இந்தி நடிகை கரிஷ்மா கபூர்

இந்தி நடிகை கரிஷ்மா கபூர் தனது 45-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இதையொட்டி, நீச்சல் உடையில் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கரிஷ்மா இந்த புகைப்படத்தை லண்டனில் எடுத்து வெளியிட்டுள்ளார். சன்கிளாஸ் அணிந்தபடி, மோனோகினி நீச்சல் உடையில் அவர் வெளியிட்டிருக்கும் ஃபோட்டோவுக்கு லைக்சும் கமென்ட்டும் குவிந்து வருகின்றன.

“தமன்னாவின் புதிய வீடு”

தமிழில் முன்னணி நடிகர்களுடன நடித்து தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்திருப்பவர் தமன்னா. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் தனக்கென தனி அடையாளம் பதித்தவர். தற்போது, தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்திலும், ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில், இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் இல்லை என்று கூறியுள்ள அவர், மும்பையில், ரூ.16 கோடிக்கு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். ஆம், மும்பையின்… Continue reading “தமன்னாவின் புதிய வீடு”

நடிகை எமி ஜாக்சன் ஜிம்மா அல்லது சாப்பாடா?

    நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய பிரசவகால டைரிக் குறிப்பினை இண்ஸ்டாகிராமில் எழுதி வருகிறார். தன்னுடைய 26வது வார கர்ப்ப கால புகைப்படத்தினை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு நாள் காலையும் ஜிம்க்கு செல்வதா அல்லது ஒரு கிண்ணம் தேனை சாப்பிடவா என்ற போராட்டம் தான் தினம் எழுகிறது என்று எழுதியிருந்தார்.

உரிய மரியாதை கொடுத்து நடிகை தீபிகா படுகோன்!

      அடையாள அட்டையை காட்டுங்கள் என்று கேட்ட பாதுகாப்பு வீரருக்கு உரிய மரியாதை கொடுத்து நடிகை தீபிகா படுகோன் தன் அடையாள அட்டையை காண்பித்து சென்றதற்கு நடிகை தீபிகா படுகோனுகு பாராட்டுகள் குவிந்து வருகிறது.  இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நான் வெற்றி என்று எதையும் உணரவில்லை!!!!

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கிய கபாலி படத்தின் மூலம் தமிழ்சினிமாவிற்கு நன்கு அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. அதன் பின்தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து பிற மொழிகளான இந்தி மற்றும் ஆங்கில படங்களிலும் நடித்து வருகிறார். பிரிட்டிஷ், அமெரிக்க படமாக உருவான, தி வெட்டிங் கெஸ்ட் படத்தில் நடித்ததுடன் வேர்ல்டு வார் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஹாலிவுட் திரைபடங்களில் நடித்து வந்தாலும் தான் நினைத்த வெற்றியை அவர் பெறவில்லை… Continue reading நான் வெற்றி என்று எதையும் உணரவில்லை!!!!

ஹாலிவுட் நடிகை பெல்லா த்ரோனின்

ஹாலிவுட் நடிகை பெல்லா த்ரோனின், ட்விட்டர் கணக்கை யாரோ சில நாட்களுக்கு முன்னர் ஹேக் செய்துவிட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து தனது நிர்வாணப் படங்களை தானே வெளியிட்டுள்ளார் த்ரோன். இது குறித்து விளக்கம் அளித்துள்ள த்ரோன், “எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்பதை அறிவீர்கள். ஹேக்கர், எனது நிர்வாணப் படங்களை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டி வந்தார். நான் எடுத்த அந்த நிர்வாணப் படங்கள், ஒரு முக்கியமான நபருக்கானது. என்னை ஹேக்கர் வெகு நேரமாக கட்டுப்படுத்தி வந்தான். இனி அவனால்… Continue reading ஹாலிவுட் நடிகை பெல்லா த்ரோனின்

பழம்பெரும் நடிகரான கிரஷ் கர்னாட் காலமானார்

ஞானபீட விருது வாங்கிய பழம்பெரும் நடிகரான கிரஷ் கர்னாட் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். அவருக்கு 81 வயது ஆனது. காதலன், காதல் மன்னன், ரட்சகன் உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார் கிரிஷ் கர்னாட். பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ள கிரிஷ் கர்னாட், மேடை நாடகங்களிலும் தனக்கென தனிப் பெயரைப் பெற்றவர் ஆவார்.

வழக்கு தொடர்கிறாரா பிரியங்கா சோப்ரா?

அமெரிக்க நாளிதழ் ஆன ஓகே சில நாட்களுக்கு முன் நடிகை பிரியங்கா சோப்ராவும், நிக் ஜோனஸ்ம் திருமணமாகி 117 நாட்களில் விவாகரத்து செய்யப்போவதாக செய்தி வெளியிட்டு இருந்தது. தற்போது பிரியங்கா சோப்ராவின் திருமண வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டு இருப்பதாகவும் தவறான தகவல்களை வெளியிட்டதற்காக அந்த பத்திரிக்கையின் மீது பிரியங்கா வழக்கு தொடர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன் தி கட் நாளிதழ் ஆனது பிரியங்காவை ஏமாற்று பேர்வழி எனவும், ஹாலிவுட்டில் கவனம் செலுத்ததான்… Continue reading வழக்கு தொடர்கிறாரா பிரியங்கா சோப்ரா?

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள திரைப்படம்

வரும் 8 ஆம் தேதி தமிழ் சினிமாவில் கபிலவஸ்து, ஸ்பாட், பூமராங், சத்ரு, பொட்டு, கேப்டன் மார்வெல் உள்ளிட்ட ஆறு படங்கள் வெளிவர உள்ளன. இருந்தபோதிலும் ஹாலிவுட் படமான கேப்டன் மார்வெல் திரைபடத்திற்கு ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 3D திரைபடமான கேப்டன் மார்வெல் தமிழில் டப்பிங் செய்யபட்டு வெளியிடப்படுகிறது.