காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானை குற்றம் சாட்டியது இந்தியா. இதனால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக பாகிஸ்தான் அரசு நேற்று தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த 44 பேரை கைது செய்து உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷகாரியர் கான் அப்ரிடி பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக முப்தி அப்துர் ராய், ஹமாத் அசார் உட்பட 44 பேர் கைது செய்யபட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
