75% வாக்குப்பதிவு

மத்திய பிரதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குபதிவில் அதிகபட்சமாக 75% வாக்குபதிவு நடத்துள்ளது.கடந்த தேர்தலைவிட 2.5% சதவீத வாக்குகள் கூடுதலாகப் பதிவாகி உள்ளது.

நேற்று மத்தியபிரதேசம் மற்றும் மிசோரமில் வாக்குபதிவு நடைப்பெற்றது.
மிசோரமில் 40 தொகுதியாகும் இந்தத் தொகுதியில் 209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு வாக்குபதிவு காலை 7 மணியிலிருத்து மாலை 4 மணியுடன் முடிவடைந்தது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 2907 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 230 தொகுதியாகும். பாஜக 230 தொகுதிகளிலும், காங்கிரஸ் 229 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இங்கு 1,75000 காவலர்கள் பதுகாப்பில் பணியில் இருந்தனர்.
மத்திய பிரதேசத்தில் பதற்றமான தொகுதியில் வாக்குபதிவானது காலை 7 மணியிலிருத்து மாலை 4 மணியுடன் முடிவடைந்தது. மற்ற தொகுதியில் வாக்குபதிவானது காலை 8 மணியிலிருத்து மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.

நேரியிடையான போட்டி கங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையில் தான் உள்ளது.
அங்கு ஆளும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பாரதபிரதமர் மோடி அவர்களும் கடுமையான பிரசாரம் மேற்கொண்டு வந்தார்கள்.
கடந்த 15 வருடங்களாகப் பாஜகவே ஆட்சியில் உள்ளது. எனவே இம்முறை எப்படியும் ஆட்சியைக் கைப்பற்ற கங்கிரஸ் முயற்சி செய்கிறது.
ஆனால் ஆளும் பாஜகவும் ஆட்சியைத் தக்க வைக்கக் கடும் முயற்சி செய்கிறது. ஆனால் கருத்துக் கணிப்பில் காங்கிரசுக்கே வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
இவ்விரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 11 தேதி நடைப்பெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *