7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.

கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம்.

தமிழ்நேரலை

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தில இந்தியா வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் பங்களாதேஷ் வீரர்கள் திணறினர். கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ரஹீம், சஹிப் அல் ஹாசன், மிதுன் அடுத்தடுத்து ஜடேஜா பந்து வீச்சில் நடையை கட்டினர். பங்களாதேஷ் வீரர் மிஹிடி ஹாசன் மட்டும் ஓரளவு நிலைத்து நின்று விளையாடி 50 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். பங்களாதேஷ் 50 வது ஓவரில் 173 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்களையும் புவனேஷ்வர் குமார், பும்ரா தலா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தவான் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி 40 ரன்களில் சஹிப் பந்து வீச்சில் அவுட் ஆனார். மறுபுறம் நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் கண்டார். ராயுடு 13 ரன்களில் ருபெல் பந்து வீச்சில் ரஹீமிடம் கேட்ச் கொடுத்தும், தோனி 33 ரன்களில் மோர்தசா பந்து வீச்சில் மிதுனிடம் கேட்ச் கொடுத்தும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 37வது 174 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா 83 ரன்களுடனும் தினேஷ் கார்த்திக் 1 ரன்னிளும் கடைசி வரை களத்தில் நின்றனர்.

29 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட்கள் கைப்பற்றிய ஜடேஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் நாளை பாகிஸ்தான் உடன் மோதுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *