நீதிமன்றங்கள் எதிர் கொள்ளும் சவால்கள்

உச்சநீதிமன்றத்தில் ஒரு சுவாரஸ்யமான விசாரணை ஒன்று நடைபெற்றது. இதுகுறித்துப் பல வருடங்களுக்கு முன்பே விவாதிக்க வேண்டிய செய்தி இது இப்போதாவது இதுகுறித்து யோசித்தார்கள் என்பது சந்தோஷப்படக் கூடிய செய்தியாகும்.அது என்னது என்பதைப் பற்றிப் பார்க்கலாம். சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆய்வுக்காகச் சிறைசாலைக்குச் சென்றிருந்தார்கள். அங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பது அப்பொழுதுதான் அவர்களுக்குத் தெரியவந்தது. (ஒரு சில சிறைச்சாலைகளில் உலகில் கிடைக்காத பொருட்கள் எல்லாம் அங்குக் கிடைக்கும் என்பது வேறு விஷயம்.அதை பற்றி… Continue reading நீதிமன்றங்கள் எதிர் கொள்ளும் சவால்கள்

டோட்டலைசர் தேவையா?

“டோட்டலைசர்” இயந்திரத்தைப் பயன்படுத்தப் பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. டோட்டலைசர் என்றால் என்ன? தற்பொழுது மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் தனித்தனியாக எண்ணப்படுகின்றன. இவற்றினால் ஏற்படும் நேரத்தைக் குறைத்து குறுகிய காலத்தில் மொத்த எண்ணிக்கை காட்டுவதற்கு டோட்டலைசர் பயன்படுக்கிறது. ஒரு தொகுதியில் உள்ள 14 வாக்கு சாவடிகளின் வாக்கு இயந்திரங்களை, டோட்டலைசர் இயந்திரத்துடன் இணைத்து விட்டால் கட்சிகளின் ஓட்டு சராசரி ஒரே நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த இயந்திரத்தினைப் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ்… Continue reading டோட்டலைசர் தேவையா?

வெளி உலகம் தெரியாதவனின் புலம்பல்

கஜா புயலின் எதிரொலியாக டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆறு நாட்கள் ஆகியும் இன்னும் அடிப்படை உதவிகள் கூட மக்களைச் சென்றடையவில்லை. மரங்களை அகற்றினால் கூட மக்களின் பிரச்சனை ஓரளவுக்கு சரியாகும் ஆனால், புயலில் விழுந்த மரத்தைக் கூட அகற்றவில்லை. மின்கம்பங்களை அகற்றி அவற்றை நடும் பணி கூடத் துவங்கவில்லை. ஆனால் மூன்று நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி இன்றுடன் ஆறுநாட்கள் ஆகிவிட்டது. இன்னும் பல மாதங்கள் ஆனால் கூட வருவதற்க்கான வழிகள் இல்லை… Continue reading வெளி உலகம் தெரியாதவனின் புலம்பல்

காஷ்மீர் சர்ச்சை

காஷ்மீர் என்றாலே சர்ச்சை என்று ஆகிவிட்டது. சர்ச்சைக்குப் பெயர்போன காஷ்மீரில் மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.சட்டசபை கலைக்கப்பட்டது என்பது தான் கவர்னர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கலைத்துவிட்டார். இதற்கு முன்பு கலைக்காமல் இப்பொழுது கலைக்க வேண்டியதின் காரணம் என்ன? தேர்தலுக்கு முன்பு  அறிவித்த கூட்டணிகள் எல்லாம் இன்று என்ன ஆனது? கடந்த சட்டமன்ற தேர்தலில் எதிரும் புதிரும் ஆக இருந்த பாஜக, மக்கள் ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது ஜீன் 16-ம் தேதி பாஜக ஆதரவை வாபஸ்… Continue reading காஷ்மீர் சர்ச்சை

டெல்டாவின் உண்மை என்ன?

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள மக்களின் குறைகள் தீர்ந்தபாடு இல்லை. அவற்றுக்குள் மழை வேறு வந்துவிட்டது.புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை. இன்னும் சில இடங்களில் பணிகள் துவங்கப்படவில்லை. நிறைய இடங்களில் சாலைகளில் விழுந்துள்ள மரங்கள் கூட அகற்றப்படவில்லை உணவு, குடிநீர் அத்திவாசிய பொருட்கள் வழங்கப்படவில்லை. மின்சாரம் 90 சதவீத இடங்களில் இல்லை. பால் போன்ற பொருட்கள் கடைகளில் கூடக் கிடைக்கவில்லை. ஐந்து நாட்கள் ஆகியும் இன்னும் நிவாரண முகாம்களில் நிறைய மக்கள் இருக்கிறார்கள் என்றால்… Continue reading டெல்டாவின் உண்மை என்ன?

பொய்யர்களின் பேச்சு

எங்களுக்கு உணவு,மற்ற உதவிகளை எதிர்பார்க்கவில்லை. பாதிக்கப்படட மக்களுக்கு  உதவிகள் கூடத் தாமதம் ஆனாலும் பரவாயில்லை. இந்த அரசாங்கத்தில் பொறுப்பில் உள்ளவர்களின் பொறுப்பற்ற பேச்சில் மக்கள் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர். மக்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டியவர்கள் ஏதோ ஒன்று நடக்காதது போல் பேசுவது மக்களின் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது. இவர்கள் நோக்கம் என்ன என்பது அணைவருக்கும், வெளி உலகிற்க்கும் எதுவும் தெரியக் கூடாது என்பதே இவர்கள் நோக்கம் என்பது தெரிகிறது. அமைச்சர்களின் பேச்சு பின்வருமாறு பொன்னார்: மத்திய மாநில அரசுகள்… Continue reading பொய்யர்களின் பேச்சு

பிளிப்கார்ட்டில் நடந்தது என்ன ? நடக்க போவது என்ன?

பிளிப்கார்ட் நிறுவனம் 2007 ஆம் ஆண்டு பெங்களூரை தலைமையகமாகக் கொண்டு நிறுவப்பட்டது.இந்த நிறுவனத்தைப் பின்னிப் பன்சால், சச்சின் பன்சால் ஆகிய இருவரும் இணைந்து ஆரம்பித்தார்கள். முதலில் புத்தகங்கள் விற்பனையில் ஆர்வம் காட்டிய நிறுவனம் போகபோக  தனது வியபாரத்தை எல்க்ட்ரானிக், ஆடைகள் மற்றும் அழகுசாதன பொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுப்பட்டனர். இந்தியாவில் உள்ள ஆன்லைன் வர்த்தகத்தில் 39.5% இவர்களது பங்களிப்பு ஆகும். இதன் இன்றைய சொத்துமதிப்பு 199 பில்லியன் ஆகும். ஏறக்குரைய அமெரிக்க டாலரில் 2.8 பில்லியன் ஆகும்.… Continue reading பிளிப்கார்ட்டில் நடந்தது என்ன ? நடக்க போவது என்ன?

யார் சொல்வது உண்மை

மத்திய நிதியமைச்சர் பதிவு: பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அருண் ஜேட்லி பதிவிட்டு்ள்ளார். பொருளாதாரத்தை முறைப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியே பணமதிப்பிழப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார். வங்கி முறையை புறந்தள்ளி, அடையாளம் தெரியாத வகையில் பணப்பரிவர்த்தனை நடைபெறும்போது, அது வரி ஏய்ப்புக்கு வித்திடுவதாக அவர் கூறியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ரொக்க கையிருப்பு வைத்திருந்தவர்கள் அதை வங்கியில் போடும் நிர்பந்தம் ஏற்பட்டதாகவும் அருண் ஜேட்லி விளக்கமளித்துள்ளார். இதன்மூலம்… Continue reading யார் சொல்வது உண்மை

வீரன்… தீரன்… சேவாக்

கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம். தமிழ்நேரலை கிரிக்கெட் போட்டிகளில் பவுலர்கலின் நல்ல பந்துகளை அவற்றிக்கு உரிய மதிப்பளித்தும், மோசமான பந்துகளை அடித்தும் விளையாடுவது ஒரு வகை என்றால் அவர்களின் நல்ல பந்துகளையும் அசாதாரணமாக அடித்து விளையாடி, பவுலர்களின் மன உறுதியை நிலைகுலைய செய்து அவர்களை தவறுகள் செய்ய செய்வது மற்றொரு வகை. அதை ஒருநாள் போட்டிகளில் செய்து காட்டியவர்கள் கில்கிறிஸ்ட், கெயில், ப்ரண்டன் மெக்குலம், வார்னர் போன்றவர்கள் என்றாலும் அதை டெஸ்ட் போட்டிகளிலும் செய்து தன்னை நிரூபித்தவர் சேவாக்.… Continue reading வீரன்… தீரன்… சேவாக்

உண்மையான பொருளாதாரா வல்லரசு யார்?

அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்க வரலாற்றில் தப்பொழுதைய அமெரிக்க பொருளாதாரா உயர்வு எந்தக் காலத்தையும் விடச் சிறந்தது எனத் தெரிவித்து உள்ளார். உண்மையா? பொய்யா? என்பதைப் பற்றிய சிறப்புக் கட்டுரை. அமெரிக்கப் பொருளாதாரம் நன்கு உள்ளது என்பது உண்மை ஆனால் எல்லாவற்றையும் விடச் சிறந்ததா என்பதே கேள்வி வாருங்கள் அலசி ஆராய்வோம். ஒரு சில பொருளாதார வல்லுநர்கள் உண்மையில் ஸ்த்திரதன்மையில்லை எனக் கூறுகிறார்கள். பொருளாதார வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது. இரண்டாவது காலண்டில் 2018-ல் 4.2% வளர்ச்சி விகிதம்… Continue reading உண்மையான பொருளாதாரா வல்லரசு யார்?