தங்கத்தின் விலையில் ஏற்றமா?

தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. அக்டோபர் ,நவம்பர் மாதங்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து 29 ஆயிரத்தை தாண்டியும் குறைந்தும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. டிசம்பர் மாதத்திலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இரக்கமே நீடித்து வருகிறது.

பொருளாதார வளர்ச்சி குறித்து ஐஎச்எஸ் மார்க்கிட்’ நிறுவனம் கருத்து !

ஐஎச்எஸ் மார்க்கிட்’ நிறுவனம் கூறுகையில், முதல் காலாண்டில் 5 சதவீதமாக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் இரண்டாவது காலாண்டில் 4.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொழில்துறையில் தொடர்ந்து தேக்கநிலை காணப்படுகிறது. வங்கிகளின் வாராக்கடன் காரணமாகக் கடன் வழங்குவதை குறைத்துள்ளதால் நிதி சுழற்சி ஏற்படவில்லை. தொழில் செய்யப் பணம் இல்லாமல் சிறு வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் சிரமத்தைச் சந்தித்து வருகின்றன்றனர். பொருளாதார சுழற்சிக்காக வங்கி கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளபோதிலும் அதன் பயன் தொழில்துறைக்கு சென்று சேரவில்லை. இதனால் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை கூட எட்டுவது கடினம் தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்

இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் ஏற்றம் காணப்படுகிறது. இன்றைய காலை வர்த்தகத்தின்போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 140 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது. இதேபோல, தேசிய பங்குச் சந்தையிலும் இன்றைய காலை வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் நிஃப்டி 33 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது.

அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு மற்றும் பங்குச்சந்தைகளில் சாதகமான நிலை காரணமாக ஏற்றம் காணப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 24 பைசா அளவுக்கு வீழ்ச்சியடைந்து 69 ரூபாய் 78 காசுகளாக இருந்தது.

பங்குசந்தை உயர்வு

மும்பை பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ்  35756 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று மட்டும் 403.65 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து உள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 131 புள்ளிகள் உயர்ந்து  10735 புள்ளிகள் உடன் நிறைவு பெற்றது.

ரூபாய் 4 லட்சம் கோடி இழப்பு?

சர்வதேச சந்தையின் டாலரின் மதிப்பு நிலையான இடத்தைப் பிடித்து வருகிறது. ஆனால் ரூபாயின் மதிப்பு மிகவும் நிலையற்ற தன்மை அதிகரித்து வருகிறது.

நேற்றைய ஒருநாளில் மட்டும் முதலீட்டார்களுக்கு 4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. மொத்தம் 100 சதவீதத்தில் 2 சதவீதம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

மொத்தம் 754 புள்ளிகள் சரிந்து 34,001 புள்ளிகளில் முடிவுற்றது.

நிப்புப் புள்ளில் 321 புள்ளிகள் சரிந்து இறுதியில் 10,234 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது.

வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி அடிப்படையான தொழில்கள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன

ஒரே நாளில் 9200 கோடி ரூபாய் இழந்த இன்ஃபிபீம்

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று இந்திய பங்குச் சந்தையில் மற்றொருமுறை
வீசிய சூறாவளியில் சுமார் 9200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.


இந்திய பங்குச்சந்தையில் முதன்முறையாக பட்டியலிடப்பட்ட இணைய வழி வர்த்தக
நிறுவனம் இன்ஃபிபீம். வெள்ளியன்று மதியம் சுமார் மூன்றரை மணிக்கு பங்குச் சந்தை
வர்த்தகம் முடிந்தபோது, நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தவர்களுக்கு சுமார் 9,200 கோடி
ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
2009ஆம் ஆண்டு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு ஒரே நாளில்
குறைந்ததற்கு பிறகு, தற்போது இன்ஃபிபீம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில்
அதிரடியாக சரிந்துள்ளது. தோராயமாக 73 சதவிகித சரிவை சந்தித்துள்ளது.
சத்யம் நிறுவனம் பங்குச் சந்தையில் இழப்பை சந்தித்தபோது அதன் பங்கு மதிப்பு ஒரே
நாளில் 83 சதவிகித அளவு குறைந்துபோனது.
சனிக்கிழமையன்று இன்ஃபிபீம் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்
நடைபெறவிருந்தது. வியாழனன்று 197 ரூபாயாக இருந்த பங்கு மதிப்பு அடுத்த நாள் 59
ரூபாயாக வீழ்ச்சியடைந்தது.
வியாழனன்று, 13,105 கோடியாக இருந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 24 மணி
நேரத்திற்குள் மட்டுமே 3,900 கோடி ரூபாய் என்ற நிலைக்கு குறைந்துவிட்டது.

ரூபாயின் வரலாறு காணதவீழ்ச்சி மீண்டும் 28பைசா குறைந்தது.


அமெரிக்கடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 28பைசா மீண்டும் குறைந்து ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 72.23 ரூபாயக உள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணையின் மதிப்பு டாலர் 78 உள்ளது. செவ்வாய்கிழமை மீண்டும் 28பைசா குறைந்து உள்ளது.

செவ்வாய் மதியம் வரை ஒரு பீப்பாய் மதிப்பு டாலர் 78 உள்ளது. சர்வதேச குறியிடு 500 புள்ளிகள் குறைந்து உள்ளது.

செவ்வாய்கிழமை காலையில் அமெரிக்க டாலருக்கு ரூபாயின் மதிப்பு 20 பைசா உயர்வாக தொடங்கியது. ஆனால் மதியம் 28 பைசா குறைந்தது.

இருதியில் BSE குறியிடு 509.04 புள்ளிகள் அல்லது 1.34 சதவீதம் முடிவில் 37,413 புள்ளிகளாக முடிவடைந்தது.