4 லட்சம் கோடி ரூபாய் வேளாண் கடனுக்காக தள்ளுபடியை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். இது விவசாயிகளை கவருவதற்காக மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.
மூன்று மாநிலங்களில் ஆட்சியை இழந்தது அடுத்து 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் விவசாயிகளின் வாக்குகளை பெறும் நோக்கில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என செய்து வந்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த தேர்தலில் பாஜக கட்சி தன்னுடைய ஆட்சியை எதிர்க்கட்சியான காங்கிரஸிடம் பறிகொடுத்தது. இந்த தோல்விக்கு முக்கிய காரணம் கிராமப்புற விவசாயிகளை கண்டுகொள்ளாததால் அவர்களின் தேவையை சரிவர நிறைவேற்றாததால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் பாஜகவை தோற்கடித்தது.
இதுபோன்று நாடு முழுவதும் விவசாயிகள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளார்கள். டெல்லியில் சமீபகாலமாக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால் அதை கண்டு கொள்ளாததால் தற்போது பாஜகவை தேர்ந்தெடுக்க படவில்லை என விவசாயிகள் கூறுகிறார்கள். வருகின்ற மக்களவைத் தேர்தலில் விவசாயிகளின் அதிருப்தியை பெற்றுவிடக் கூடாது என்பதற்காக 26 கோடி விவசாயிகளின் ஆதரவைப் பெற மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
அதில் குறிப்பாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.