
30ஆயிரம் கோடி கடனை வெறும் 5000 கோடி கட்டி அடைப்பது எப்படி?
‘Alok textiles’ எனும் கம்பெனிக்கு பதினைந்து ‘பேங்க்’ சேர்ந்து 30 ஆயிரம் கோடி ரூபா கடன் கொடுக்கிறார்கள்.
30 ஆயிரம் கோடி ரூபா கடனை வாங்கிவிட்டு கம்பெனிக்காரர்கள் வட்டியும் கட்டாமல்,அசலும் கட்டாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் செம காண்டான நம்ம ‘பேங்க்’ ஆட்கள்,டேய் வாங்கின கடனுக்கு வட்டி கட்டாமல் ஏமாற்றுகிறீர்களே நீங்களெல்லாம் உருப்படுவீங்களடா என்று கேட்டதிற்கு,தோ! பாருங்க சார் கம்பெனி நட்டமா போய் விட்டது, வட்டியெல்லாம் கட்ட முடியாது, உங்களால முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என அசிங்கப்படுத்தி அனுப்பி விடுகிறார்கள்.
ரொம்ப’டென்சன்’ ஆன நம்ம பேங்க்காரங்கள் நேரா NCLT என்ற தீர்ப்பாயத்திடம் போய் கடன் வாங்கி விட்டு திருப்பி கட்டாமல் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்களென பிராது கொடுக்கிறார்கள்….
அந்த பிராதை பார்த்து விட்டு ‘செம டென்சனான’ NCLT, அந்த
கம்பெனிக்காரர்களை கூப்பிட்டு,யோவ், கடனை கட்ட முடியுமா முடியாதா என்று கேட்கிறார்கள்.அவர்கள், ஏய் ச்சீ ப்பே கட்ட முடியாது என்று சொல்லி NCLTயையும் அசிங்கப்படுத்துகிறார்கள்.வேறு வழி இல்லாமல் NCLT யும், அதுதான் இவ்வளவு அடக்கமா நட்டம் ஆகிவிட்டது,கடன் கட்டமுடியாது என்று சொல்கிறார்களே, அவர்கள் என்ன வைத்துக் கொண்டா இல்லை என்று சொல்கிறார்கள்? நாம் வேண்டுமென்றால், இந்த ‘கம்பெனியை’ திவால்னு அறிவித்து ஏலம் விடலாம்…..ஏலத்தில் வரும் பணத்தை வைத்து, கடனை கட்டிடலாம் என்று ஒரு ‘மாஸ்டர் ப்ளான்’ போடுகிறார்கள்.
அதே மாதிரி மறுநாள், ஏலத்தை நடத்துகிறார்கள். அந்த ஏலத்தில், இந்தியாவின் பரம ஏழை அம்பானி அந்த 30 ஆயிரம் கோடி கடனை, 5000 கோடிக்கு வாங்கிக் கொள்கிறேன் என பெருந்தன்மையாக சொன்னார்.
NCLT ஆபிசர், எல்லா ‘பேங்க்’ ஆட்களையும் கூப்பிட்டு, என்னப்பா 5000 கோடிக்கு கொடுத்து விடலாமா? எனக் கேட்டு வோட்டெடுப்பு நடத்துகிறார்…
வோட்டுப்பதிவில், குறைந்தது 75 சதவீதம் ஆதரவு இருந்தால் தான் ஜெயிக்க முடியும்.ஆனால், கிடைத்தது என்னமோ 72 சதவீத ஆதரவுதான்.அதானால்,அம்பானிவெறும் கையோடு
வீட்டுக்கு போய் விட்டார்.
வீட்டுக்கு போன நமது பரம ஏழை, நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லு என்று கத்திக்கொண்டே ,நமது ஏழைத்தாயின் மகனுக்கு ‘கால்’ பண்ணி,நீதி செத்துவிட்டது, நியாயம் புதைந்து போய் விட்டது என அழுகிறார்.
இதைக் கேட்டு, இரத்தக் கண்ணீர் வடித்த நமது ஏழைத்தாயின்மகன்,உடனே அந்த NCLT ஆபிசர்க்கு ஃபோன்’ பண்ணி, யோவ்!! 75 சதவீத ஆதரவெல்லாம்தேவையில்லை. 66 சதவீதமே போதும் என்று ‘ரூல்ஸ’ மாற்று என்று கோபமாக சொல்கிறார்.மறுநாள் நம்ம பரம ஏழை அம்பானி ,NCLT ஆபிசரிடம் போய், அது தான் 66 சதவீதம் என்று மாற்றி விட்டார்களே கொடுடா கம்பெனியை என்று, 5000 கோடிக்கு அந்தக் ‘கம்பெனியை’ வாங்கி விட்டார்.
5000 கோடியை பதினைந்து ‘பேங்கிற்கும்’ சண்டை போடாமல் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள், 25000 கோடி ரூபாயை காந்தி கணக்கில் எழுதுங்களென நம்ம NCLT’ஆபிசர்’கடையை சாத்தி விடுகிறார்.இதுலே ‘ட்விஸ்ட்’ என்னவென்றால்,30ஆயிரம்கோடி கடன் வாங்கினவனும், (அனில் அம்பானி)5000 கோடி கொடுத்து அந்த கடனை அடைத்தவனும் (முகேஷ் அம்பானி) ஒரு தாய் பிள்ளைகள்….
ஆகமொத்தம் 25000கோடி மக்கள் பணம்… கோவிந்தா,கோவிந்தோ.