
ஹூண்டாய் கார் நிறுவனமும் பேட்டரி கார் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டு உள்ளது. இருங்காட்டுகோட்டையில் இயங்கி வரும் ஹூண்டாய் நிறுவனத்தின் ஆலை விரிவாக்கம் மற்றும் பேட்டரி கார் தயாரிப்பிற்குக்கு 7000 கோடி ரூபாய் முதலீடு செய்ய போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விரிவாக்க திட்டத்தின் மூலம் 1500 பேர்க்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.