீட்டெடுக்க அருள் வழங்கும் தலம் என்பார்கள் பெரியோர்கள். இங்கு, தீர்த்த நீராடல் விசேஷமானது.

3. குருவி ராமேஸ்வரம்

திருவாரூாிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது குருவி ராமேஸ்வரம்; கேக்கரை எனும் ஊர் வழியாகச் செல்லலாம். ஸ்ரீராமர், குருவிக்கு முக்தி தந்தத் தலம். இத்தலத்துக்கு திருப்பள்ளிமுக்கூடல் என்றும் திருப்பெயர் உண்டு. இங்கே அருள்பாலிக்கும் இறைவன் ஸ்ரீமுக்கோணநாதேஸ்வரர்; அம்பாளின் திருநாமம் ஸ்ரீஅஞ்சனாட்சி.

ஜடாயுவுக்கு அவரது முக்தியைக் குறித்து ஈஸ்வரன் எடுத்துரைத்த தலம் இது. அப்போது, ராவணனால் நான் மடிந்தால், புண்ணிய தீர்த்தங் களில் நீராடிய பலன் கிடைக்காமல் போகுமே’ என்று வருந்தினாராம் ஜடாயு. அவருக்காக இங்கே இறைவன் உருவாக்கிய தீர்த்தமே திருமுக் கூடல் தீர்த்தம் என்கின்றன ஞானநூல்கள்.

ராமாவதாரத்துக்கு முன்பே ராம நாமத்தை ஜபித்து வாழ்ந்தவர்கள் `ராமகே(தி)’. இவர்கள் திரேதா யுகத்தில் பல்லாயிரக்கணக்கில் வசித்த `ராமகே’ எனும் இடமும் கயாவுக்குச் சமமாகப் போற்றப்படும் கேக்கரையும் குருவி ராமேஸ்வரத் தின் அருகிலிருப்பது விசேஷம்.

4. காமேஸ்வரம்

நாகப்பட்டினம் – வேதாரண்யம் இடையே அமைந்திருக்கிறது, காமேஸ்வரம். புனிதமான அரிச்சந்திரா நதி, கடலில் கலக்கும் பிதுர்முக்தி பூமி காமேஸ்வரம். சிவாலயம், விஷ்ணு ஆலயம் இரண்டும் அமைந்த க்ஷேத்திரம்.

இதன் தொன்மைப் பெயர் `ராமேஸ்வர ராமேஸ்வரம்’. பின்னர் காமேஸ்வரம் என்றாயிற்று. நல்லவிதமான விருப்பங்களுக்கு ‘காமம்’ என்று பொதுப்பெயர் உண்டு. அப்படியான நம்முடைய நல்ல விருப்பங்களை நிறைவேற்றும் திருத்தலம் இது என்றும் சொல்லலாம். அருள்மிகு காமேஸ் வரரும், காமாக்ஷி அம்பிகையும் அருளும் இந்தத் தலத்தில், திரேதா யுகத்தில் ராமனும், துவாபர யுகத்தில் கிருஷ்ணனும் வழிபட்டுள்ளார்கள். வாழ்வில் அறிந்தோ அறியாமலோ நாம் சொன்ன பொய்யுரைகளால் ஏற்பட்ட பாவங்கள், நமது வாக்கால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்குவதற்கு வழிபட வேண்டிய திருத்தலம் இது. இந்தக் காமேஸ்வரம் திருத்தலத்துக்குச் சென்று, அரிச்சந்திரா நதி கடலில் சங்கமமாகும் பகுதி யிலோ, காமேஸ்வரம் கடற்கரையிலோ நீராடுவ தால் சகல பாவங்களும் நீங்கும்; வாழ்க்கைச் செழிக்கும்.

விநாயக சதுர்த்தியை கொண்டாடிய பிரபலம்

சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்துடன் விநாயக சதுர்த்தியை கொண்டாடினார்

இன்றைய சிந்தனை

 

“உயிரை அழித்தலைத் தவிர்த்தல், கொடுக்கப்படாததை எடுக்காதிருத்தல், காமத்தில் தீய நடத்தையை தவிர்த்தல், பொய் கூறலை தவிர்த்தல், பேதமைக்கும், பொருப்பற்ற தன்மைக்கும் விதைதெளிக்கும் மதுபானம் அருந்துவதை தவிர்த்தல்.
ஆகிய இவையே தாராளச் செலவோடு புறநிலையில் செய்யப்படும்… எந்த யாகத்தை விடவும், தொடர்ந்து தானமளிப்பதை விடவும், பூதானம் அளிப்பதை விடவும், சடங்கு முறைகளை ஏற்றொழுகுவதை விடவும் சிறந்த யாகமாகும்”

– பேராசான் கௌதம புத்தர்

வைகாசி விசாக திருவிழா : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம்

 

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம்

விழாவில் பங்கேற்பதற்காக பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். ராமநாதபுரம், மதுரை, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 5 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோயிலில் பொது தரிசன வழி, சிறப்பு வழிகளில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

வார ராசி பலன் (17-05-2019 முதல் 23-05-2019 வரை )

கணித்தவர்

ஜோதிட ஆசிரியர்

ஜெ .முனிகிருஷ்ணன் .,M.E.,Diploma in Astrology


(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

நம்பியவர்களுக்கு எப்பொழுதும் உதவும் நற்குணமும் சிறிதளவு முரட்டுத்தனமும் கொண்ட மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு சுமாரான வாரம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இறக்கும் பொருள் சேர்க்கை ஏற்படும் போட்டி பந்தயங்களில் வெற்றி ஏற்படும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்

கணவன் மனைவி விட்டு  கொடுத்து செல்வது நல்லது கருத்துவேறுபாடு தோன்றி மறையும் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும் பயணத்தால் அலைச்சல் ஏற்படும் சகோதர உறவுகளில் சந்தோஷம் ஏற்படும்வழக்குகளில் வெற்றி ஏற்படும் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

 

(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பிறரை   தன்வசமாக்க கூடிய கவர்ச்சியும் சாமர்த்தியமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு எல்லாவிதத்திலும் மகிழ்ச்சி ஏற்படும் எதிரிகள் உங்களைவிட்டு விலகி செல்வார்கள் நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும் வீடு மனை யோகம் ஏற்படும் அலைச்சல் அதிகரிக்கும்

புதிய முயற்சிகள் கைகூடும் இல்லத்தில் சந்தோஷம் ஏற்படும் திருமண முயற்சிகள்  கைகூடும் கணவன் மனைவி வெளியில் சென்று சந்தோஷமடையும் வாரம் வம்பு வழக்குகளிருந்து விடுபடுவீர்கள் அனைவரிடத்திலும் நன்மதிப்பு உயரும் தொழில் மூலம் தனலாபம் ஏற்படும் இளைய சகோதரனிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

(மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பிறறை எளிதில் வசப்படுத்தும் பேச்சாற்றலும் நகைச்சுவை உணர்வும் கொண்ட மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு மிக சிறப்பான வாரமாக இருக்கும் அடுத்த முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி ஏற்படும் வியாபாரத்தில் ஏற்பட்ட மந்தமான நிலை மாறும் பொருளாதார வளர்ச்சியும் தன லாபமும் ஏற்படும் மனைவியால் மகிழ்ச்சி ஏற்படும்

சமுதாயத்தில் அந்தஸ்து உயரும் ரியல் எஸ்டேட் தரகு கமிஷன் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு லாபம் ஏற்படும் மேலதிகாரியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும் புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும் மிதுன ராசி அன்பர்கள் புகழின் உச்சியில் நின்று சந்தோஷம் காணவேண்டிய வாரம் இது

(புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

எந்த ஒரு காரியத்திலும் சுறு சுறுப்புடன் செயல்படும் கடக ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றும் வாரம் இது உங்கள் முயற்சிகளில் நல்ல பலனை அடைவீர்கள் புதிய ஒப்பந்தங்களில் லாபம் கிடைக்கும் தனவரவு சிறப்பாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சகோதர சசோகதரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் கால்நடை விவசாயம் மூலம் ஆதாயம் ஏற்படும் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் பணத்தட்டுப்பாடு குறையும் நீண்ட நாட்களாக இருந்த மனக்கவலை அகலும் தொழில் மேன்மை ஏற்படும் பேச்சில் கவனம் தேவை உடல் ஆரோக்கியம் பெருகும்

(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தலைமை பண்பும் புத்தி கூர்மையும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு வீட்டிலும் வெளியிலும் சந்தோஷமான நிலை ஏற்படும் தொழிலில் ஏற்பட்ட மனக்கசப்பு அகலும் பணியாளர்கள் ஆதரவு ஏற்படும் உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும்

பதவி உயர்வு ஏற்படும் பொன் பொருள் சேர்க்கை ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும் பூமி மூலம் லாபம் ஏற்படும் கணவன் மனைவி கருத்து வேறுபாடு சண்டை சச்சரவு ஏற்படும் பிள்ளைகள் சந்தோஷம் ஏற்படும் வம்பு வழக்குகளில் வெற்றி ஏற்படும் உடல் ஆரோக்கியம் பெரும் தாயாருக்கு உடல் ஆரோக்கிய குறைப்பாடு ஏற்படும் 

(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

மென்மையான குணமும் சுகபோக வழக்கை விரும்பம் கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு பல நமைகள் ஏற்பட்டாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை தனவரவு சிறப்பாக இருக்கும் பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் வேலை செய்யும் இடத்தில் வேலைச்சுமை அதிகமாக இருக்கும் சுபச்செலவு ஏற்படும்.

திருமண முயற்சி கைகூடும் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும் கல்வியில் மேன்மை ஏற்படும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்படும் கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும் தந்தைக்கு உடல் ஆரோக்கிய குறைபாடு ஏற்படும் அரசு சார்ந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்

(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

நீதி நேர்மைக்கு கட்டுப்படும் குணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும் மன குழப்பங்கள் ஏற்படும் தனவரவு இரண்டு மடங்கு உயரும் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் இளைய சகோதரன் மூலம் ஆதாயம் ஏற்படும்

உங்களுக்கு வரவேண்டிய பணம் உங்கள் கைக்கு வந்து சேரும் குல தெய்வ வழிபாடு செய்வதால் தடைகள் நீங்கும் நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள் தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை வீண் அலைச்சல் ஏற்படும் செய்தொழிலில் லாபம் ஏற்படும்

(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

நேர்மையும் பிடிவாத குணமும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு மனைவி மக்களால் சந்தோசம் ஏற்படும் பயணத்தில் கவனம் தேவை பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் வம்பு வழக்குகளில் வெற்றி ஏற்படும் இளைய சகோதரன் உறவு பலம்பெரும் சுபச்செலவு ஏற்படும்

பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் முயற்சித்த காரியங்களில் வெற்றி ஏற்படும் செய்தொழிலில் ஆதாயம் ஏற்படும் மேற்படிப்புக்கு வசதி ஏற்படும் உடல் ஆரோக்கியம் பெரும் மனக்கவலை நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள் எதிரிகள் தொல்லை நீங்கும் விருந்துகளில் கலந்துகொண்டு சந்தோஷம் காண்பீர்கள் சொத்து சுகம் ஏற்படும் 

(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தவறு செய்தவர்கள் தன் தவறை ஒப்புக்கொண்டால் மன்னிக்கும் குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு எதிரிகள் தொல்லை குறையும் தூர தேச பிரயாணத்தில் நன்மைகள் ஏற்படும் செய்தொழிலில் ஆதாயம் முன்னேற்றமும் ஏற்படும்     பொருள் சேர்க்கை தனவரவு ஏற்படும் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் வழக்குகளின் முடிவு திருப்திகரமாக இருக்காது குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சி ஏற்படும் புது மனை வீடு வாங்கும் யோகம் ஏற்படும் சுய சிந்தனை மேலோங்கும் கடவுள் பக்தி அதிகரிக்கும்

(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

கஷ்டப்பட்டவர்களுக்கு எப்போதும் ஆறுதலாக இருக்கும் மகர ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு மனைவி மக்களால் மகிழ்ச்சியும் நண்பர்களால் எதிர்பாராத நன்மையும் ஏற்படும் போட்டி பந்தயங்களில் வெற்றியும் பணவரவும் சிறப்பாக இருக்கும் பெரியோர்களின் ஆதரவும் கிடைக்கும் பூர்வீக சொத்தில் சிக்கல்கள் ஏற்படும் சாஸ்திர ஞானம் ஏற்படும்

மேலதிகாரிகளின் ஆதரவு ஏற்படும் பதவி உயர்வு ஏற்படும் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் பயணங்களை தவிர்க்கவும் தாய்மாமன் ஆதரவு கிடைக்கும் பேச்சில் கவனம் தேவை இல்லையெனில் பொருள் இழப்பு ஏற்படும் உஷ்ணமான நோய்கள் ஏற்படும் தயார் உடல் நிலையில் அக்கறை தேவை


(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

படார் என நேருக்கு நேர் உண்மையை பேசும் கும்ப ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு தொழில் மாற்றும் சிந்தனை மேலோங்கும் உயர் பதவி கிடைக்கும் சம்பள உயர்வு ஏற்படும் தனவரவு சிறப்பாக இருக்கும் நண்பர்களால் ஆதாயம் ஏற்படும் எதிர்பாராத வகையில் தாயார் அல்லது மனைவி வழி சொத்து கிடைக்கும்

ரயில்வே துறையில் பணிபுரிபவர்கள் மேன்மை அடைவார்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் போட்டி பந்தயங்களில் ஈடுபடவேண்டாம் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் தூர தேச பிரயாணத்தில் நன்மைகள் ஏற்படும்

(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

நேர்மையும் கொண்ட மீன ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு எதிரி தொல்லைகள் ஏற்படும் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம் மனக்கவலை ஏற்படும் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது பேச்சில் கவனம் தேவை

தாயார் மூலம் தனவரவு ஏற்படும் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அவமானங்கள் சந்திக்க நேரிடும் பிள்ளைகளால் சந்தோஷம் கணவன் மனைவி உறவுகள் சிறப்பாக இருக்கும் திருமண பேச்சு நல்ல முடிவுக்கு வரும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

சிந்தனை துளிகள்

சாய்பாபா  நற்சிந்தனைகள்

இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டது, தெய்வீக அருளைப் பெறுவதற்காகவே. அதனால்  இந்த உடல் நன்கு பராமரிக்கப்படவேண்டு;ம். சுத்தமாகவும், தூய்மையாகவும்,அழுக்கு, வியாதி, வருத்தம், தோல்வி மனப்பான்மை இவற்றால் பாதிக்கப்படாமலும் உடல் பாதுகாக்கப்பட          வேண்டும்.

நீங்கள் உடலல்ல. உடல் என்பது ஒன்பது துவாரங்களடங்கிய அழியும் பொருளாகும்.ஆகவே      இந்திரிய சுகத்தை புலனின்ப நுகர்ச்சியை நாடிச் செல்லாதீர்கள்.கடவைள நோக்கி மனதை திருப்புங்கள். அப்போது மனம் இயற்கையாகவே உலக இன்பத்தை நாடுவதை விட்டு விடும்.

பிறகு உங்கள் மனதின் மேல் நீங்கள் ஆதிக்கம் செலுத்துவது எளிதாகும்.புலன்களின் பேராசைக்கு இணங்குவதன் மூலம் ஒருவனுடைய ஆன்மீகபலமும், ஞானமும் படிப்படியாக மறைகின்றன. தீர்மானமான திட்டங்கள் மூலம் புலன்ஆசைகளை விட்டுவிட முயல வேண்டும்.ஆன்மீகப் பயிற்சிகளுக்கு இடைவேளை என்பதே கூடாது.

அப்படி விட்டுவிட்டுச் செய்யும் பயிற்சிகள், முந்தைய நல்ல பலன்களையும் அடித்துச் சென்று விடும்.அது மட்டுமின்றி உள்ளத்திலிருந்து துரத்தப்பட்ட எதிரிக்கு(தீயஎண்ணங்கள்) மீண்டும் நல்வரவு கூறுவதாக அமைந்துவிடும். சுயநலம், தியாகம் நிறைந்த தொடர்ந்த செயல்களால், மனம் தூய்மை அடைந்தாலன்றி இறைவனின் அருள் கிடைப்பதில்லை.

செல்வத்தை அதிகமாக சேர்ப்பதனால் ஏற்படும் துன்பங்களைப் பற்றி விவாதிப்பதன் மூலம் ஒருவன் பேராசையை விட்டுவிட முடியும்.வாழ்க்கையின் உண்மைகளை பற்றி ஆராய்ந்து தெளிவதன் மூலம் பயம் நீங்கும்.

ஆன்மீக உண்மைகளை கற்று அறிவதன் மூலம் வீண் புலம்பல்களையும் மாயையும் ஒருவன் வெல்ல முடியும்.தேவையுள்ள மனிதனுக்கு சேவை செய்வதன் மூலம் தற்பெருமை குறையும்.மௌனத்தின் மூலம் ஆன்மீகப் பாதையின் தடங்கல்களை நீக்கி வெற்றி பெறலாம்.

சமயத்தின் மையப்புள்ளி மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான உறவுபற்றியதாக இருக்கக் கூடாது, அது… மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு பற்றியதாக இருக்க வேண்டும்.
எல்லோரும் இன்புற்றிருக்கும் நோக்கில்… ஒருவர் மற்றொருவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்பிப்பதே சமயத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்”

– பேராசான் கௌதம புத்தர் –

கிருபானந்த வாரியார்-நற் சிந்தனைகள்

கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ அத்தனை பெரிய பாவம் இறைவனை நாள்தோறும் வணங்காததும் ஆகும். அதனால் தான் “என் கடன் பணி செய்து கிடப்பதே“ என்றார் அப்பர். இறைவன் தந்த உடம்பினால் அவனை வழிபடுவதை “அவனருளாலே அவன் தாள் வணங்கி“  என்கிறார் மாணிக்கவாசகர்.

இயேசுவின் பொன்மொழிகள்

மனிதனுக்குள்ளே இருந்து வெளிவரும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தி விடுகிறது. கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் பிறக்கின்றன. அவன் மனதில் கெட்ட எண்ணங்கள், பாலியல் குற்றங்கள், களவு, கொலை, விபசாரம், சுயநலம், தீயச் செயல்கள், பொய், பொறாமை, புறங்கூறுதல், பெருமை பேசுதல், மூடவாழ்க்கை போன்றவை தோன்றும். இத்தகைய கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் வருகின்றன. இத்தீயவையே மனிதனை மாசுபடுத்துபவை.வலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்கு காரணம். நாம் பலவீனமாக இருப்பதாலேயே பொய்யும் திருட்டும் ஏமாற்று வேலைகளும் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.

நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்!

எந்த மனிதனும் அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை. எந்த பூமியில் மரணமடைவோம்  என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. திண்ணமாக, இறைவன் தான் யாவற்றையும் நன்கு அறிபவனாகவும், தெரிந்தவனாகவும்  இருக்கின்றான்.

பொன்மொழிகள்:-

  1. துன்பப்படுவோர் மத்தியில், நாம் மகிழ்ச்சியாக வாழ்வது கொடுமையிலும் கொடுமை.

புத்தர்.

  1. இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய்.

அரிஸ்டாட்டில்.

  1. வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ வைப்பதில்தான் இருக்கிறது.

மெஹர்பாபா.

  1. உலகம் மிகப் பரந்தது. அதில் அவர்கள் முயற்சியைப் பொறுத்தும், திறமையைப் பொறுத்தும் எல்லோரும் முன்னேறுகின்றனர்.

ஐன்ஸ்டீன்

  1. தவறுக்கு வருந்தாதே. திருத்திக் கொள்வதில் வெட்கப்படாதே.

சாக்ரடீஸ்.

  1. எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே. உன் பணியை ஊக்கமுடன் செய்.

அரவிந்தர்.

  1. தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாத மனிதன் தனக்குள் உள்ள திறமையையும் வெற்றியாக மாற்ற முடியாது.

எட்கார் ஆலன்யோ.

  1. உன்னால் உன் இஷ்டப்படி வாழ முடியாவிட்டால் உன்னால் இயன்றதை வாழ்ந்து விடு.

கிரேஸியன்.

  1. யாரும் எதையும் சொல்லலாம். ஆனால் எல்லோருடைய சொல்லையும் நம்பாதீர்கள்.

மாண்டேயின்.

இறை சிந்தனை

“கடவுள் மிகவும் நல்லவர் என்றால்… பின் அவரால் படைக்கப்பட்ட மனிதர்கள் ஏன் கொலை காரர்களாக, திருடர்களாக, பொய்யர்களாக, தீயுரை புகலும் வீணர்களாக, பிறர்பொருள் கவர்பவர்களாக, தீய செயல் செய்பவர்களாக உறுவாகிறார்கள்?.
இதற்கும் கடவுள்தானே காரணமாக இருக்கவேண்டும், அனைத்தையும் ஆக்குபவர் எனப்படும் கடவுள் நல்லவராக இருந்தால்… இவ்வாறு நடக்க முடியுமா?”

– பேராசான் கௌதம புத்தர் –

சிந்தனை 07-05-2019

“கடவுள் எல்லாம் வல்லவராயும், அனைத்து படைப்புக்கும் காரணத்தராயும் இருந்து விடுவாரேயானால்… இதன் காரணமாக மனிதன் தானே எதையும் செய்ய முடியாதவனாகவும், ஆற்றலை பயன்படுத்த அவசியமற்றவனாகவும் ஆகிவிடுவானே?.
உலக விவகாரங்களில் பங்கேதுமற்ற, கீழ்ப்படிதலுள்ள அற்ப உயிராய் அல்லவா மனிதன் நீடிக்க வேண்டி வரும்? இதுதான் மனிதனின் நிலையெனில்… பிரம்மா ஏன் மனிதனைப் படைக்க வேண்டும்?”

– பேராசான் கௌதம புத்தர் –

புதன் அமைந்துள்ள திருக்கோவிலே திருவெண்காடு.

கல்விக்கு அதிபதியான  இக்கோவிலின் மூலவராக சுவேதாரண்யேஸ்வரரும் – பிரம்ம வித்யாம்பிகையும் வீற்றிருக்க புதன் பகவான் மக்களுக்கு காட்சியளிக்கின்றார்.
சலந்தரன் என்பவனுக்கு ஒரு மகன், மருத்துவன். அவன் இறைவனை நோக்கி தவம் செய்து சூலத்தை பெற்றான். அந்த சூலத்தால் நல்லது செய்யாமல் தேவர்களுக்கு தீங்கு விளைவித்தான் மருத்துவன். இதனால் கோபமுற்ற சிவபெருமான், நந்தியை அனுப்பி அவனை அழிக்கச் செய்தார். ஆனால் மருத்துவனோ நந்தியை சூலத்தால் தாக்க, நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் ஏற்பட்டது. பின்னர் சிவபெருமானே அகோர மூர்த்தியாய் தோன்றி மருத்துவனை அழித்தார் என்பது இக்கோவில் வரலாறு.

இங்கு மூர்த்திகள் மூன்று, தீர்த்தங்கள் மூன்று, தலவிருட்சங்கள் மூன்று. சிவன், நடராசர், வீரபத்திரர் ஆகிய மூன்று மூர்த்திகளும், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களும், வடவால், கொன்றை, வில்வம் என மூன்று தலவிருட்சங்களும் உள்ளன.
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்ற தலம் இது. காசிக்கு நிகரான திருத்தலம். காவிரி வடகரை கோவில்களில் பதினொன்றாவது கோவில் இது. மூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பிள்ளைப்பேறு நல்கும் தலம். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல், இங்கு வடவால் விருட்சத்திற்கு கீழ் ருத்ர பாதம் உள்ளது.
திருஞானசம்பந்தர் இக்கோவிலுக்கு வந்தபோது, அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தெரிந்ததாம், அவர் அம்மா என்றழைக்க, அம்பிகை அவரை இடுப்பில் சுமந்து கோவிலின் உள்ளே சென்றதாக வரலாறு உண்டு. இன்றும் இக்கோவிலில் சம்பந்தரை சுமந்திருக்கும் அம்பாளை பிரகாரத்தில் காணலாம்.

நவக்கிரகங்களில் ஒருவரான புதன், கல்விக்கு அதிபதி. இவரை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும், பீடை போகும், கவி பாடும் ஆற்றல் அதிகரிக்கும். புதனை வழிபடுவோம் என்றென்றும் ஆனந்தமாக இருப்போம்.
புதனுக்கு உகந்தவை:
ராசி : மிதுனம், கன்னி
அதி தேவதை : விஷ்ணு
நிறம் : வெளிர்பச்சை
தானியம் : பச்சைப்பயிறு
உலோகம் : பித்தளை
மலர் : வெண்காந்தள்
ரத்தினம் : மரகதம்
சமித்து:நாயுருவி

காயத்ரி மந்திரம்:
கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்.

எப்படி செல்வது?
இத்திருக்கோவில் சீர்காழியில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது.
• கும்பகோணம், சீர்காழி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து மூலம் செல்லலாம். மயிலாடுதுறையில் இருந்து
மங்கைமடம் செல்லும் பேருந்துகள் இக்கோவில் வழியாகச் செல்லும்.
• அருகில் உள்ள ரயில் நிலையம் – கும்பகோணம் 18 கி.மீ தொலைவில்.
• அருகில் உள்ள விமான நிலையம் – திருச்சி 96 கி.மீ தொலைவில்