MS டோனி ஓய்வு?

டோனியின் எதிர்கால திட்டம் என்ன? என்பது குறித்து அவரது மானேஜரும், நண்பருமான மிஹிர் திவாகரிடம் கேட்ட போது, ‘நண்பர்களான நாங்கள் அவரது கிரிக்கெட் குறித்து பேசுவது கிடையாது. ஆனால் அவரை பார்க்கும் போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசித்த மாதிரி தெரியவில்லை. ஐ.பி.எல். போட்டியில் விளையாட அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். அதற்காக உண்மையிலேயே கடுமையாக உழைத்தார். ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு ஒரு மாதம் முன்னதாகவே அவர் சென்னை சென்று தனது பயிற்சியை தொடங்கியது எல்லோருக்கும்… Continue reading MS டோனி ஓய்வு?

பயனற்ற ஆளுநரின் உரை-டிடிவி தினகரன்

ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இல்லாத, மக்களுக்கு எந்தப் பயனும் தராத அறிவிப்புகளின் தொகுப்பாக ஆளுநரின் உரை அமைந்திருக்கிறது. தமிழக மக்களை வாட்டி வதைத்து வரும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான அறிவிப்புகளை வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது என்று  டிடிவி தினகரன்  தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

இங்கிலாந்து அணி அபார வெற்றி!

தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில், இங்கிலாந்து அணி 189 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 269 ரன், தென் ஆப்ரிக்கா 223 ரன் எடுத்தன. 46 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 391 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்ததுதென் ஆப்ரிக்கா 137.4 ஓவரில் 248 ரன்னுக்கு 2வது இன்னிங்சை இழந்து 189… Continue reading இங்கிலாந்து அணி அபார வெற்றி!

மு க ஸ்டாலின் கண்டனம்!

வேலூரில் @VelloreDmk-வை ஆளும்கட்சி மிரட்டியதுபோல், கோவையில் அரசு நிகழ்ச்சிக்குச் சென்ற @karthiknmla -வும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி MLA-க்களுக்கே இந்தக் கதி எனில் அப்பாவி மக்களின் நிலை? சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும்! என்று  மு க ஸ்டாலின் தனது ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்     

புதிய நீதிக்கட்சி 103வது பிறந்தநாள்(20.11.2019)! மு க ஸ்டாலின் வாழ்த்து!

வகுப்புவாரி பிரதிநிதித்துவம், சமூகநீதி, கல்வி வளர்ச்சியை தமிழர்களுக்கு கொடுத்த நீதிக்கட்சியின் 103வது பிறந்தநாள் இன்று! திமுக என்பது நீதிக்கட்சியின் நீட்சியே என்றார் பேரறிஞர் அண்ணா! அந்த இயக்கத்தின் கொள்கைகளை எந்நாளும் காப்போம்; நீதிக்கட்சித் தலைவர்களை வணங்குவோம் என்று  மு க ஸ்டாலின் தனது  ட்விட்டரில் புதிய நீதிக்கட்சியை தோற்றுவித்த தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து   நேற்று   பதிவிட்டுள்ளார்.  

உயர்த்தப்பட்ட சொத்துவரி நிறுத்திவைப்பு ! உள்ளாட்சித் தேர்தல்அறிவிப்பா ?

மக்களும் திமுக-வும் போராடியபோது, சொத்துவரியை குறைக்காத அதிமுக அரசு, ‘உள்ளாட்சித் தேர்தல்’ அறிவிப்பாக உயர்த்தப்பட்ட சொத்துவரியை நிறுத்தி வைத்துள்ளது. ‘அதிகப்படியான’ சொத்துவரி & ‘உயர்த்தப்பட்ட’ குடிநீர்க் கட்டணத்தைச் செலுத்தியவர்களுக்கு காசோலை / ரொக்கமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று மு க ஸ்டாலின் ட்விட்டரில்  தனது பதிவிட்டுள்ளார்

மறைமுகத் தேர்தல்? மு க ஸ்டாலின் சூளுரை !

அதிமுக-வை மக்கள் நிராகரிப்பார்கள் என்ற தோல்வி பயத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி & பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளனர். ஊழல் அதிமுக அரசிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி, வெற்றி வாகை சூடுவோம்! என்று மு க ஸ்டாலின் ட்விட்டரில்  தனது பதிவிட்டுள்ளார் 

மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் டிடிவி தினகரன் கருத்து

மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் என்பதே, தோல்வி பயத்தின் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கான பழனிசாமி அரசின் சதிதான், என்று தனது ட்விட்டரில் டிடிவி  தினகரன் பதிவிட்டுள்ளார் .

ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு நன்றி !

 உயர் திரு அய்யா பாலம் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு  நன்றி தெரிவித்து மு க ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்