
இந்தியாஉலகம்தமிழ்நாடுபுதிய செய்திகள்
35 ஆண்டுகளுக்கு முந்தைய விண் கல் கண்டெடுப்பு!!
கோவையில் பண்ணை வீடு ஒன்றில் 35 ஆண்டுகளுக்கு முந்தைய விண் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த புவியியல் ஆய்வு மையம், கண்டெடுக்கப்பட்டது விண்கல்தான் என்பதை உறுதி செய்துள்ளது.
கோவையை சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவர் தனது சகோதரரின் பண்ணை வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வித்தியாசமான கல் ஒன்றை கண்ட அவர், அதனை எடுத்து புவியியல் ஆய்வு மையத்திற்கு கொண்டு சென்றார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்டது விண் கல் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இது 35 ஆண்டுகளுக்கு முன்பு விழுந்திருக்க கூடும் என்றும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு லட்சுமி நாராயணன் கேட்டுக் கொள்ளப்பட்டார். இதையடுத்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் விண் கல்லை லட்சுமி நாராயணன் ஒப்படைத்துள்ளார்.