இந்தியாவை எப்படி பார்க்கிறார்கள்?

கொரோனாவிற்கு பிறகு உலக நாடுகள் இந்தியாவை  எவ்வாறு பார்க்கின்றன என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.  2020-ல் இந்தியாவை பார்த்து பெருமைப்பட்டவர்கள் இன்று நம்மளை கண்டாலே தள்ளி நிற்கிறார்கள்,  இல்லை இல்லை கதவை மூடி விட்டார்கள்.  இதுதான் இன்றைய நமது நிலைமை கொரோனா ஆரம்பித்த காலத்தில் இந்தியாவில் ஒரு கொரோனா இல்லை.  உலக தொழில் அதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயாராக இருந்தார்கள்.  ஆனால் தற்போதைய நிலை என்ன?   முதலீடு வேண்டாம், என் வீட்டிற்கு வராதே என்று கதவை… Continue reading இந்தியாவை எப்படி பார்க்கிறார்கள்?

சென்னையில் பெண் தொழிலதிபர் தற்கொலை!

சென்னையில் பிரபல தொழிலதிபர் ரீட்டா மகாலிங்கம் தற்கொலை செய்து கொண்டார் ,இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை ,மேலும் தொழில் பிரச்சினையா அல்லது குடும்ப பிரச்சினையா என்று நுங்கம்பாக்கம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்

ஆட்டோமொபைல் துறை சரிவு ஏன்?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  ஆட்டோமொபைல் துறையின் சரிவுக்கு இன்றைய இளைஞர்களின் மனமாற்றமே காரணம் ,அவர்கள் EMI  செலுத்தி கார் வாங்க விரும்பவில்லை எனவும் ,ஓலா ,உபேர் மற்றும் மெட்ரோ இரயிலை அதிகம் பயன்படுத்துவதாலும் தான் ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்

என் சவாலை ஏற்றுக்கொள்ள முதலமைச்சர் தயாரா?

அதிமுக ஆட்சியில் போடப்பட்டுள்ள 443 MoU-படி பெறப்பட்ட முதலீடுகள் – தொடங்கப்பட்ட தொழிற் நிறுவனங்கள் – ஏற்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டால், ‘பாராட்டு விழா’ நடத்த தயாராக இருக்கிறேன்     திமுக தலைவர் மு க ஸ்டாலின்  தனது ட்விட்டரில் சவால் விட்டுள்ளார் 

மன்மோகன் சிங் கவலை

பண மதிப்பிழப்பு  நடவடிக்கையாலும்  மற்றும்  அவசரகதியில் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டியினாலும் இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் ,அரசியல் காரணங்களை ஒதுக்கிவிட்டு பொருளாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மன்மோகன் சிங்  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்  

40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்ட‌ட் வீல்சேர் மற்றும் ட்ரை (மூன்று சக்கர) சைக்கிள்..

    40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்ட‌ட் வீல்சேர் மற்றும் ட்ரை (மூன்று சக்கர) சைக்கிள்… மத்திய அரசு இல‌வ‌ச‌மா குடுக்குது. தேவை இருக்கிறவ‌ங்க நேர்ல‌போய்… வ‌ருமான‌ சான்றித‌ழ், ரேஷ‌ன் கார்ட், மாற்றுதிறனாளி அடையாள‌ அட்டை குடுத்து வாங்கிக்க‌லாம்.     இட‌ம் : National institute for empowerment of persons with multiple disabilities, muttukadu, Chennai. http://niepmd.tn.nic.in/schemes.php

இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்

இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் ஏற்றம் காணப்படுகிறது. இன்றைய காலை வர்த்தகத்தின்போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 140 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது. இதேபோல, தேசிய பங்குச் சந்தையிலும் இன்றைய காலை வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் நிஃப்டி 33 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது. அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு மற்றும் பங்குச்சந்தைகளில் சாதகமான நிலை காரணமாக ஏற்றம் காணப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 24 பைசா அளவுக்கு வீழ்ச்சியடைந்து 69… Continue reading இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்

பணவீக்கம் அதிகரிப்பு

கடந்த நான்கு மாதங்களாக இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதே போன்று உற்பத்தி விகிதமும் ஏழு சதவீதம் குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் மீதான சில்லறை வர்த்தகத்தில் வாடிக்கையாளர் விலைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 43 சதவீதமாக அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பங்குசந்தை உயர்வு

மும்பை பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ்  35756 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று மட்டும் 403.65 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து உள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 131 புள்ளிகள் உயர்ந்து  10735 புள்ளிகள் உடன் நிறைவு பெற்றது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் விவரம்

மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல். 2019-20 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் அவர் வரி வருவாய் 12 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 3.79 கோடியிலிருந்து 6.85 கோடியாக அதிகரித்துள்ளது என்றார்.