காவல்துறை பணியிடங்களுக்கான அறிவிப்பு

தமிழக சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நேற்று (06/03/2019) காவல்துறை, (இரண்டாம் நிலை காவலர் பணி), சிறைத்துறை (இரண்டாம் நிலை  சிறைத்துறை காவலர்), தீயணைப்பு துறையின் காலியிடங்களுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது. இதற்கான இணைய வழி விண்ணப்பம் தொடங்கும் நாள் 08/03/2019 (காலை 10.00 மணி முதல் தொடங்கும் ). மேலும் விவரங்களுக்கு www.tnusrbonline.org என்ற இணையதள முகவரியை காணவும்.

வேலைவாய்ப்பு செய்தி

மத்திய தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL ஜுனியர் டெலிகாம் ஆபிஸர் பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பதவிக்கு 198 காலி பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு 18 முதல் 30 வரை இருக்க வேண்டும் எனவும், கல்வி தகுதி BE அல்லது B.Tech என அறிவிக்கபட்டு உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 12.3.2019 ஆகும். மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள www.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீசஸ் நிறுவனத்தில் ஏர்க்கிராப்ட் மெயின்டென்அன்ஸ் பணிக்கு 70 காலிபணியிடங்கள் நிரப்பபட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி 11/02/2019 என அறிவிக்க பட்டுள்ளது.ஏர்க்கிராப்ட் மெயின்டென்அன்ஸ பிரிவில் ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிக்க வேண்டும். நேர்முக தேர்வின் மூலம் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள www.airindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

நான்கு இலட்சம் வேலைவாய்ப்புகள்

காலியாக உள்ள 2 லட்சத்து 82 ஆயிரம் இடங்கள் மற்றும் ஓய்வு பெறும் ஊழியர்கள் கணக்கின்படி மொத்தம் 4 லட்சம் பேர்  2021-ம் ஆண்டில் ரயில்வேயில் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளார். பல்வேறு பகுதிகளில் ஓடும் 22 முக்கிய ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை

இந்திய ரிசர்வ் வங்கியில் இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு எலக்ட்ரிகல், சிவில் பிரிவில் டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 27/01/2019 ஆகும். வயது வரம்பு 20_30க்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களை அறிந்து கொள்ள  www.rbi.org.in  எனும் இணையதளத்தை பார்க்கவும்.

இரயில்வேயில் 14033 பணியிடங்கள்

ரெயில்வேயில் 14033 பணியிடங்களுக்கான அறிவிப்பை RRB வெளியி்ட்டு உள்ளது. அதில் இளநிலை பொறியாளர், மெட்டலர்ஜிகல் அசிஸ்டன்ட் போன்ற பணி இடங்கள் நிரப்பபட உள்ளன. பொறியில், டிப்ளோமா முடித்தவர்கள் அந்தந்த துறைகளில் உள்ள பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்க பட்டு உள்ளது. 18 முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் 35,400 ரூபாய் முதல் வழங்கபடும் என தெரிவிக்கபட்டு உள்ளது. மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

சத்துணவு பிரிவில் காலி பணியிடம்

சென்னை மாநகராட்சி  சத்துணவு பிரிவில்  டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் நிரப்ப பட உள்ளது. அதற்கு இளங்கலை பட்ட படிப்புடன் தமிழ் இங்கிலீஷ் டைப் ரைட்டிங் தெரிந்து இருக்க வேண்டும் என கூறபட்டு உள்ளது. வயது 25 முதல் 35 க்குள் இருக்க வேண்டும் எனவும் கூறபட்டு உள்ளது. விண்ணப்பங்களை 28/1/2019 க்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்க பட்டு உள்ளது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள www.tnsocialwelfare.com எனும் இணையதளத்தை பார்க்கவும்.