ஜனவரி 15 வரை இக்ணோ அட்மிஷன்

இக்ணோ அட்மிஷன் ஜனவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்க பட்டு உள்ளதாக அதன் மண்டல இயக்குனர் கிஷோர் தெரிவித்து உள்ளார். இதில் MBA படிப்புக்கு நுழைவு தேர்வு இல்லாமல் மாணவர்கள் சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நிதி நிறுவனங்கள், வங்கிகளில் இரண்டு வருடம் பணியாற்றிய அனுபவம் தேவை. கூடுதல் விவரங்களை https://onlineadmission.ignou.ac.in  என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேர்தலுக்கு முன் முழுஆண்டு தேர்வுகள்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் பங்கு பெற்று பேசிய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பள்ளிகளில் தேர்வுகளை முடிப்பதற்கு பள்ளி கல்விதுறை நடைவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறியுள்ளார்.

2020 முதல் அனுமதி இல்லை?

நாடு முழுவதும் பொறியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் வரும் கல்வி ஆண்டு முதல் நிபுணர் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே கல்லூரிகளுக்கு  அனுமதி நீட்டிப்பு வழங்கப்படும் என ஏஐசிடிஇ-யால் தெரிவிக்கபட்டு உள்ளது. 2020 ஆம் ஆண்டு முதல் புதிய பொறியல் கல்லூரிகள் துவங்க அனுமதிக்க கூடாது என நிபுணர் குழு பரிந்துரைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள 3500 தொடக்க பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர்  தலைமை செயலகதில் உள்ள முதல்வர் தனி பிரிவில் மனு அளித்து உள்ளனர். அரசின் இந்த முடிவால் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்து உள்ளனர்.