திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரத்தில் மக்கள் பிரச்சார பயணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் 4 ஆம் தேதி பங்குபெற்று பேசினார். அதில் மக்கள் வெறுக்கும் மாநில மற்றும் மத்திய அரசுகள் விரைவில் அகற்றப்படும் என்றும், நடைபெற இருக்கும் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் தெரிவித்து உள்ளார்
மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தால் காவிரி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் வாய்க்கால்கள் வெட்டபட்டு அந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் விவசாயத்திற்காக நிரப்பபடும் எனவும் டிடிவி தினகரன் கூறினார்.