இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஓடியும். நமது மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் இன்னும் கூட தீர்க்கப்படவில்லை. அந்த அந்த மாநிலத்தில் அவர்கள் ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு பேச்சு¸ எதிர் கட்சியாக இருக்கும் பொழுது ஒரு பேச்சு இதுதான் அவர்களின் அரசியல். இரண்டு மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளை தீர்க்க எந்த மத்திய அரசும் வரவில்லை. ஏனென்றால் பிரச்சினை தீர்ந்து விட்டால் அவர்களுக்கு பொழப்பு இல்லை அல்லவா? அதுதான் நிதர்சன உண்மை¸ மத்திய அரசால் ஒரு நாள்… Continue reading பொழப்பற்ற அரசியல்வாதிகளா?
Category: கட்டுரைகள்
இந்தியாவை எப்படி பார்க்கிறார்கள்?
கொரோனாவிற்கு பிறகு உலக நாடுகள் இந்தியாவை எவ்வாறு பார்க்கின்றன என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. 2020-ல் இந்தியாவை பார்த்து பெருமைப்பட்டவர்கள் இன்று நம்மளை கண்டாலே தள்ளி நிற்கிறார்கள், இல்லை இல்லை கதவை மூடி விட்டார்கள். இதுதான் இன்றைய நமது நிலைமை கொரோனா ஆரம்பித்த காலத்தில் இந்தியாவில் ஒரு கொரோனா இல்லை. உலக தொழில் அதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயாராக இருந்தார்கள். ஆனால் தற்போதைய நிலை என்ன? முதலீடு வேண்டாம், என் வீட்டிற்கு வராதே என்று கதவை… Continue reading இந்தியாவை எப்படி பார்க்கிறார்கள்?
உண்மையான மாவீரரின் வரலாறு
நேதாஜி என அனைவராலும் அன்பாக அழைக்கபடும் சுபாஷ் சந்திரபோஸின் 122 வது பிறந்த தினம் இன்று. நாட்டின் விடுதலைக்காக போராடிய முதன்மையான தலைவர்களில் இவரும் ஒருவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை இக்கட்டுரையில் காண்போம். நேதாஜி தலைவர் என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஜனவரி 23, 1897 இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான… Continue reading உண்மையான மாவீரரின் வரலாறு
இந்தியரின் நிர்வாகத்தில் அடுத்த அமெரிக்க நிறுவனம்
FedEx என அன்பாக அமெரிக்க மக்களால் அழைக்கப்படும் நம்பிக்கையான நிறுவனத்துக்கு ஒரு இந்தியர் தலைமை அதிகாரியாக வருகிற 2019 ஜனவரி 1-ல் பதவியேற்கிறார். அவரது பெயர் ராஜேஷ் சுப்பிரமணியன் அவரை இந்தியர் என அழைப்பதில்தான் பெருமை ஏனென்றால் இது வெளிநாட்டு உயர்வு. FedEx மற்றும் அதன் தலைமை செயல் அதிகாரி பற்றிய கட்டுரை. FedEx இவர்களது வேலைத்திறமை மிக துல்லியமானது. இவர்கள் குறிப்பிட்ட இலக்கை அடைவதில் அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் தனது வாடிக்கையாளர்களை விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவர்கள்.… Continue reading இந்தியரின் நிர்வாகத்தில் அடுத்த அமெரிக்க நிறுவனம்
சர்ஜிக்கல் ஸ்ரைக்
தற்பொழுது நாடு முழுவதும் ஒலிக்கப்படும் ஒரு சொல் “சர்ஜிக்கல் ஸ்ரைக்”. அப்படியென்றால் என்ன ஏன் இப்பொழுது அதிகமாக உபயோகிகப்படுகிறது இதன் பின்னனி என்ன? முதலில் சர்ஜிக்கல் ஸ்ரைக் என்றால் என்ன? எதிரணி வீரர்களின் முக்கிய இடங்களைக் கண்டறிந்து அவற்றை மிகத் துல்லியமாகத் தாக்குதல் மூலம் அவர்கள் எதிர்பாக்காத சமயத்தில் அடியோடு காலி செய்வதே ஆகும். திட்டமிடுதல் பிரிவில் 96 வீரர்களும், தாக்குதல் பிரிவில் 124 வீரர்களும் இருப்பார்கள். இது குறித்து முன்னால் அதிகாரிகள் கூறியதவாது. இலக்குகளை நகரும்… Continue reading சர்ஜிக்கல் ஸ்ரைக்
புதின் காதல் சர்ச்சை
புதின் இந்தபெயர் பல சர்ச்சைகளுக்கும் சாதனைகளுக்கும் சொந்தமானது ஏனென்றால் ரஷ்யா என்றாலே மர்மங்கள் நிறைந்த நாடு. அதன் அதிபர் என்றால் அதைவிட மர்மம், சர்ச்சை இவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டு உலகம் வியந்து பார்க்கும் நாடு. ரஷ்யா முடிந்து விட்டது என்ற நேரத்தில் ரஷ்யாவின் அதிபராகித் திறம்பட வழிநடத்தி வருபவர் புதின் அவரைப்பற்றிய சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தொகுப்பு இது அவர் பலமுறை சொல்லியுள்ளார் எனக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை உண்டு. அவற்றின் உள்… Continue reading புதின் காதல் சர்ச்சை
அமெரிக்காவின் முடிவு சரியா?
டிரம் பதவியேற்றத்திலிருந்தே முந்தய அரசுகளின் கொள்கைகளிலிருந்து வேறுப்பட்டு நடந்து வருகிறார். எங்கு லாபம் வருகிறதோ அங்கு எல்லாம் தான் வல்லரசு எனக் காட்டிகொள்கிறார். ஆனால் சிரியாவில் லாபத்துக்கு வழியில்லை என்பதை உணர்ந்து உள்ளார். தேவையற்ற செலவு, உயிர்சேதம் போன்ற வற்றைத் தவிர்க்க விரும்புகிறார். தனது பெரியண்ணன் முடிவில் இருந்து மாறுப்பட்டுத் தனது படைகளை விலக்கி கொள்ள முடிவு செய்தது நல்ல முடிவுதான். ஆனால் ஏகாதிபத்திய அமெரிக்கா மனோபவத்துக்கு எதிரானது அல்லவா அதனால் தான் இவ்வளவு விமர்சனங்கள். அமெரிக்காவின்… Continue reading அமெரிக்காவின் முடிவு சரியா?
2018 ஆம் ஆண்டில் கவனம் ஈர்த்த அறிமுக இயக்குநர்கள்
சினிமா விமர்சகர், பொறியாளர் S.வீரசெல்வம். தமிழ்நேரலை 96 விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் அறிமுக இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் 4/10/2018 அன்று வெளிவந்த 96 படம் மெகா ஹிட் அடித்தது.மெட்ராஸ் என்டர்பிரைசஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்தப் படத்திற்க்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்து இருந்தார். இந்தப் படத்தில் வரும் காதலே காதலே பாடல் மற்றும் அதன் தீம் பலரின் வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ்களில் பரவி கிடந்தது. பள்ளி பருவ காதலர்கள் 22 வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் போது நடக்கும்… Continue reading 2018 ஆம் ஆண்டில் கவனம் ஈர்த்த அறிமுக இயக்குநர்கள்
இந்திய கிரிக்கெட்டில் பிளவா?
கிரிக்கெட்டில் நடப்பது என்ன சிறப்புக் கட்டுரை விவாதிக்கிறது. மகளிர் கிரிக்கெட் அணியில் கடும் குழப்பம் நிலவுகிறது. அரசியல் கூட்டங்களைவிட மகளிர் கிரிக்கெட் அணியில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. ஆளாளுக்குத் தனிக்குழு அமைத்து அவர்களின் சொந்த வாரியம் போல் செயல்பட்டு வருகிறார்கள். இதன் விளைவு தான் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. மிதாலி ராஜ் அணியிலிருந்து நீக்கப்பட்டவுடன் அவர் சரமாரியான குற்றச்சாட்டுகளைக் கிரிக்கெட் போர்ட் மீது வைத்தார்.முக்கியமாகத் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது குற்ற ஏவுகணைகளை ஏவினார். இதை… Continue reading இந்திய கிரிக்கெட்டில் பிளவா?
ரிசர்வ் வங்கி VS மத்திய அரசு நடப்பது என்ன?
ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் என்னதான் பிரச்சினை சிறப்புக்கட்டுரை அரசின் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு பணத்தில் பெரும்பகுதியை மத்திய அரசுக்குத் தர வேண்டும் என அரசு தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்தக் கோரிக்கைக்கு ரிசர்வ் வங்கி உடன்படவில்லை. இதைத் தொடர்ந்து மத்திய அரசின் கோரிக்கைக்கு ஆர்பிஐ-யைப் பணியவைக்க ரிசர்வ் வங்கி சட்டத்தில் ஏழாவது பிரிவைப் பயன்படுத்தி வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின. மத்திய அரசாங்கத்திற்கும், மத்திய ரிசர்வ்… Continue reading ரிசர்வ் வங்கி VS மத்திய அரசு நடப்பது என்ன?