பொங்கல் சிறப்பு பேருந்துகள்

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு 75% இருக்கை அனுமதியுடன் பொது பேருந்துகள் இயக்கம் சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2¸100 பேருந்துகளுடன்¸ 4000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10¸300 பேருந்துகளும்¸  பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6¸468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16¸768 பேருந்துகள் இயக்கப்படும். வழித்தட மாற்றம் முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி¸ நாசரத்பேட்டை¸… Continue reading பொங்கல் சிறப்பு பேருந்துகள்

கலைஞர் நினைவு நூலகம்

சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நூலகம் அமைக்கப்படவுள்ளது. இது கடந்த 2010 ஆம் ஆண்டு சென்னை¸ கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது போலவே தற்பொழுது தமிழகத்தின் பிற பகுதியில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் இந்நூலகம் மதுரையில் அமைக்கப்படவுள்ளது. கலைஞர் நினைவு நூலகம் ரூ.114 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

கிரீடம் 2021

கிரீடம் விருது வருடந்தோரும் ஹலோ எப்.எம் என்ற வானொலி நிலையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் ஆளுமை என்ற பிரிவின் கீழ் தமிழக முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ஹலோ எப்.எம் நேயர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது.  இவ்விருது  ஹலோ எப்.எம்-ன் தலைமை செயலாக்க அலுவலர் திரு.எஸ்.சுரேஷ் அவர்களால் (10.01.2022) அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கப்பட்டது.

கோவிட் -19 வேக்சின் பூஸ்டர் டோஸ்

இன்று தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்  சென்னை, காவேரி மருத்துவமனையில் பூஸ்டர் டோஸை செலுத்தி கொண்டார். பூஸ்டர் டோஸை அனைத்து முன்களப் பணியாளர்கள்¸ இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்!

வல்லரசுகள் மோதல்?

ரஷ்யாவுக்கும்¸ அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவு உக்ரைன் விவாகரத்தில் மோதலாக மாறிவுள்ளது. சோவியத் யூனியனாக இருந்தபொழுது அதன் ஒரு மாநிலமாக இருந்த உக்ரைன் பிரிந்து சென்று தனி நாடானது. இப்பொழுது தனி நாடாக உருவெடுத்து செயல்பட்டு வருகிறது. ரஷ்யா தனது படைபலத்தை அதன் எல்லையோரம் குவித்து வருகிறது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இது சம்பந்தமாக ரஷ்யா அதிபரும்¸ அமெரிக்கா அதிபரும் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஆனால்¸ இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ரஷ்யா… Continue reading வல்லரசுகள் மோதல்?

சாம்சங் இந்தியாவில் எப்பொழுது?

மொபைல் உற்பத்தியில் முன்னனி நிறுவனமாக விளங்கும் சாம்சங் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான கேலக்ஸி S21 FE 5G வருகிற ஜனவரி 10¸ அன்று அறிமுகம் செய்கிறது. சாம்சங் கேலக்ஸி S21 FE 5G  மாடலின் ஆரம்ப விலை ரூ.48¸000 ஆகும். இதில், 128 GB  ரூ.70¸000 ஆகவும்¸ 256 GB ரூ.75¸400 ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பு அம்சங்கள் : இதன் சிறப்பு அம்சங்கள் : சாம்சங் கேலக்ஸி S21 FE 5G  120… Continue reading சாம்சங் இந்தியாவில் எப்பொழுது?

எங்கே தவறு?

பாரத பிரதமர் மோடி அவர்கள் நலத்திட்டங்களை துவக்கி வைக்க பஞ்சாப் மாநிலம் சென்றார். விமானம் மூலம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்த இடத்துக்கு செல்ல இருந்த பிரதமர் அங்கு நிலவிய கடுமையான வானிலை மாற்றத்தால் விமானப் பயணத்தை ரத்து செய்து தரை வழி மார்க்கமாக செல்ல முடிவு செய்தனர். தரைவழி மார்க்கமாக சென்று கொண்டு இருந்தபோது அங்கு போராட்டம் நடைபெற்று கொண்டிருந்ததால் அங்கு செல்ல இயலவில்லை ஆதலால் தனது பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்பி விட்டார்.… Continue reading எங்கே தவறு?

பொய் சொன்ன கோலி?

கடந்த சில வாரங்களாக இந்தியக் கிரிக்கெட்டில் பலத்த விவாதங்களும்¸ சர்ச்சைகளும் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளன. இவற்றில் எது உண்மை எது பொய் என தெரியாமல் கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர். அதைப் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். விராத்கோலி தனது கேப்டன் பதவியை  தானாக முன்வந்து T20 உலக கோப்பைக்கு முன்பாகவே ராஜினாமா செய்தார். இந்தியா உலக கோப்பையில் தோல்வியைத் தழுவியது. கோலியும் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். யாரும் எதிர்பாராவிதமாக ஒருநாள் T20 க்கு… Continue reading பொய் சொன்ன கோலி?

இந்தியாவை எப்படி பார்க்கிறார்கள்?

கொரோனாவிற்கு பிறகு உலக நாடுகள் இந்தியாவை  எவ்வாறு பார்க்கின்றன என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.  2020-ல் இந்தியாவை பார்த்து பெருமைப்பட்டவர்கள் இன்று நம்மளை கண்டாலே தள்ளி நிற்கிறார்கள்,  இல்லை இல்லை கதவை மூடி விட்டார்கள்.  இதுதான் இன்றைய நமது நிலைமை கொரோனா ஆரம்பித்த காலத்தில் இந்தியாவில் ஒரு கொரோனா இல்லை.  உலக தொழில் அதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயாராக இருந்தார்கள்.  ஆனால் தற்போதைய நிலை என்ன?   முதலீடு வேண்டாம், என் வீட்டிற்கு வராதே என்று கதவை… Continue reading இந்தியாவை எப்படி பார்க்கிறார்கள்?

கொரானாவும் அரசியலும்?

கடந்த சில வருடங்களாக நம்மளை ஆட்டிபடுத்தி வரும் உயிர் கொல்லி நோயான கொரானாவுக்கு இன்னும் முடிவு கட்ட முடியவில்லை. உண்மையில் இது இயற்கையான ஒன்று நாம் தவிர்க்க இயலாதது. என்றால் அறிவியல் பொய் என்று அல்லவா ஆகிவிடும். மாற்றங்கள் மட்டுமே நிலையானது என்பது உண்மை. ஒவ்வொரு மாற்றத்துக்கு பிறகும் ஒரு தீர்வு கிடைக்கும். ஆனால் இந்த கொரானாவுக்கு கிடைக்காதா என்றால் இல்லை, ஏன் தீர்வு கிடைக்கவில்லை என்பது ஆட்சியாளருக்கு மட்டுமே வெளிச்சம். ஆரம்பத்தில் இருந்தே கவனக்குறைவு, தொலைதூரப்… Continue reading கொரானாவும் அரசியலும்?