“தமன்னாவின் புதிய வீடு”

தமிழில் முன்னணி நடிகர்களுடன நடித்து தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்திருப்பவர் தமன்னா. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் தனக்கென தனி அடையாளம் பதித்தவர். தற்போது, தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்திலும், ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில், இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் இல்லை என்று கூறியுள்ள அவர், மும்பையில், ரூ.16 கோடிக்கு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். ஆம், மும்பையின்… Continue reading “தமன்னாவின் புதிய வீடு”

நடிகை எமி ஜாக்சன் ஜிம்மா அல்லது சாப்பாடா?

    நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய பிரசவகால டைரிக் குறிப்பினை இண்ஸ்டாகிராமில் எழுதி வருகிறார். தன்னுடைய 26வது வார கர்ப்ப கால புகைப்படத்தினை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு நாள் காலையும் ஜிம்க்கு செல்வதா அல்லது ஒரு கிண்ணம் தேனை சாப்பிடவா என்ற போராட்டம் தான் தினம் எழுகிறது என்று எழுதியிருந்தார்.

கவியரசர் கண்ணதாசன் 93வது பிறந்தநாள்

கவியரசர் கண்ணதாசன் பெற்ற இடம் என்பது முற்றிலும் மாறுபட்டது. ஆம் ஒரு படத்தின் வெற்றியை பாடல்கள் தீர்மானித்த காலத்தை உருவாக்கியவர் கண்ணதாசன். தான் இயற்றிய பாடல்கள் பெரும்பாண்மையானவை தன்னுடைய அனுபவத்தில் இருந்து பிறந்தவை என்பதை தன்னுடைய வனவாசம் என்னும் தன்னுடைய சுயசரிதையில் அவர் எழுதியிருக்கிறார். வாழ்கையில் செல்வந்தராகவும், அதே சமயம் எல்லாம் இழந்து பெரும் நெருக்கடியான காலத்தையும் சந்தித்தவர். இவருடைய பாடல்கள் ஒலிக்காத இடங்களே இல்லை. உறவுகள், பிரிவு, காதல், காமம், வனவாசம், ஆன்மீகம் என வாழ்க்கையின்… Continue reading கவியரசர் கண்ணதாசன் 93வது பிறந்தநாள்

உரிய மரியாதை கொடுத்து நடிகை தீபிகா படுகோன்!

      அடையாள அட்டையை காட்டுங்கள் என்று கேட்ட பாதுகாப்பு வீரருக்கு உரிய மரியாதை கொடுத்து நடிகை தீபிகா படுகோன் தன் அடையாள அட்டையை காண்பித்து சென்றதற்கு நடிகை தீபிகா படுகோனுகு பாராட்டுகள் குவிந்து வருகிறது.  இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சங்க தேர்தல் வெற்றி யாருக்கு!

நீண்ட போராட்டத்திற்கு பிறகு நடிகர் சங்க தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இந்த தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5மணி வரை நடைபெற்றது. இதில் முன்னணி நடிகர்கள் கமல், விஜய், விக்ரம், சூர்யா,ஆர்யா, சிவகார்த்திகேயன், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல நடிகர்களும், லதா, அம்பிகா, ராதா, குஷ்பு, சங்கீதா, வரலட்சுமி, மும்தாஜ், ஜனனி ஐயர் உள்ளிட்ட பல நடிகைகளும் தங்களது… Continue reading நடிகர் சங்க தேர்தல் வெற்றி யாருக்கு!

வாணி போஜன் விலகல் !!!

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமான வாணி போஜன் இயக்குநர் லோகேஷ் இயக்கும் ‘என் 4′ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதை தவிர வைபவ் நடிக்கும் புதிய படத்திலும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் முதல் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் இயக்கும் ‘என் 4′ படத்தின் கால்ஷீட் பிரச்சினை தொடர்பாக இப்படத்திலிருந்து விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகிறது. அதனால் என் 4 படத்தில் வாணி போஜனுக்கு பதிலாக ‌ஷரன்யா… Continue reading வாணி போஜன் விலகல் !!!

பிகில் படம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

        அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்து வரும் படம் பிகில். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இவர்களுடன் கதிர், யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷொராஃப் இன்னும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சிந்துபாத் வெளியிட தடை

அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி, விஜய்சேதுபதியின் மகன் சூர்யா, இன்னும் பலர் நடித்திருக்கும் படம் ‘சிந்துபாத்’. இந்த படம் இன்று வெளியாக இருந்த நிலையில் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் ‘கே புரொடக்‌ஷன்ஸ்’ ராஜராஜன் மற்றும் வான்சன் மூவிஸ் ஆகியோர் இணைந்து தயாரிப்பதாக செய்திகள் வெளியானது. ‘பாகுபலி 2’ படத்தின் தமிழ்நாட்டில் விநியோகம் செய்ய உரிமை பெற்ற விவகாரத்தில் ராஜராஜன்,  படத்தின் தயாரிப்பாளரான அர்கா மீடியா நிறுவனத்திற்கு இன்னும் பாக்கியாக ரூபாய்… Continue reading சிந்துபாத் வெளியிட தடை

விஜயகாந்த் சொத்துகள் ஏலம் !

விஜயகாந்த், பிரேமலாத தங்களது பெயரில் உள்ள வீடு, கல்லூரியை அடமானம் வைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணம் பெற்றுள்ளனர். இதில், ரூ.5.52 கோடி கடன் பாக்கிக்காக அவரது சொத்துக்களை ஏலத்திற்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, இன்றைய நாளிதழ்களில் விஜயகாந்தின் சொத்து ஏல அறிவிப்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், கடன் பாக்கியை செலுத்தாததால் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26-ல் ஏலத்தில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலா பாலின் ஆடை டீச்சர் வெளியீடு!

நடிகை அமலாபாலின் நடிப்பில் கடைசியாக ராட்சசன் படம் வெளியாகியிருந்த நிலையில் அமலா பாலின் அட்டகாசமான லுக்கில் ஆடை படத்திற்கான டீசர் வெளியாகியுள்ளது. த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை மேயாத மான் படத்தின் இயக்குனரன ரத்ன குமார் இயக்கியுள்ளார். வி ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. காமினி என்ற கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்துள்ளார். இதற்கு முன்பே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அமலா பாலின் தைரியமான முயற்சிக்கு பிரபலங்கள்… Continue reading அமலா பாலின் ஆடை டீச்சர் வெளியீடு!