அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நேற்று நாகர்கோவிலில் நடந்த கட்சியின் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் லட்சுமணன் அவர்களுக்கு வாக்குகள் சேகரித்தார்.டிடிவி தினகரன் அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் அவரது கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் அவர்கள் மக்களவை தேர்தலில் 37 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். சட்டபேரவை இடைத்தேர்தலிலும் 18 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் எனவும் கூறியுள்ளார்.
சிலர் செய்த சதிதான் இடைத்தேர்தல் வர காரணம் என பழனி சாமி கூறியுள்ளார். அவர் செய்த சதிதான் காரணம். பாலியல் குற்றங்களில் ஆளுங் கட்சினரின் தொடர்பும், பின்னணியும் உள்ளது.யாரையாவது எண்கவுன்டர் செய்து வழக்கை முடித்துவிடுவார்கள். மதச்சார்பற்ற ஒருவர் ஆட்சிக்கு வர நாங்கள் ஆதரவு அளிப்போம் எனவும் டிடிவி தினகரன் அவர்கள் கூறியுள்ளார்.