விவேகானந்தரின் எழுச்சி உரை

நியூயார்க்
19.11.1894
என் வீர இளைஞர்களுக்கு,

அன்பு, நேர்மை, பொறுமை ஆகிய மூன்றும் இருந்தால் போதும் – வேறு எதுவும் தேவையில்லை. அன்புதான் வாழ்க்கையின் ஒரே நியதி. எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான். மற்றவர்களுக்கு நன்மை செய்வதுதான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமல் இருப்பதுதான் மரணம். என் இளைஞர்களே, அன்புடையவர்களைத் தவிர மற்றவர்கள் வாழ்பவர்கள் அல்லர். என் குழந்தைகளே! மற்றவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும் – மற்றவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும்; ஏழை எளியவர்கள், பாமரர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும் – மிகவும் மனம் உருக வேண்டும். மற்றவர்களின் நன்மையின் பொருட்டு உங்கள் இதயமே நின்று, மூளைக் குழம்பி, உங்களுக்குப் பைத்தியம் பிடிக்கும் என்ற நிலை வரும் வரையில் மற்றவர்களுக்காக நீங்கள் மனம் உருகுங்கள். பிறகு இறைவனின் திருவடிகளில் உங்கள் ஆன்மாவைச் சமர்ப்பியுங்கள். அப்போது உங்களுக்கு ஆற்றல் வரும், உதவி வரும், குறையாத ஊக்கம் வரும்.
முயற்சி செய்யுங்கள்! முயற்சி செய்யுங்கள்! – கடந்த பத்து ஆண்டுகளாக இதுதான் என் இலட்சியமாக இருந்து வந்தது. முயற்சி செய்யுங்கள்! – இதையே இப்போதும் நான் சொல்கிறேன்.

என்னைச் சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தபோதும், முயற்சி செய்யுங்கள்! என்று கூறினேன்; இப்போது ஒளி வருகின்ற வேளையிலும், முயற்சி செய்யுங்கள்! என்று அதையே நான் சொல்கிறேன். என் குழந்தைகளே! பயப்படாதீர்கள்! பணத்தால் பயனில்லை, பெயரால் பயனில்லை, புகழலால் பயனில்லை, கல்வியால் பயனில்லை – அன்பு ஒன்றுதான் பயன் தருகிறது; ஒழுக்கம் ஒன்றுதான் துளைக்க முடியாத சுவர்களையெல்லாம் துளைத்து நம்மை முன்னேறச் செய்கிறது. சுதந்திரம் இல்லாமல் எந்த வளர்ச்சியும் அடைய முடியாது. நமது முன்னோர்கள் ஆன்மிகச் சிந்தனைக்குச் சுதந்திரம் அளித்தார்கள். அதனால் அற்புதமான ஒரு மதம் நமக்குக் கிடைத்தது. ஆனால் அதே சமயம், அவர்கள் சமுதாயத்தின் கால்களில் கனத்த சங்கிலியைக் கட்டி வைத்தனர். அதனால் இப்போது நமது சமுதாயம் – ஒரு வார்த்தையில் சொல்வதானால் – மிகவும் பயங்கரமாகவும், காட்டுமிராண்டித்தனமானதாகவும் இருக்கிறது. இதற்கு மாறாக, மேற்கு நாடுகளில் சமுதாயத்தில் மக்களுக்கு எப்போதும் சுதந்திரம் இருந்து வந்திருக்கிறது; அவர்களுடைய சமுதாயத்தைப் பாருங்கள்! அதற்கு மாறாக அவர்களின் மதத்தையும் பாருங்கள்!

வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை சுதந்திரம். சிந்திக்கவும் பேசவும் சுதந்திரம் தேவைப்படுவதுபோல் உணவு, உடை, திருமணம் முதலிய ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர்களுக்குத் தீமை செய்யாத அளவில் மனிதனுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். இந்தியாவை உயர்த்த வேண்டும், ஏழைகளுக்கு உணவு தர வேண்டும், கல்வியைப் பரப்ப வேண்டும், சமுதாயத்தில் கொடுமைகளை அகற்ற வேண்டும். சமுதாயத்தில் கொடுமைகள் வேண்டாம்; ஒவ்வொருவருக்கும் இன்னும் அதிகமாக உணவு வேண்டும், இன்னும் அதிகமான வாய்ப்புகள் தர வேண்டும்! மற்றவர்களுக்குச் சுதந்திரம் அளிக்கத் தயாராக இல்லாதவனுக்கு, சுதந்திரம் பெறுவதற்குத் தகுதி கிடையாது. எல்லா அதிகாரங்களையும் ஆங்கிலேயர்கள் உங்களுக்கே தந்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். அதனால் என்ன ஆகும்? அந்த அதிகாரம், சாதாரண மக்கள் அதைப் பெறாமல் இருப்பதற்குத்தான் பயன்படும். அடிமைகள் மற்றவர்களை அடிமைப்படுத்துவதற்காகவே அதிகாரம் கேட்கிறார்கள். இந்தியாவில் இந்தியாவின் ஆன்மிகத்தைக் கொண்ட ஓர் ஐரோப்பிய சமுதாயத்தை உங்களால் உருவாக்க முடியுமா? முடியும், முடிய வேண்டும் என்பதுதான் என் நம்பிக்கை. எல்லோருக்கும் முக்தி உண்டு, எல்லோரும் சமம் என்று போதித்த பண்டைய ஆச்சாரியர்களான சங்கரர், இராமானுஜர், சைதன்யர் போன்றவர்களின் வழியில் சமுதாயத்தைப் புதுப்பிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

உங்களிடம் ஊக்கம் என்ற நெருப்பு பற்றி எரிய வேண்டும். பிறகு அதை எல்லா இடங்களிலும் பரப்புங்கள். வேலை செய்யுங்கள், வேலை செய்யுங்கள். மற்றவர்களை வழி நடத்திச் செல்லும்போது, நீ ஒரு வேலைக்காரன் போலவே நடந்துகொள். சுயநலம் இல்லாதவனாக இரு. உன்னுடைய நண்பன் மற்றொருவனைத் தனிமையில் திட்டுவதை ஒருபோதும் கேட்டுக்கொண்டிருக்காதே! எல்லையற்ற பொறுமையுடன் இரு. அவ்விதம் நீ செய்தால் உனக்கு வெற்றி நிச்சயம். மற்றவர்களின் நன்மைக்காக வேலை செய்வதுதான் வாழ்க்கையின் இலட்சியம். போலித்தனம் என்பது இருக்கக் கூடாது, பொய் கூடாது, போக்கிரித்தனம் கூடாது – இதைத்தான் நான் விரும்புகிறான். நான் எப்போதும் இறைவனையே நம்பி இருக்கிறேன்; பெயரும் புகழும் தேடிக்கொள்வதற்காகவோ, ஏன் பொதுநன்மைக்காகவோகூட, நான் போலியாக வாழ்ந்தேன் என்ற கறைபடிந்த மனசாட்சியுடன் இறந்துபோக நான் விரும்பவில்லை. ஒழுக்கக்கேடு என்ற மூச்சுக்காற்றுகூட வீசக் கூடாது; செயல்முறையில் குற்றத்தின் நிழல்கூடப் படியக் கூடாது.
சலனபுத்தி வேண்டாம், இரகசிய வித்தை என்ற அயோக்கியத்தனம் வேண்டாம், இருட்டில் செய்யும் எதுவும் வேண்டாம். என் வீரக் குழந்தைகளே, முன்னேறுங்கள். பணம் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி – உங்களுடன் மனிதர்கள் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி – முன்னேறிச் செல்லுங்கள்!

உங்களிடம் அன்பு இருக்கிறதா, இல்லையா? உங்களிடம் இறைவன் இருக்கிறாரா, இல்லையா? முன்னேறிச் செல்லுங்கள்! தொடர்ந்து முன்னேறுங்கள்! எதுவும் உங்களை எதிர்த்து நிற்க முடியாது! கவனமாக இருங்கள். உண்மைக்குப் புறம்பான எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருங்கள். உண்மையைவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள், நாம் வெற்றி பெறுவோம்; அது மெதுவாக இருக்கலாம், ஆனால் வெற்றி நிச்சயம். இந்தியாவின் எதிர்காலம் உங்களையே நம்பியிருக்கிறது. வேலை செய்துகொண்டே போங்கள்!

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

நலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்

1) ராமேஸ்வரம்,

2) திருராமேஸ்வரம்,

3) குருவிராமேஸ்வரம், 4) காமேஸ்வரம்,

ஆகிய நான்கும் சதுர்த்த ராமேஸ்வரம் எனப் போற்றப்படுகின்றன.
இந்த நான்கு திருத்தலங்களிலும் மகா கணபதிக்கான `சதுராவ்ருத்தி தர்ப்பணம்’ எனும் விசேஷமான பூஜையை, ஆகமப் பூர்வமாக அகத்தியரின் முன்னிலையில், ஸ்ரீராமபிரான் நிகழ்த்தியாக ஞானநூல்கள் சொல்கின்றன.

தொடர்ந்து நான்கு மாதங்கள்… ஒவ்வொரு மாதத்தின் அமாவாசை திதியில் ஒரு திருத்தலம் என்ற கணக்கில்,

ராமேஸ்வரம் தொடங்கி இந்த நான்கு தலங்களுக்கும் சென்று, இறை தரிசனத்தோடு பிதுர் வழிபாடு செய்து வருவது மிகவும் விசேஷம். இதனால், நமக்கும் நம் சந்ததியினருக்கும் சகல நன்மைகளும் உண்டாகும்.

1. ராமேஸ்வரம்

தென்னாட்டு புண்ணிய க்ஷேத்திரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராமேஸ்வரத்தின் மகிமைகளும் திருக்கதைகளும் நம்மில் பெரும்பாலானோர் அறிந்தவையே. ஆகவே, இத்தலம் குறித்த அபூர்வ தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

ஸ்ரீராமர் – சீதாதேவி இருவரும் ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்கு முன்பே, இந்தத் திருத்தலம் `அக்னித் தீர்த்த நீராடல்’ தலமாக, வெவ்வேறு திருப்பெயர்களில் பிரசித்தி பெற்றிருந்ததாம். இங்கிருந்து தனுஷ்கோடிக்குச் செல்லும் பாதையில், சுமார் 4 கி.மீ தொலைவில் கோயில் கொண்டிருக்கிறாள் நம்புநாயகி அம்பிகை. நம்பு, நம்பன், நக்கன் என்றால் ஈஸ்வரனையே குறிக்கும். இந்த நம்புநாயகி அம்மன் கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் ஜடாயு தீர்த்தம் உள்ளது. ஸ்ரீராமர் நீராடிய ஜடாயு தீர்த்தத்தின் மகத்துவத்தை சுகபிரம் மருக்கு வியாசர் விளக்கியுள்ளார். நம்புநாயகி அருளும் பூமியும், ஜடாயு தீர்த்தமும் ராமநாத சுவாமிப் பிரதிஷ்டைக்கும் மூத்தவை.

அதேபோல், ராமேஸ்வரம் சிவாலயத்தில் சேதுமாதவ பெருமாள் சந்நிதி அருகில் புண்ணிய தானேஸ்வரர், பாபபட்சேஸ்வரர் சந்நிதிகளும் உண்டு. ராமநாத ஸ்வாமியைத் தரிசிக்கச் செல்லும் அன்பர்கள், இந்த மூர்த்திகளையும் அவசியம் தரிசித்து வாருங்கள்.

கால விரயம், பொருள் விரயம் செய்ததால் ஏற் படும் பிரச்னைகளும், அறியாத வகையில் தவறான வழிகளில் பொருளீட்டியதால் ஏற்பட்ட பாவங்களும், பித்ரு தோஷங்களும் நீங்கிட ராமேஸ்வரம் சென்று வழிபடவேண்டும். இங்கு ஒரே நாளில் 32 தீர்த்தங்களில் நீராடுவது விசேஷம்.

2. திருராமேஸ்வரம்

மன்னார்குடி – திருத்துறைப்பூண்டி மார்க்கத் தில், சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ள திருத்தலம் திருராமேஸ்வரம். சீதாதேவிக்கு, அவள் மகா லட்சுமியின் அவதாரம் என்று ராமபிரான் உணர்த்திய திருத்தலம் என்பார்கள்.

திருமகள், சீதாலட்சுமியாக சிவலிங்க மூர்த்தத் துக்கு பூஜை செய்யும் அபூர்வ திருக்கோலத்தை இங்கே தரிசிக்கலாம். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், துவாதசி மற்றும் பஞ்சமி திதி நாள்களிலும், அனுஷ நட்சத்திர நாளன்றும், இங்கு உரலில் மஞ்சள் இடித்து மங்களாம்பிகைக்குச் சாற்றி வழிபடுவார்கள். இதனால் மங்கலகரமான வாழ்வு ஸித்திக்கும் என்பது நம்பிக்கை. சுவாமியின் திருப்பெயர் ஸ்ரீராமநாதஸ்வாமி. ஏமாந்து இழந்த பொருள் மற்றும் சொத்துகளை மீட்டெடுக்க அருள் வழங்கும் தலம் என்பார்கள் பெரியோர்கள். இங்கு, தீர்த்த நீராடல் விசேஷமானது.

3. குருவி ராமேஸ்வரம்

திருவாரூாிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது குருவி ராமேஸ்வரம்; கேக்கரை எனும் ஊர் வழியாகச் செல்லலாம். ஸ்ரீராமர், குருவிக்கு முக்தி தந்தத் தலம். இத்தலத்துக்கு திருப்பள்ளிமுக்கூடல் என்றும் திருப்பெயர் உண்டு. இங்கே அருள்பாலிக்கும் இறைவன் ஸ்ரீமுக்கோணநாதேஸ்வரர்; அம்பாளின் திருநாமம் ஸ்ரீஅஞ்சனாட்சி.

ஜடாயுவுக்கு அவரது முக்தியைக் குறித்து ஈஸ்வரன் எடுத்துரைத்த தலம் இது. அப்போது, ராவணனால் நான் மடிந்தால், புண்ணிய தீர்த்தங் களில் நீராடிய பலன் கிடைக்காமல் போகுமே’ என்று வருந்தினாராம் ஜடாயு. அவருக்காக இங்கே இறைவன் உருவாக்கிய தீர்த்தமே திருமுக் கூடல் தீர்த்தம் என்கின்றன ஞானநூல்கள்.

ராமாவதாரத்துக்கு முன்பே ராம நாமத்தை ஜபித்து வாழ்ந்தவர்கள் `ராமகே(தி)’. இவர்கள் திரேதா யுகத்தில் பல்லாயிரக்கணக்கில் வசித்த `ராமகே’ எனும் இடமும் கயாவுக்குச் சமமாகப் போற்றப்படும் கேக்கரையும் குருவி ராமேஸ்வரத் தின் அருகிலிருப்பது விசேஷம்.

4. காமேஸ்வரம்

நாகப்பட்டினம் – வேதாரண்யம் இடையே அமைந்திருக்கிறது, காமேஸ்வரம். புனிதமான அரிச்சந்திரா நதி, கடலில் கலக்கும் பிதுர்முக்தி பூமி காமேஸ்வரம். சிவாலயம், விஷ்ணு ஆலயம் இரண்டும் அமைந்த க்ஷேத்திரம்.

இதன் தொன்மைப் பெயர் `ராமேஸ்வர ராமேஸ்வரம்’. பின்னர் காமேஸ்வரம் என்றாயிற்று. நல்லவிதமான விருப்பங்களுக்கு ‘காமம்’ என்று பொதுப்பெயர் உண்டு. அப்படியான நம்முடைய நல்ல விருப்பங்களை நிறைவேற்றும் திருத்தலம் இது என்றும் சொல்லலாம். அருள்மிகு காமேஸ் வரரும், காமாக்ஷி அம்பிகையும் அருளும் இந்தத் தலத்தில், திரேதா யுகத்தில் ராமனும், துவாபர யுகத்தில் கிருஷ்ணனும் வழிபட்டுள்ளார்கள். வாழ்வில் அறிந்தோ அறியாமலோ நாம் சொன்ன பொய்யுரைகளால் ஏற்பட்ட பாவங்கள், நமது வாக்கால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்குவதற்கு வழிபட வேண்டிய திருத்தலம் இது. இந்தக் காமேஸ்வரம் திருத்தலத்துக்குச் சென்று, அரிச்சந்திரா நதி கடலில் சங்கமமாகும் பகுதி யிலோ, காமேஸ்வரம் கடற்கரையிலோ நீராடுவ தால் சகல பாவங்களும் நீங்கும்; வாழ்க்கைச் செழிக்கும்.

விநாயக சதுர்த்தியை கொண்டாடிய பிரபலம்

சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்துடன் விநாயக சதுர்த்தியை கொண்டாடினார்

வார ராசி பலன் 31-5-2019 முதல் 6-6-2019 வரை

வாரராசிபலன்

31-5-2019 முதல் 6-6-2019

கணித்தவர்

ஜோதிடஆசிரியர்

ஜே.முனிகிருஷ்ணன்.M.E.Astro

 

நம்பியவர்களுக்கு எப்போதும் உதவும் நற்குணமும் சிறிதளவு முரட்டுத்தனமும் கொண்ட மேஷ ராசிஅன்பர்களே

இந்த வாரம் உங்களுக்கு அமோகமானவாரமாக இருக்கும் தொட்டதெல்லாம் பொன்னாகும், செய்தொழிலில் மேன்மை மேல் அதிகாரிகளின் பாராட்டு மனதிற்க்கு மகிஷிச்சிகரமாக இருக்கும் பெற்றோர் ஆரோக்கியமாக இருப்பார்கள் அவர்களால் பொருள்சேரும் எடுத்த காரியங்களில் அனைத்திலும் வெற்றி எற்படும் செல்வாக்கு அதிகரிக்கும் வீடுமனை யோகம் எற்படும் ஆடைஆபரணங்கள் வாங்கி மகிஷ்வீர்கள் .

சமுதாயத்தில் உயர்நிலை அடைவீர்கள் பதவி உயர்வு கிடைக்கும் எதிரிகளின் சூஷ்ச்சிமறையும் கணவன் மனைவி உறவு மகிஷிச்சீகரமாக இருக்கும் வாரத்தின் பிற்பகுதியில் பண விரயம் எற்படும் வெளியூர் பயணத்தின் மூலம் ஆதாயம் எற்பட்டாலும் அலைச்சல் எற்படும் குடும்பத்தில் சுபகாரியங்கள் எற்படும் உறவினர்கள் வருகை மன மகிஷிச்சி தரும் சகோதரவஷியில் சந்தோஷம் எற்படும் பிள்ளைகளின் உயர்க் கல்விக்காக எடுத்த முயிற்சி நல்ல முன்னற்றம் காண்பிர்கள் .

 

கடினமான காரியங்களில் திட்டமிட்டு செய்யும் சக்தியும் மன உறுதியும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே

இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருந்தாலும் யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம் அதனால் அவமானங்கள் சந்திக்க நேரிடும் கோபத்தை குறைத்து கொண்டால் நினைத்த காரியத்தை சாதித்துகொள்ளலாம். உணவில் கவனம்தேவை இல்லையேனில் உடலில்சிறு சிறு உபாதைகள் எற்பட்டு விடும். ஒரு சிலருக்கு பணத்ததட்டுப்பாடுபண இஷாப்பும் எற்படலாம்.வெளியூரில் இருந்து மனதிற்க்குசந்தோஷமான செய்தி வந்து விடும். ஒரு சிலருக்கு பணத் தட்டுபாடு, பண இஷப்பும் எற்படலாம் ,வெளியூரில் இருந்து மனதிற்கு சந்தோஷமான செய்தி வந்துவிடும், செய்ந்தோஷிலில் இடையூறுகள் எற்படும் . ஒரு சிலருக்கு பணத்தட்டுபாடும் பண இஷப்பும் எற்படலாம் வெளியூரில் இருந்து மனதிற்கு சந்தோஷமான செய்திவந்துவிடும் செய்தோஷிலில் இடையூறுகள் எற்படும் எச்சரிக்கைடன் பஷாக வேண்டும்.

குடும்பத்தில் மனநிம்மதி கிடைக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள் வண்டி வாகன யோகம் எற்படும் ,பிள்ளைகளால் மகிஷிச்சி எற்படும் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் எற்படும் கணவன் மனைவி சிறப்பாக உறவு  இருக்கும் விருந்துகளில் கலந்து கொண்டு சந்தோஷத்தை காணப்பீர்கள்.

எடுத்த காரியத்தைம் கொடுத்தவாக்கையும் காப்பாற்றும் குணம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே

இந்த வாரம் உங்களுக்கு ஒரு வீதத்தில் சிறப்பானவாரமாக இருக்கும் வெளியூர் பிரயானைங்களில் நல்ல பலன் கிடைக்கும்,தனவரவுசிறப்பாக இருக்கும் மேலதிகாரிகள் சீற்றத்துக்கு ஆளாக நேரிடும் வாகனத்தில் செல்லும் போது கவனத்துடன் செல்ல வேண்டும் இல்லையெனில் சிறு சிறு விபத்துகள் நேரிடும் போட்டி பந்தயங்களில் மூலம் லாபம் அடைவீர்கள் வசகுகள் திருப்திகரமாக இருக்காது குடும்பத்தினர்களால் நன்மை ஏற்படும் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள் மனைவி மக்களால் நல்ல காரியங்களில் கைகூடும், புரியதொஷில் தொடங்க வாய்ப்பு எற்படும். கல்வியில் முன்னேற்றம் எற்படும் மர சிற்ப கலைஞரகள் மேன்மை அடைவார்கள் பிள்ளைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் மூத்த சகோதர அதரவு கிடைக்கும் வண்டி வாகனம் மூலம் ஆதாயம் எற்படும். அரசுவேளையில் இருப்பவர்கள் மேன்மை அடையவர்கள் பிள்ளைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் .மூத்த சகோதரரை அதரவு கிடைக்கும். வண்டிவாகனம் மூலம் ஆதாயம் எற்படும் அரசுவேலையில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள் கலைதுரைனர் முன்னேற்றம் அடைவார்கள் இந்தவாரம் மன உறுதியுடன் இந்தவாரம் மன உறுதியுடன் செயல்பட்டால் எல்லாம் நல்லவிதமாக முடியும்.

 

எதிலும் அறிவார்ந்த செயலும் கலங்கி வருபவர்களுக்கு கவலைகளைதீர்க்கும் குணம் கொண்ட கடக ராசி அன்பர்களே

இந்தவாரம் உங்களுக்கு செலவீனங்கள்கட்டுக்குள் அடங்கி மனநிம்மதி ஏற்படும் ,குடும்பத்தில் மனமகிழ்ச்சி நிலவும் ,தெய்வ பக்தியில் ஈடுபாடு ஏற்படும் பண வரவு சிறப்பாக இருக்கும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் இல்லையெனில் பொருள்விரயங்களை சந்திக்க நேரிடும் ,மனைவி மக்களால் நல்ல மகிழ்ச்சி ஏற்படும், நண்பர்களால் எதிர்பாராத உதவி ஏற்படும் போட்டி பந்தயங்களில் வெற்றி அடைவீர்கள் ,வெளியூர் பயணத்தில் நல்ல லாபம் பெறுவீர் மறைமுக எதிரிகள் தொல்லை ஏற்படும் ,சந்தர்பத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளவேண்டும் ,எதிரிகளால் ஏற்படும் இடையூர்களால் கூட நல்ல நன்மையே ஏற்படுத்தும் ,திருமண பேச்சு கைகூடிவரும் ,மக்கள்பேறு ஏற்படும் ,புதுமனை வாங்கும் சந்தர்ப்பம் ஏற்படும் ,அலுவகத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும் .

 

எந்த வேலையும் முதல் முறையிலேயே முடிக்க வேண்டும் என நினைக்கும் குணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே

இந்தவாரம் உங்களுக்கு பணவரவு இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும் ,மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் ,செய்தொழிலில் தடங்கலும் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படும் ,வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படும் ,அது உங்கள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் முக்கிய பங்கு வகிக்கும் பதவி உயர்வு ஏற்படும் ,அரசாங்கத்தால் லாபம் ஏற்படும் ,அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள்  ,உயர்கல்வி படிக்கும் எண்ணம் ஏற்படும்,தாயார் மூலம் தன ஆதாயம் ஏற்படும் ,கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும் ,மக்களால் மகிழ்ச்சியும் ஆதரவும் கிடைக்கும் ,நிறைந்த மன நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும் ,எதிர்பாராத வகையில் பொருள் வரவும் ,சமுதாய அந்தஸ்தும் பெறுவீர்கள் ,வீண் அலைச்சலும் வேலைக்கு உணவு உண்ண முடியாமையும் ஏற்படும்,பெண் நண்பர்களால் சொத்து கிடைக்கும் ,உறவினர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் தேவை ,இல்லையெனில் சண்டை சச்சரவு ஏற்படும்

 

எந்த விதமான சிரமங்களையும் சமாளித்து வாழ்வில் வெற்றி கனியை சுவைக்கும் கன்னி ராசி அன்பர்களே

இந்த வாரம் உங்களுக்கு ஆரம்பத்தில் மனக் கவலையும் ,பணநஷ்டமும் ஏற்படும் ,புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் ,எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் ,வயிறுக்கோளாறு எதிரிகளால் தீமை ஏற்படும் ,வாரத்தின் பாதியில் சிறந்த பலனையும் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும், எதிர்பாராத வகையில் பொருள் வரவும் ,நண்பர்கள் உறவினர்கள் ஆதரவும் கிடைக்கும் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும் வெளியூர் பயணத்தில் நல்ல பலனும் தன வரவு ஏற்படும் ,   மனைவி மக்களால் மகிழ்ச்சியும்  ,மனநிம்மதியும் ஏற்படும், எதிரிகள் தொல்லை அகலும் ,பிரபலமானவர்கள் சந்திப்பு ஏற்படும் ஆடம்பர செலவு செய்தாலும் ,விருந்துகள் பண்ணி வைப்பதும் ,சுபகாரியம் ஒன்று நடத்திவைப்பதும் ஏற்படலாம் ,பதவிமாற்றமோ அல்லது பதவி உயர்வோ ஏற்படும் ,காதல் விவகாரங்கள் கைகூடும் ,நீண்டநாள் எதிர்பார்த்த சொத்து ஒன்று உங்களுக்கு கிடைக்கும் ,வேண்டாவெறுப்புடன் செய்யும் காரியங்களில் கூட நன்மை ஏற்படும்                                                     

வெள்ளை  மனம்  கொண்ட  யாரையும்  எளிதில்  நம்பிவிடும்  துலாம்  ராசி  அன்பர்களே

இந்த வரம் உங்களுக்கு  பெண்களால்  மகிழ்ச்சியும்  பொருள்  சேர்க்கையும்  ஏற்படும்  பெரியவர்களின்  பாராட்டையும்  நன்  மதிப்பையும்  பெறுவீர்கள்

வெளியூரில் இருந்து  நல்ல  செய்தி  வந்து  சேரும் புதிய  முயற்சியில்  ஈடுபடாமல்  இருப்பது  நல்லது மறைமுக  ஏதிரிகளின்  தொல்லை  ஏற்படும்  பயணகளில் பொருள்  சேதம் ஏற்பட்டாலும்  கவலைப்பட  கூடிய  அளவு  ஏதும்  நேராது உறவினர்கள்  நண்பர்கள்  ஆதரவும்  ஏற்படும்  உடலில் சிறு சிறு  தொந்தரவு  ஏற்பாடு தீரும்  கணவன்  மனைவி  உறவு  சுமுகமாக  இருக்கும் கூட்டு  தொழிலில்  அதிக  லாபம்  ஏற்படும் அதற்க்கான   வாய்ப்புகள்  ஏற்படும்  சந்தர்ப்பத்தை  நழுவவிடாது  முன்  எச்சரிக்கையுடன்  நடந்து  கொண்டால் வாழ்நாள்  முழுவதும்  ஒரு  குறையும்  வராது வீட்டில் மங்களகரமான  நிகழ்ச்சி  நடைபெறும்

எல்லோரிடமும் நல்ல பெயர் சம்பாதிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே

 

இந்த வாரம் உங்களுக்கு சிறு சிறு தொல்லைகள் ஏற்பட்டாலும் பொருளாதாரத்துறையில்  முன்னேற்றமும் மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும் ,ஆடல்பாடல்களில் மனம் ஈடுபடும் ,பொருள் சேர்க்கை ஏற்படும் ,மனதிற்கு பிடித்தவருடன் வெளியே சென்று மன மகிழ்வீர்கள் ,ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள் ,பெண்களால் மகிழ்ச்சி போட்டி பந்தயங்களில் வெற்றியும் ,வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவு ஏற்படும் ,எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து அதில் அதிக நன்மை அடையலாம் ,காதலில் வெற்றி ஏற்படும் ,எப்போதும் இல்லாத துணிவு ஏற்படும் ,கடன் தொல்லை ஏற்படும் குடும்பத்தினர் உங்கள் செயலுக்கு உறு துணையாக இருந்து உங்கள் முன்னேற்றத்திற்கு வழி செய்வார்கள் ,குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் ,பூமியோகம் ஏற்படும

உழைப்பின்  மூலமாக  மட்டுமே  புகழை  அடைய  விருப்பும்  குறிக்கோளுடன்  வாழ்ந்து  வாழ்க்கையை  எடுத்துக்காடாக வாழும்  தனுசு  ராசி  அன்பர்ளே

இந்த வரம் உங்களுக்கு  மனக்கவலை  பொருள் நஷ்டம்  வீன்  தொல்லைகள்  ஏற்படும் மனைவி  மக்களால்  மன மகிழ்ச்சி அடைவீர்கள்  அவர்களால்  பண  தட்டுப்பாடு  குறைவும் .பொருளாதார  முன்னனேற்றம் ஏற்படும் புதிய  நண்பர்கள்  மூலம் லாபம்  ஏற்படும்  நிறைந்த  மன  மகிழ்ச்சி  ஏற்படும்  வெளியூர்  பயணங்களில்  மூலம்  ஆதாயம்  ஏற்படும் வீட்டில் சுபச்செலவுகள்  ஏற்படும்  திருமணம்  கைகூடும் எடுத்த  காரியங்கள் வெற்றி  அடையும் .மற்றவர்களின்  உதவியை எதிர்பார்க்க  வேண்டிய  அவசியம்  இருக்காது  உடல் ஆரோக்கியத்தில்

அக்கரை  வேண்டும்  செய்  தொழிலில் துணிவு பிறகும்  பல  முன்னேற்றங்கள் ஏற்படும்  பெரியவர்கள்  சந்திப்பும்

ஆதரவும்  கிடைக்கும்  சொத்துகள்  சம்மந்தமான  வழக்குகள்  ஏற்படும் உறவினர்களிடம் சச்சரவு  உண்டாகும் சமுதாய  அந்தஸ்து அரசியலில்  ஈடுபாடும்    முன்னேற்றத்தை ஏற்படுத்தும்

உள்ளங்கள்  கலங்கினாலும்  தன்னுடைய  வசீகர  சிரிப்பில்  மற்றவர்களை  கவரும் முக  அமைப்பு  கொண்ட  மகர  ராசி  அன்பர்களே !

இந்த வாரம்  உங்களுக்கு  வீடு  மனை  யோகம்  உண்டாகும் பூமி  சம்மந்தமான  பேச்சு  வார்த்தை வாங்கவோ  விற்கவோ  எடுத்த  முயற்சி  கைகூடும் வண்டி  வாகனம்  தொழில்  முன்னேற்றம் ஏற்படும் எதிரிகளின்  தொல்லை  குறையும்  உடல்  ஆரோக்கியம்  பெறும்  பயணங்களில்  கவனம்  தேவை  அரசியல்  விவரகளில் தலையிடாமல்  இருப்பது  நல்லது வெளியில் தொல்லை ஏற்பட்டாலும்  குடும்பத்தில்  சந்தோழம்  ஏற்படும்  ஏதிரிகள்  நண்பர்களாக  மறுவார்கள்  புதிய ஆடை ஆபரணம்  வாங்க  வழி  ஏற்படும் கணவன்  மனைவி  உறவு  மகிழ்ச்சி  தரும் .எடுத்த  காரியங்கள்  அனைத்தும்  வெற்றி  அடையும் .

எவருக்கும் அஞ்சாமல் உண்மை பேச்சும் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே

இந்த வாரம் உங்களுக்கு தூரதேசப்பயணமும் ,அதன் மூலம் நன்மைகளும் ஏற்படும் ,வீண் மனக்கவலை அடிக்கடி தோன்றும் ,பணத்தட்டுப்பாடு இருக்காது ,எப்படியாவது பணம் வந்து கொண்டே இருக்கும் ,பொருள் வரவு ,ஆடை அணிகலன்கள் ,நண்பர்கள் உறவினர்கள் ஆகியோருடன் சுவையான விருந்து முதலியவை ஏற்படும் ,கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்,எதிர்கால வாழ்க்கை முன்னேற்ற தேவையான வழிவகைகள் ஏற்படும் ,கால்நடை மூலம் லாபம் ஏற்படும் ,விவசாய முயற்சிகள் கைகூடும் ,வீடு மனை யோகமும் ,பொன் பொருள் வாங்கவோ விற்கவோ ஏற்றமான வாரம் கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கி முன்னேற்றம் காண வேண்டிய வாரம் ,குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் ,செய்தொழிலில் சிறு தடங்கல் ஏற்படலாம்

குடும்ப  பெருமையை  காப்பாற்றும்  குணமும்  பெரியவர்களை  மதிக்கவும்  சமூதாய  முன்னேயிற்றதுக்கு  பாடுபடும்  மீன  ரசி  அன்பர்களே :

இந்த வரம் ஒரு இனம்  புரியாத  மனநிம்மதி  எற்படும்  கவலை குறையும்  எதிர்பாராத  வகையில்  பணம் வரும்  உத்தியோகம்  பார்ப்பவருகளுக்கு  மேலதிகாரிகளின்  ஆதரவும்  உதவியும் கிடைக்கும்  வீட்டிலும்  வெளியிலும்  கௌரவம்  புகழ்  மனமகிழ்ச்சி  ஆகியவை  உண்டாகும்  ஆனால்  பணம்  விரையம்  ஏற்படும்  போட்டி  பந்தயங்களில்  ஈடுபடாமல்  இருப்பது  நல்லது  செய்தொழிலில்  பாராட்டும்  பதவி  உயர்வு  ஏற்படும்  ஏதிரிகள்  பனிவார்கள்  அவர்களால்  உதவியும்  நன்மையும்  ஏற்படும்  கூட்டு வியாபாரத்தில்  முனேற்றம்  ஏற்படும்  திருமணமகாதவர்களுக்கு  திருமண  முயற்சி  கைகூடும் இளைய  சகோதரன்  மூலம்  மன  சங்கடங்கள்  ஏற்படும்   தாயார்  ஆரோக்கியம்  பெறுவார்

 

வார ராசி பலன் ( 24-05-2019 முதல் 30-05-2019 வரை)

வார ராசி பலன்( 24-05-2019 முதல் 30-05-2019  வரை)

கணித்தவர் ஜோதிட  ஆசிரியர்

ஜெ.முனிகிருஷ்ணன்.,M.E.,D.Astro.,

(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மேஷ ராசி அன்பர்களே !

இந்த வாரம் உங்களுக்கு மிக சிறப்பான வாரமாக இருக்கும்,வீண் அலைச்சலுக்குப் பிறகே எடுத்த முயற்சிகளில் வெற்றி ஏற்படும்,திடீர் பணவரவு உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். மனைவி மக்களால் மகிழ்ச்சியும், உறவினர்கள் நண்பர்களால் எதிர்பாராத உதவியும் கிடைக்கும். ஆரோக்கியமும், பொருள் சேர்க்கையும் ஏற்படும்.

எதிரி தொல்லை நீங்கும், நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். கல்வி கேள்விகளில் மனம் ஈடுபடும், வெளியூர் பிரியாணங்களின் மூலம் நல்ல ஆதாயம் ஏற்படும். விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் வெற்றி வாகை சூடுவார்கள். பெரியோர் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

வயிற்றுக் கோளாறு நோய்கள் ஏற்படும்.உணவு கட்டுப்பாடு வேண்டும், குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும், பெற்றோர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் அவர்களால் பொருள் ஆதாயம் ஏற்படும்.

(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)சமாதானத்தையும், அமைதியையும் விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே :-

இந்த வாரம் உங்களுக்கு பிள்ளைகளால் சந்தோஷம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம், சகோதர வழியில் ஆதாயம், வண்டி வாகன யோகம் ஏற்படும், பூமி யோகம் ஏற்படும். பேச்சில் கவனம் தேவை. அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகும். பிரயாணங்களினால் ஆதாயம் ஏற்படும்.

தன வரவு சிறப்பாக இருக்கும், மனைவியால் சந்தோஷம் ஏற்படும். உறவினர் உதவி கிடைக்கும், பிள்ளைகளின் கல்விக்காக எடுத்த முயற்சி வெற்றியைத் தரும், மாணவர்கள் கல்விக்காக எடுத்த முயற்சிகளில் மேன்மை அடைவார்கள். யாரிடம் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம், தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

துணிவுடன் செய்யும் காரியங்களில் வெற்றி ஏற்படும். திருமணமாக வேண்டியவர்களுக்குத்  திருமணப் பேச்சுக்கள் நடைபெறலாம், ஒரு சிலருக்கு திருமணமும் நடைபெறலாம். தெய்வ பக்தியில் மனம் ஈடுபடும்.

(மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)எடுத்த காரியத்தையும் கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் மிதுன ராசி அன்பர்கள்.

இந்த வரம் உங்களுக்கு சுமாரான வாரமாக இருக்கும், எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை, புதிய ஒப்பந்தங்கள், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவேண்டும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டி வரும் தனவரவு சிறப்பாக இருக்காது. பிடிவாத குணம் நிரம்பி இருக்கும் இதனால் எதிர்பாராத நன்மை ஏற்படும், புதிய தொழில் தொடங்க நல்ல வாய்ப்பு ஏற்படும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவு ஏற்படும் கல்விக்காக எடுத்த முயற்சிகளில் தடை, தாமதம் ஏற்படும், இளைய சகோதரனிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவி கருத்து வேறுபாடு ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும், புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.                                                                                                                                                                                                                               -(புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் கடகராசி அன்பர்களே !

இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும், வாழ்க்கையிலும், வழக்கு முதலியவற்றிலும் வெற்றி ஏற்படும். செலவுகளைக் கட்டுக்குள் அடக்கி மன நிம்மதி ஏற்படும். தெய்வ பக்தியில் ஆர்வம் ஏற்படும். உங்களுக்கு இந்த வாரம்  சிறு சிறு தடைகள், குழப்பங்கள் ஏற்பட்டாலும் நல்ல பலனை சுவைப்பீர்கள்.

பெரியோர் பாராட்டையும் அவருடைய நன் மதிப்பையும் பெறலாம் பெண்களால் மகிழ்ச்சி ஏற்படும். போட்டி பந்தயங்களில் வெற்றி ஏற்படும். பொருள் சேர்க்கை ஏற்படும். கணவன் மனைவியிடையே சந்தோஷம் ஏற்படும். தனலாபமும் ஏற்படும். பதவி உயர்வு, அரசாங்கத்தால் லாபம் ஏற்படும்.

ஆசிரியர்கள் மேன்மை அடைவார்கள் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் நினைத்த பாடப்பிரிவில் சேர்வார்கள். தர்ம சிந்தனை மேலோங்கும். செல்வ செல்வாக்கு அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் பெறும்.

(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)எதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும்  ஈடுபடும் சிம்ம ராசி அன்பர்களே!

இந்த வாரம் உங்களுக்கு, மனைவி மக்களால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும் வாரமாக இருக்கும். விரோதிகள் நண்பர்களாக மாறுவார்கள் வீடுமனை வாங்குதல் கைகூடும் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் ஏற்படும் செய்தொழிலில் அதிக நன்மை ஏற்படும் பதவி    உயர்வு, வேலை மாற்றம் ஏற்படும்.  பொருளாதார முன்னேற்றமும் மன மகிழ்ச்சிக்கான நிகழ்வுகளும் ஏற்படும். புதிய நண்பர்கள், ஆடல் பாடல்களில் மனம் ஈடுபடும். வெளியூர் பிரயாணங்களில் நல்ல பலன் கிடைக்கும். வாரத்தின் இறுதியில் புதிய முயற்சி, புதிய ஒப்பந்தம் போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பது நல்லது,

மனநிம்மதி தொட்டதெல்லாம் பொன்னாகும். செல்வாக்கு அதிகரிக்கும் புகழ் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். மொத்தத்தில் சமுதாய அந்தஸ்து பெறுவீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். குழந்தையில்லாதவர்களுக்கு பிள்ளைப்பேறு ஏற்படும்.

(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)முன் வைத்த காலை பின் வைக்காமல் வெற்றி நடை போடும் கன்னி ராசி அன்பர்களே !

இந்த வாரம் உங்களுக்கு வீட்டில் மகிழ்ச்சியும், மன அமைதியும், மனைவி மக்கள் ஆதரவும் இருந்து வரும், எதிர்பார்த்த இடங்களில் உதவி கிடைக்காவிட்டாலும், எதிர்பாராத உதவி கிடைக்கும் புதிய நண்பர்களால் நன்மைகள் ஏற்படும்.

நீங்கள் எதிர்பார்த்த காரியங்களில் எதிர்மறையான முடிவு ஏற்படும். எதிரிகள் எதிர்ப்பு விலகும், வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பெண்களால் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் பிரயாணங்களில் தனவரவு நல்ல ஆதாயம் கிடைக்கும்.போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

இளைய சகோதரனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை பங்காளிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. அரசாங்கத்தால் லாபம் ஏற்படும். வழக்குகளில் நல்ல முடுவு ஏற்படும்.

(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)வெள்ளை மனம் கொண்டு எளிதில் யாரையும் எதிலும் நம்பி விடும் பழக்கம் உடைய துலா ராசிஅன்பர்களே !

இந்த வாரம் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கான வழிவகைகள் ஏற்படும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் விவசாயிகளுக்கு நல்ல பலன் ஏற்படும், மனையோகம் ஏற்படும், வழக்குகளில் நல்ல திருப்பம் ஏற்படும், புதிய நண்பர்கள் மூலம் லாபம் பெறுவீர்கள்.

மனைவி மக்கள் மகிழ்ச்சி ஏற்படும் வண்ணம் நடந்து கொள்வார்கள். அவர்களால் பணத் தட்டுப்பாடு குறையும், தொழிலில் ஏற்பட்ட வீண் அலைச்சல் குறையும், எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள், வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை காதலில் வெற்றி ஏற்படும்.

எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து அதில் அதிக நன்மை அடைவீர்கள். முன் கோபம் காரணமாக நெருங்கிய நண்பரிடம் விரோதம் ஏற்படும். குழந்தை பாக்கியம் ஏற்படும் சாஸ்தர ஞானம் ஆன்மீக சிந்தனை சிறப்பாக இருக்கும்.

(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)எல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடும் விருச்சிகராசி அன்பர்களே !

இந்தவாரம் உங்களுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், பல வகையில் மேன்மை ஏற்படும். உறவினர்கள் நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள், புத்திரர்களால் சந்தோஷம் பணத்தட்டுப்பாடு குறையும், தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை, எதிரிகளின் தொல்லை நீங்கும்.       கடன் சுமை குறையும், வீண் விவாதங்கள் செய்வதை தவிக்கவும் இல்லையெனில் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் சுப விரயம் ஏற்படும். செய்தொழிலில் மாற்றம் ஏற்படும். வழக்குகளில் ஒரு திருப்பம் ஏற்படும், தெய்வ பக்தியில் மனதை செலுத்தினால் மன சஞ்சலம் தீரும்.    பூர்விகசொத்தில் இருந்த சிக்கல் விலகும்,. மனைவி மக்களால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வீடுமனை வாங்கும் நிலை ஏற்படும். வீட்டில் சுபநிகழ்ச்சி உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

                                      (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)உழைப்பின் மூலமாக மட்டுமே புகழை அடைய விரும்பும் தனுசு ராசி அன்பர்களே !

இந்த வாரம் உங்களுக்கு, எல்லாவிதத்திலும் முன்னேற்றமான வாரமாக இருக்கும். நண்பர்களும், எதிரிகளும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். மறைமுகமான எதிர்ப்புகள் குறையும். செய்தொழிலில் ஆதாயமும் முன்னேற்றமும் ஏற்படும். மனைவிமக்களிடையே மன மகிழ்ச்சியும் ஏற்படும்.

எதிர்பாராத வகையில் பூமியோகம் ஏற்படும். பொருள் சேர்க்கை ஏற்படும். வீட்டிலும், வெளியிலும், கெளரவம் புகழ், மன மகிழ்ச்சியும் உண்டாக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். எதிர்கால வாழ்க்கை முன்னேற்றத்திற்கான வழிவகைள் ஏற்படும். போட்டிபந்தயங்களில் வெற்றி ஏற்படும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்

தாயார் உடல் நலனில் கவனம் தேவை. சகோதர வழியில் மேன்மை ஏற்படும். விருந்துகள் நடத்தவும், விருந்துகளை அனுபவிக்கவும் வேண்டிய சந்தர்ப்பங்கள் உண்டாகும். எதற்காகவும் பிறர் தயவை நாட வேண்டிய அவசியம் இருக்காது எதிரிகள் மறைவார்கள், கடவுள் பக்தி அதிகரிக்கும்.

(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)மனசாட்சிக்கு விரோதமான காரிங்களை செய்யாத மகர ராசி அன்பர்களே !

இந்த வாரம் உங்களுக்கு நண்பர்களால் நன்மை ஏற்படும். வழக்குகளில் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான காரியங்கள் நடைபெறும். புதுமனை நிலம், வீடு வாங்க சந்தர்ப்பம் ஏற்படும். ஆரோக்கியம் அபிவிருத்தியடையும், பொருள் சேர்க்கையும்,

வாகனப் பிராப்தியும் ஏற்படும். கணவன் மனைவி உறவு மகிழிச்சிகரமாக இருக்கும். வீட்டிலும், வெளியிலும், கெளரவம் புகழ், மகிழ்ச்சியும் ஏற்படும். பணம் விரயம் ஏற்பட வாய்ப்புள்ளது. கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வண்டி வாகனத்தில் கவனத்துடன் செல்லவும்.

பெரியோர்களின் சந்திப்பு, உதவியும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்பு ஏற்படும். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. ஆடை ஆபரணங்கள் வாங்கி சந்தோசம் அடைவீர்கள். குடும்பத்தில் நிலவிய மனஸ்தாபம் விலகும். செய்தொழிலில் பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

இந்த வாரம் உங்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத வகையில் வருந்தத்தக்க நிகழ்ச்சி நடைபெறலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண்பிடிவாதத்தை விட்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும்.    கணவன் மனைவி உறவு மன நிம்மதியை அளிப்பதாகஇருக்கும். பேச்சில் கவனம் தேவை வேண்டும். மற்றவருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்க்க, அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும், ஆசிரியர்கள், வங்கியில் வேலை செய்பவர் மேன்மை அடைவார்கள்.

அடுத்தவர் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பது நல்லது. குழப்பங்கள் நீங்க தெய்வவழிபடு நல்ல மன மாற்றத்தை தரும். தாயாரின் உடல் நிலையில் ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். பிள்ளைகளால் சந்தோசம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த பாடப்பிரிவில் சேர்வார்கள்.

(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாத மீனம் ராசி அன்பர்களே !

இந்த வாரம் உங்களுக்கு, அந்தஸ்து கெளரவம், புகழ் முதலியவற்றில் சிறப்பு ஏற்படும் வாரமாக இருக்கும். தர்ம சிந்தனையும் தர்ம காரியங்களில் ஈடுபடும் எண்ணம் ஏற்படும். பிள்ளைகளால் மகிழிச்சி ஏற்படும். குடும்பத்தினரிடம் கோபம் கொள்வதை தவிர்க்கவும்.

இளைய சகோதரனிடம் வாக்கு வாதம் ஏற்படும், இதனால் பிரிவினை ஏற்பட வாய்ப்புயுள்ளது வீட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சமுதாய தொடர்பு சிறப்பாக இருக்கும். மனைவி வழி சொந்தங்கள் மூலம் லாபம் பெறுவீர்கள்.

நீண்ட நாள் அவதிப்பட்ட நோயிலிருந்து விடுபடுவீர்கள், மனக்குழப்பங்களும் மனசஞ்சலமும் ஏற்படும். புதிய தொழில் தொடங்க இது நல்ல நேரம் இதன் மூலம் லாபம் அடைவீர்கள் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும், திருமணமுயற்சி கைகூடும்.

இன்றைய சிந்தனை

 

“உயிரை அழித்தலைத் தவிர்த்தல், கொடுக்கப்படாததை எடுக்காதிருத்தல், காமத்தில் தீய நடத்தையை தவிர்த்தல், பொய் கூறலை தவிர்த்தல், பேதமைக்கும், பொருப்பற்ற தன்மைக்கும் விதைதெளிக்கும் மதுபானம் அருந்துவதை தவிர்த்தல்.
ஆகிய இவையே தாராளச் செலவோடு புறநிலையில் செய்யப்படும்… எந்த யாகத்தை விடவும், தொடர்ந்து தானமளிப்பதை விடவும், பூதானம் அளிப்பதை விடவும், சடங்கு முறைகளை ஏற்றொழுகுவதை விடவும் சிறந்த யாகமாகும்”

– பேராசான் கௌதம புத்தர்

வைகாசி விசாக திருவிழா : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம்

 

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம்

விழாவில் பங்கேற்பதற்காக பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். ராமநாதபுரம், மதுரை, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 5 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோயிலில் பொது தரிசன வழி, சிறப்பு வழிகளில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு

வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு போடுவது மட்டுமே*

அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்

பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான்.

முடி வெட்டுவதில் இருந்த, மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன.

வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது.இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா? என்பது நமக்கு தெரியாது.

பொதுவாக வெற்றிலை பாக்குசுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறு சுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும் சொல்லும் போது உடம்பில் உள்ள “வாதம்,பித்தம், கபம் (சிலேத்துமம்)” போன்றவைகள் சரியான விகிதத்தில்      இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது, என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும்.

இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) உடம்பிற்கு வருகிறது.இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால்

இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.

தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்டதீய பழக்கமாகும்.இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடியஅபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும். சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.

ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது.இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது. தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது.

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.காரணம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை. இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

வார ராசி பலன் (17-05-2019 முதல் 23-05-2019 வரை )

கணித்தவர்

ஜோதிட ஆசிரியர்

ஜெ .முனிகிருஷ்ணன் .,M.E.,Diploma in Astrology


(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

நம்பியவர்களுக்கு எப்பொழுதும் உதவும் நற்குணமும் சிறிதளவு முரட்டுத்தனமும் கொண்ட மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு சுமாரான வாரம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இறக்கும் பொருள் சேர்க்கை ஏற்படும் போட்டி பந்தயங்களில் வெற்றி ஏற்படும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்

கணவன் மனைவி விட்டு  கொடுத்து செல்வது நல்லது கருத்துவேறுபாடு தோன்றி மறையும் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும் பயணத்தால் அலைச்சல் ஏற்படும் சகோதர உறவுகளில் சந்தோஷம் ஏற்படும்வழக்குகளில் வெற்றி ஏற்படும் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

 

(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பிறரை   தன்வசமாக்க கூடிய கவர்ச்சியும் சாமர்த்தியமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு எல்லாவிதத்திலும் மகிழ்ச்சி ஏற்படும் எதிரிகள் உங்களைவிட்டு விலகி செல்வார்கள் நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும் வீடு மனை யோகம் ஏற்படும் அலைச்சல் அதிகரிக்கும்

புதிய முயற்சிகள் கைகூடும் இல்லத்தில் சந்தோஷம் ஏற்படும் திருமண முயற்சிகள்  கைகூடும் கணவன் மனைவி வெளியில் சென்று சந்தோஷமடையும் வாரம் வம்பு வழக்குகளிருந்து விடுபடுவீர்கள் அனைவரிடத்திலும் நன்மதிப்பு உயரும் தொழில் மூலம் தனலாபம் ஏற்படும் இளைய சகோதரனிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

(மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பிறறை எளிதில் வசப்படுத்தும் பேச்சாற்றலும் நகைச்சுவை உணர்வும் கொண்ட மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு மிக சிறப்பான வாரமாக இருக்கும் அடுத்த முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி ஏற்படும் வியாபாரத்தில் ஏற்பட்ட மந்தமான நிலை மாறும் பொருளாதார வளர்ச்சியும் தன லாபமும் ஏற்படும் மனைவியால் மகிழ்ச்சி ஏற்படும்

சமுதாயத்தில் அந்தஸ்து உயரும் ரியல் எஸ்டேட் தரகு கமிஷன் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு லாபம் ஏற்படும் மேலதிகாரியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும் புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும் மிதுன ராசி அன்பர்கள் புகழின் உச்சியில் நின்று சந்தோஷம் காணவேண்டிய வாரம் இது

(புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

எந்த ஒரு காரியத்திலும் சுறு சுறுப்புடன் செயல்படும் கடக ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றும் வாரம் இது உங்கள் முயற்சிகளில் நல்ல பலனை அடைவீர்கள் புதிய ஒப்பந்தங்களில் லாபம் கிடைக்கும் தனவரவு சிறப்பாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சகோதர சசோகதரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் கால்நடை விவசாயம் மூலம் ஆதாயம் ஏற்படும் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் பணத்தட்டுப்பாடு குறையும் நீண்ட நாட்களாக இருந்த மனக்கவலை அகலும் தொழில் மேன்மை ஏற்படும் பேச்சில் கவனம் தேவை உடல் ஆரோக்கியம் பெருகும்

(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தலைமை பண்பும் புத்தி கூர்மையும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு வீட்டிலும் வெளியிலும் சந்தோஷமான நிலை ஏற்படும் தொழிலில் ஏற்பட்ட மனக்கசப்பு அகலும் பணியாளர்கள் ஆதரவு ஏற்படும் உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும்

பதவி உயர்வு ஏற்படும் பொன் பொருள் சேர்க்கை ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும் பூமி மூலம் லாபம் ஏற்படும் கணவன் மனைவி கருத்து வேறுபாடு சண்டை சச்சரவு ஏற்படும் பிள்ளைகள் சந்தோஷம் ஏற்படும் வம்பு வழக்குகளில் வெற்றி ஏற்படும் உடல் ஆரோக்கியம் பெரும் தாயாருக்கு உடல் ஆரோக்கிய குறைப்பாடு ஏற்படும் 

(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

மென்மையான குணமும் சுகபோக வழக்கை விரும்பம் கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு பல நமைகள் ஏற்பட்டாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை தனவரவு சிறப்பாக இருக்கும் பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் வேலை செய்யும் இடத்தில் வேலைச்சுமை அதிகமாக இருக்கும் சுபச்செலவு ஏற்படும்.

திருமண முயற்சி கைகூடும் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும் கல்வியில் மேன்மை ஏற்படும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்படும் கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும் தந்தைக்கு உடல் ஆரோக்கிய குறைபாடு ஏற்படும் அரசு சார்ந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்

(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

நீதி நேர்மைக்கு கட்டுப்படும் குணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும் மன குழப்பங்கள் ஏற்படும் தனவரவு இரண்டு மடங்கு உயரும் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் இளைய சகோதரன் மூலம் ஆதாயம் ஏற்படும்

உங்களுக்கு வரவேண்டிய பணம் உங்கள் கைக்கு வந்து சேரும் குல தெய்வ வழிபாடு செய்வதால் தடைகள் நீங்கும் நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள் தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை வீண் அலைச்சல் ஏற்படும் செய்தொழிலில் லாபம் ஏற்படும்

(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

நேர்மையும் பிடிவாத குணமும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு மனைவி மக்களால் சந்தோசம் ஏற்படும் பயணத்தில் கவனம் தேவை பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் வம்பு வழக்குகளில் வெற்றி ஏற்படும் இளைய சகோதரன் உறவு பலம்பெரும் சுபச்செலவு ஏற்படும்

பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் முயற்சித்த காரியங்களில் வெற்றி ஏற்படும் செய்தொழிலில் ஆதாயம் ஏற்படும் மேற்படிப்புக்கு வசதி ஏற்படும் உடல் ஆரோக்கியம் பெரும் மனக்கவலை நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள் எதிரிகள் தொல்லை நீங்கும் விருந்துகளில் கலந்துகொண்டு சந்தோஷம் காண்பீர்கள் சொத்து சுகம் ஏற்படும் 

(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தவறு செய்தவர்கள் தன் தவறை ஒப்புக்கொண்டால் மன்னிக்கும் குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு எதிரிகள் தொல்லை குறையும் தூர தேச பிரயாணத்தில் நன்மைகள் ஏற்படும் செய்தொழிலில் ஆதாயம் முன்னேற்றமும் ஏற்படும்     பொருள் சேர்க்கை தனவரவு ஏற்படும் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் வழக்குகளின் முடிவு திருப்திகரமாக இருக்காது குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சி ஏற்படும் புது மனை வீடு வாங்கும் யோகம் ஏற்படும் சுய சிந்தனை மேலோங்கும் கடவுள் பக்தி அதிகரிக்கும்

(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

கஷ்டப்பட்டவர்களுக்கு எப்போதும் ஆறுதலாக இருக்கும் மகர ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு மனைவி மக்களால் மகிழ்ச்சியும் நண்பர்களால் எதிர்பாராத நன்மையும் ஏற்படும் போட்டி பந்தயங்களில் வெற்றியும் பணவரவும் சிறப்பாக இருக்கும் பெரியோர்களின் ஆதரவும் கிடைக்கும் பூர்வீக சொத்தில் சிக்கல்கள் ஏற்படும் சாஸ்திர ஞானம் ஏற்படும்

மேலதிகாரிகளின் ஆதரவு ஏற்படும் பதவி உயர்வு ஏற்படும் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் பயணங்களை தவிர்க்கவும் தாய்மாமன் ஆதரவு கிடைக்கும் பேச்சில் கவனம் தேவை இல்லையெனில் பொருள் இழப்பு ஏற்படும் உஷ்ணமான நோய்கள் ஏற்படும் தயார் உடல் நிலையில் அக்கறை தேவை


(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

படார் என நேருக்கு நேர் உண்மையை பேசும் கும்ப ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு தொழில் மாற்றும் சிந்தனை மேலோங்கும் உயர் பதவி கிடைக்கும் சம்பள உயர்வு ஏற்படும் தனவரவு சிறப்பாக இருக்கும் நண்பர்களால் ஆதாயம் ஏற்படும் எதிர்பாராத வகையில் தாயார் அல்லது மனைவி வழி சொத்து கிடைக்கும்

ரயில்வே துறையில் பணிபுரிபவர்கள் மேன்மை அடைவார்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் போட்டி பந்தயங்களில் ஈடுபடவேண்டாம் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் தூர தேச பிரயாணத்தில் நன்மைகள் ஏற்படும்

(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

நேர்மையும் கொண்ட மீன ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு எதிரி தொல்லைகள் ஏற்படும் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம் மனக்கவலை ஏற்படும் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது பேச்சில் கவனம் தேவை

தாயார் மூலம் தனவரவு ஏற்படும் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அவமானங்கள் சந்திக்க நேரிடும் பிள்ளைகளால் சந்தோஷம் கணவன் மனைவி உறவுகள் சிறப்பாக இருக்கும் திருமண பேச்சு நல்ல முடிவுக்கு வரும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை