புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது

11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று இரவு அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி அருகே இரவு 8 மணிக்கு பிறகு கரையை கடக்கும். புயல் கரையை கடந்த பின்பும் புயலின் தாக்கம் 6 மணி நேரம் நீடிக்கும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; தற்போது நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது. புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டதன் காரணகாவே பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நிவர் புயலின் மையப்பகுதி மட்டுமே 150 கி.மீ  விட்டம் கொண்டது. நிவர் புயல் கரையை கடந்த பிறகும் 6 மணி நேரம் அதன் தாக்கம் இருக்கும். நிவர் புயல் காரணமாக கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை 13 முதல் 23 அடி வரை ராட்சத அலைகள் எழும்பும்.

குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடற்கரை பகுதி கொந்தளிப்புடன் காணப்படும். நிவர் புயல் கரையைக் கடந்தபின் உள் மாவட்டங்களிலும் கன மழை பெய்யும். ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

முக்கிய சாலைகள் மூடப்பட்டன

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 3,000 கன அடியாக அதிகரிக்கபட்டு உள்ளதால் சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டு உள்ளது.சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் மூடப்பட்டன மறுஅறிவிப்பு வரும் வரை சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டிருக்கும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே அனுமதிக்க்ப்படும். .

வேகத்தில் நகரும் நிவர் புயல்?

மணிக்கு 11 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வந்த நிவர் புயல், சென்னையில் இருந்து 214 கி.மீட்டர் தொலைவிலும், கடலூரில் இருந்து 110 கி.மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 120 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.
தற்போது அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என வானிமை மையம் தெரிவித்துள்ளது. நகர்ந்து வரும் வேகம் 11 கி.மீட்டரில் இருந்து 16 கி.மீட்டர் வேகமாக அதிகரித்துள்ளது. தற்போது அதிதீவிர புயலாக நிவர், கடலூரில் இருந்து 90 கி.மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 570 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

பல்வேறு இடங்களில் கனமழை

சென்னையில் காமராஜர் சாலை, திருவல்லக்கேணி, மெரினா, சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது

இயல்பான அளவு மழை

இந்த காலகட்டத்தில்(அக்டோபர் 1-ந்தேதி முதல் நேற்று வரை) 41.3 செ.மீ. மழையை பெற்று இருக்க வேண்டும். ஆனால் இப்போது 44.2 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இது இயல்பை விட அதிகம் ஆகும்.

மாவட்டங்கள் வாரியாக பார்க்கும் போது 12 மாவட்டங்கள் இயல்பை விட அதிகம் மழையை பெற்று இருக்கிறது. அதில் நீலகிரி அதிகபட்சமாக மழை பெற்றுள்ளது. இயல்பைவிட 74 சதவீதம் மழை அதிகம் பதிவாகி இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளன.

அதேபோல், குறைந்தபட்ச மழைப்பதிவை பெற்ற மாவட்டங்களில் வேலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் ஆகும். அந்த மாவட்டங்கள் இயல்பை விட 29 சதவீதம் குறைவான மழையை பெற்றுள்ளன. சென்னையை பொறுத்தவரையில் 13 சதவீதம் இயல்பை விட குறைவாக மழை பதிவாகியுள்ளது.