நடிகர்கள் மற்றும் பாடகர்கள் உட்பட 56 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார். 112 பேருக்கு இந்த வருடம் பத்ம விருதுகள் அறிவிக்கபட்டிருந்தன. அதில் முதல் கட்டமாக 56 பேருக்கு பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள் இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைபட நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா, டிரம்ஸ் சிவமணி, பாடகர் சங்கர் மகாதேவன், பங்காரு அடிகளார், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, செஸ் வீராங்கனை ஹரிகா, ஜெய்சங்கர், இந்திய கபடி அணி கேப்டன் அஜய் தாகூர், சமூக சேவகர் மதுரை சின்னபிள்ளை, இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், பரதநாட்டிய கலைஞா் நா்த்தகி நடராஜ், உட்பட 56 பேருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது.