90 எம்எல் திரைப்படம் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளிவர உள்ளதாக நடிகை ஓவியா தெரிவித்து உள்ளார். மேலும் அவர் படத்தின சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.அனிதா உதிப் இயக்கத்தில் உருவாகி உள்ள படம்தான் 90 எம்எல். இந்த படத்தின் டிரெய்லர் சென்ற வாரத்தில் வெளியாகி பலத்த சர்ச்சையில் சிக்கியது.
இந்த டிரெய்லரில் பெண்கள் மது குடிப்பது, கஞ்சா அடிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. சில ஆபாச காட்சிகளும், இரட்டை அர்த்த வசனங்களும் இடம்பெற்று இருந்தன.படத்தின் டிரைலருக்கு பெண்கள் அமைப்புகளின் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி இருந்தது குறிப்பிடதக்கது.இந்த படத்திற்கு நடிகர் சிலம்பரசன் இசை அமைத்து உள்ளார்.