அபினந்தன் நாளை விடுவிப்பு

நேற்று பாகிஸ்தான் விமானத்தை துரத்தி சென்ற இந்திய விமானம் சுட்டு விழ்த்த பட்டதில் இந்திய வீரர் அபினந்தன் பாகிஸ்தான் வீரர்களால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்தியா விமானி அபினந்தனை நாளை விடுவிக்க உள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அறிவித்து உள்ளார்.

கூட்டணி விவரம்

சமாஜ்வாடி கட்சியும் ,பகுஜன் சமாஜ் கட்சியும் மூன்று மாநிலங்களில் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 3 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சியும், எஞ்சிய 26 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி ஒரு தொகுதியிலும், பகுஜன் சமாஜ் கட்சி எஞ்சிய 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி 37 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், மாயாவதி கட்சிக்கு 38 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

டிஜிகாப் புதிய செயலி

தற்போது அதிகரித்து வரும் செல்போன் திருட்டுகளை தடுக்கவும், தொலைந்து போன செல்போன்களை எளிய முறையில் கண்டுபிடிக்க உதவும் வகையில் “டிஜிகாப்” எனும் செயலி அறிமுகம் செய்யபட்டு உள்ளது என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்து உள்ளார்.”டிஜிகாப்” செயலியின் மூலம் செல்போன் திருட்டுகள் பெருமளவு குறையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

அதிபர் டிரம்ப் பரிந்துரை

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு அமெரிக்க கருவூலத்துறை அதிகாரி டேவிட் மல்பாஸ் என்பவரை அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்து உள்ளார். உலக வங்கியின் தலைவராக இருந்த ஜிம் யோங் கிம் தனது பதவியை ராஜினாமா செய்த பின் கிறிஸ்டினா ஜார்ஜியா அந்த பதவியை வகித்து வந்தது குறிப்பிடதக்கது.

அமெரிக்காவில் தமிழ் மொழி மாதம்

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள தமிழ் சங்கம் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவிக்க கோரிக்கை விடுத்து இருந்தது. அதனை ஏற்று உள்ள கரோலினா மாநில அரசு ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்து உள்ளது. அதற்கான ஆணையை மாநில ஆளுநர் ராய் கூப்பர் வெளியிட்டு உள்ளார்.