மத்திய அரசின் அறிவிப்புக்கு கடும் கண்டனம்-டிடிவி

 

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவதோ இனிமேல் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் 

 

மேலும்  தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட வேளாண் பகுதிகளைச் சீரழித்துவிடும் ஆபத்து நிறைந்த இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும்  டிடிவி தினகரன் தனது ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்

திமுக வளர்பிறையா? தேய்பிறையா?

“திமுக வளர்பிறையா? தேய்பிறையா? ” என்று கேள்வி எழுப்பி அதற்கான விளக்கத்தை  புள்ளி விவரங்களுடன் முக ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

இந்தியா அபாரம் !

இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. கவுகாத்தியில் கடந்த 5ம் தேதி நடைபெற இருந்த முதல் போட்டி மழை காரணமாக களம் ஈரமாக இருந்ததால் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இந்த நிலையில், 2வது டி20 போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர், ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது.

டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார்.இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன் குவித்தது. ஹசரங்கா 16 ரன் (10 பந்து, 3 பவுண்டரி), லாகிரு குமாரா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் 3, குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி தலா 2, சுந்தர், பூம்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இந்திய அணி 20 ஓவரில் 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியதுஇந்திய அணி 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது.

விராத் கோஹ்லி 30 ரன், ரிஷப் பண்ட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 போட்டி புனேவில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

இந்து ரக்‌ஷா தளம் பொறுப்பு?

ஜேஎன்யுவில் நடந்த தாக்குதலுக்கு இந்து ரக்‌ஷா தளம் அமைப்பின்,  பூபேந்திர தோமர், பிங்கி சவுத்ரி ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.

தேச விரோத நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால்  அவர்களும் ஜேஎன்யு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்த அதேபோன்ற தாக்குதல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். ஜேஎன்யு கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்து வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாது’’ என்று  கூறியுள்ளார்.

பொங்கல் பரிசு!

தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 35 ஆயிரம் ரே‌ஷன் கடைகளில் நாளை (9-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் இரண்டு 500 ரூபாய் தாள்களாக வழங்க வங்கிகள் மூலம் பணம் எடுத்து ரே‌ஷன் கடை ஊழியர்கள் தயார் நிலையில் கையில் வைத்துள்ளனர்.

ரே‌ஷன் கடைகளில் தினசரி 250 முதல் 300 பேருக்கு தெரு வாரியாக பிரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) மூலமாகத் தான் பொங்கல் பரிசு வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு இல்லை என்றால் அந்த குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ‘ஒருமுறை கடவுச்சொல்’ அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபில் குடும்பம்

சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, பாப் டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், என் ஜகதீசன், முரளி விஜய், ரிதுராஜ் கெய்க்வாட், தோனி, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், மோனு சிங் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், கரன் சர்மா, லுங்கி நிகிடி, தீபக் சாஹர், ஷார்துல் தாக்கூர், கேஎம் ஆசிப்

ஏலத்தில் வாங்கிய வீரர்கள்: பியுஷ் சாவ்லா (ரூ. 6.75 கோடி), சாம் கர்ரன் (ரூ.5.5 கோடி), ஜோஷ் ஹேசல்வுட் (ரூ.2 கோடி), ஆர் சாய் கிஷோர் (ரூ.20 லட்சம்)

மும்பை இந்தியன்ஸ் ஐபில் குடும்பம்

மும்பை இந்தியன்ஸ் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் : ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், க்வின்டன் டி காக், ஆதித்யா தாரே, அன்மோல்பிரீத் சிங், கீரான் பொல்லார்ட், இஷான் கிஷன், ஷெர்பேன் ரூதர்போர்டு, ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா, ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், அனுகுல் ராய், ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா, ட்ரெண்ட் போல்ட், தவால் குல்கர்னி, மிட்செல் மெக்லெனகன்

ஏலத்தில் வாங்கிய வீரர்கள்: நாதன் கோல்டர் நைல் (ரூ.8 கோடி), கிறிஸ் லின் (ரூ.2 கோடி), சௌரப் திவாரி (ரூ.50 லட்சம்), மொஹ்சின் கான் (ரூ.20 லட்சம்), திக்விஜய் தேஷ்முக் (ரூ.20 லட்சம்), இளவரசர் பல்வந்த் ராய் சிங் (ரூ.20 லட்சம்)

கொல்கத்தா ஐபில் குடும்பம்

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் : ஷுப்மன் கில், சித்தேஷ் லாட், ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக், ரிங்கு சிங், நிதிஷ் ராணா, சுனில் நரைன், குல்தீப் யாதவ், ஹாரி கர்னி, லாக்கி பெர்குசன், கமலேஷ் நாகர்கோட்டி, சிவம் மாவி, பிரசீத் கிருஷ்ணா, சந்தீப் வாரியர்

ஏலத்தில் வாங்கிய வீரர்கள்: பாட் கம்மின்ஸ் (ரூ.15.5 கோடி), இயான் மார்கன் (ரூ.5.25 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ.4 கோடி), டாம் பான்டன் (ரூ.1 கோடி), ராகுல் திரிபாதி (ரூ.60 லட்சம்), பிரவீன் தம்பே (ரூ.20 லட்சம்), எம் சித்தார்த் (ரூ.20 லட்சம்), கிறிஸ் கிரீன் (ரூ.20 லட்சம்), நிகில் நாயக் (ரூ.20 லட்சம்)

ரஜினி-உதயநிதி மோதலா ?

ரஜினி ,”திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் சம்பந்தமாக வன்முறை வேண்டாம்” என தெரிவித்து இருந்தார் , அதற்கு  உதயநிதி அவர்கள் தனது ட்விட்டர்  பதிவில் “உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு வன்முறை” என்று அஞ்சும் வசதியான ,வயசான பெரியவர்களை பத்திரமாக வீட்டிலிலேயே விட்டு வரவும்  என்று பதிவிட்டுள்ளார் .