திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியும் நடிகையுமான நுஷ்ரத் ஜகான் திருமணம்

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியும் நடிகையுமான நுஷ்ரத் ஜகான் கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபரான நிகில் ஜெயினை துருக்கியில் திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். தன்னுடைய திருமணப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். நுஷ்ரத் ஜகான் மேற்கு வங்கம் பஷிரத் என்னுமிடத்தில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நுஸ்ரஸ் ஜகான் சிவப்பு நிற லெஹன்கா உடையை திருமண உடையாக அணிந்திருந்தார். திருமணத்தில்… Continue reading திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியும் நடிகையுமான நுஷ்ரத் ஜகான் திருமணம்

பழம்பெரும் நடிகரான கிரஷ் கர்னாட் காலமானார்

ஞானபீட விருது வாங்கிய பழம்பெரும் நடிகரான கிரஷ் கர்னாட் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். அவருக்கு 81 வயது ஆனது. காதலன், காதல் மன்னன், ரட்சகன் உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார் கிரிஷ் கர்னாட். பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ள கிரிஷ் கர்னாட், மேடை நாடகங்களிலும் தனக்கென தனிப் பெயரைப் பெற்றவர் ஆவார்.

பாலிவுட் செல்கிறாரா நடிகர் அஜித்?

தற்போது நடிகர் அஜித் போனி கபூர் தயாரிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். மேலும் அஜித் நடிப்பில் மற்றொரு தமிழ் படத்தையும் தயாரிக்கும் முடிவில் உள்ளார் போனிகபூர். இந்நிலையில் நடிகர் அஜித்தை பாலிவுட்டில் நாயகனாக  அறிமுகம் செய்ய விருப்பபடுகிறார் போனி கபூர். நடிகர் அஜித் அசோகா என்ற இந்தி படத்தில் ஏற்கனவே நடித்து இருந்தாலும் கதாநாயகனாக எந்த பாலிவுட் படத்திலும் இதுவரை நடித்தது இல்லை. நடிகர் அஜித் போனிகபூரின் ஆசையை நிறைவேற்றி பாலிவுட்டிலும் ஒரு வலம்… Continue reading பாலிவுட் செல்கிறாரா நடிகர் அஜித்?

பிஎம் நரேந்திரமோடி படத்திற்க்கு தடையா?

பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ஓமங்க் குமார் இயக்கி இருக்கும் படம்தான் பிஎம் நரேந்திரமோடி. இந்த படத்தில் மோடி வேடத்தில் விவேக் ஓபராயும், அமித் ஷா வேடத்தில் மனோஜ் ஜோஷியும் நடித்து உள்ளனர். தேர்தல் நேரத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் கட்சிகள் சார்பில் மும்பை நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது படத்தை ரிலீஸ் செய்ய நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளதால் 23 மொழிகளில் நாளை படம்… Continue reading பிஎம் நரேந்திரமோடி படத்திற்க்கு தடையா?

வழக்கு தொடர்கிறாரா பிரியங்கா சோப்ரா?

அமெரிக்க நாளிதழ் ஆன ஓகே சில நாட்களுக்கு முன் நடிகை பிரியங்கா சோப்ராவும், நிக் ஜோனஸ்ம் திருமணமாகி 117 நாட்களில் விவாகரத்து செய்யப்போவதாக செய்தி வெளியிட்டு இருந்தது. தற்போது பிரியங்கா சோப்ராவின் திருமண வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டு இருப்பதாகவும் தவறான தகவல்களை வெளியிட்டதற்காக அந்த பத்திரிக்கையின் மீது பிரியங்கா வழக்கு தொடர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன் தி கட் நாளிதழ் ஆனது பிரியங்காவை ஏமாற்று பேர்வழி எனவும், ஹாலிவுட்டில் கவனம் செலுத்ததான்… Continue reading வழக்கு தொடர்கிறாரா பிரியங்கா சோப்ரா?

பாலிவுட் செல்கிறாரா கீர்த்தி சுரேஷ்?

நடிகையர் திலகம் படத்தின் மூலம் புகழ் அடைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், சண்டகோழி 2, ரெமோ, சர்கார், உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார். இவர் இயக்குநர் அமித் ஷர்மா இயக்கத்தில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கபில்தேவ்ன் வாழ்க்கை வரலாறு

இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ்ன்  வாழ்க்கை வரலாறு 83 என்ற பெயரில் படமாக எடுக்கப்பட உள்ளது. இதில் ரண்வீர் சிங் கபில்தேவாக நடிக்க உள்ள நிலையில் அவருடைய மனைவி கதாபத்திரத்தில் நடிக்க  கத்ரினா கைப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் களம் புகும் விஜய்சேதுபதி

ராம்சரண் தயாரிப்பில் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதிப், அமிதாப்பட்சன் நடிக்கும் இந்தத் திரைப்படம் 240 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்தப் படத்தில் ராஜபாண்டி என்னும் போர்வீரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாகத் தெரிவிக்கபட்டு உள்ளது.