பொங்கல் சிறப்பு பேருந்துகள்

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு 75% இருக்கை அனுமதியுடன் பொது பேருந்துகள் இயக்கம் சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2¸100 பேருந்துகளுடன்¸ 4000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10¸300 பேருந்துகளும்¸  பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6¸468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16¸768 பேருந்துகள் இயக்கப்படும். வழித்தட மாற்றம் முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி¸ நாசரத்பேட்டை¸… Continue reading பொங்கல் சிறப்பு பேருந்துகள்

கலைஞர் நினைவு நூலகம்

சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நூலகம் அமைக்கப்படவுள்ளது. இது கடந்த 2010 ஆம் ஆண்டு சென்னை¸ கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது போலவே தற்பொழுது தமிழகத்தின் பிற பகுதியில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் இந்நூலகம் மதுரையில் அமைக்கப்படவுள்ளது. கலைஞர் நினைவு நூலகம் ரூ.114 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

கிரீடம் 2021

கிரீடம் விருது வருடந்தோரும் ஹலோ எப்.எம் என்ற வானொலி நிலையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் ஆளுமை என்ற பிரிவின் கீழ் தமிழக முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ஹலோ எப்.எம் நேயர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது.  இவ்விருது  ஹலோ எப்.எம்-ன் தலைமை செயலாக்க அலுவலர் திரு.எஸ்.சுரேஷ் அவர்களால் (10.01.2022) அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கப்பட்டது.

கோவிட் -19 வேக்சின் பூஸ்டர் டோஸ்

இன்று தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்  சென்னை, காவேரி மருத்துவமனையில் பூஸ்டர் டோஸை செலுத்தி கொண்டார். பூஸ்டர் டோஸை அனைத்து முன்களப் பணியாளர்கள்¸ இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்!

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை

மத்திய அரசின் கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு¸ அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பிளஸ் 1 முதல் பி.எச்.டி படிப்பு வரை (தொழிற்கல்வி¸ தொழில்நுட்ப கல்வி¸ மருத்துவம் உள்பட) பயிலும் இஸ்லாமிய¸ கிறிஸ்துவ¸ சீக்கிய¸ புத்த¸ பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவர்களிடம் இருந்து 2021-22-ஆம் ஆண்டுக்கு மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு மற்றும்… Continue reading மத்திய அரசின் கல்வி உதவித் தொகை

பிரதமர் உத்தரவு¸ கோர்ட் தடை

உலக நம்பர் 1 வீரர் டிஜோகோவிக் நவம்பரில் ஆஸ்திரேலியா ஓபன் டென்னீஸில் கலந்து கொள்ள விசா அப்ளை செய்கிறார். நவம்பர் 18-ல் விசாவை ஆஸ்திரேலியா அரசு அனுமதி வழங்கியது. டிசம்பர் 22-ல் கொரோனா டெஸ்ட் எடுக்கப்படுகிறது. அதில் நெகடிவ் என வருகிறது. டிசம்பர் 30-ல் ஆஸ்திரேலியா அரசால் சிறப்பு சலுகையின் மூலம் ஆஸ்திரேலியா வர அனுமதி வழங்கப்பட்டது. ஜனவரி 1¸ 2022-ல் குவாரண்டை இல்லாத சிறப்பு சலுகை மூலம் ஆஸ்திரேலியா வர அனுமதிக்கப்படுகிறார். ஜனவரி 2-ல் என்ட்ரீ… Continue reading பிரதமர் உத்தரவு¸ கோர்ட் தடை

ஹோட்டல் தொழிலில் அம்பானி

இந்தியாவின் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி அவர்கள் தனது முதலீடுகளை ஹோட்டல் தொழிலில் ஈடுபத்தி உள்ளார். ஆனால்¸ இந்தியாவில் உள்ள ஹொட்டல்களில் அல்ல. வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற ஹோட்டல்களில் தனது பங்குகளை முதலீடு செய்து ஆரம்பிக்க உள்ளார். கடந்த நான்கு வருடங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் 14 சதவீகிதமும்¸ 80 சதவிகிதம் மீடியா மற்றும் தொலைத்தொடர்பு போன்ற நிறுவனங்களில் தனது முதலீடுகளை செய்து உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 592 கோடிகளை பிரிட்டனின் கிளப்ஸ்ரோக் பார்க்கில் முதலீடு செய்தார்.… Continue reading ஹோட்டல் தொழிலில் அம்பானி

பொழப்பற்ற அரசியல்வாதிகளா?

இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஓடியும். நமது மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் இன்னும் கூட தீர்க்கப்படவில்லை. அந்த அந்த மாநிலத்தில் அவர்கள் ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு பேச்சு¸ எதிர் கட்சியாக இருக்கும் பொழுது ஒரு பேச்சு இதுதான் அவர்களின் அரசியல். இரண்டு மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளை தீர்க்க எந்த மத்திய அரசும் வரவில்லை. ஏனென்றால் பிரச்சினை தீர்ந்து விட்டால் அவர்களுக்கு பொழப்பு இல்லை அல்லவா? அதுதான் நிதர்சன உண்மை¸ மத்திய அரசால் ஒரு நாள்… Continue reading பொழப்பற்ற அரசியல்வாதிகளா?

வல்லரசுகள் மோதல்?

ரஷ்யாவுக்கும்¸ அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவு உக்ரைன் விவாகரத்தில் மோதலாக மாறிவுள்ளது. சோவியத் யூனியனாக இருந்தபொழுது அதன் ஒரு மாநிலமாக இருந்த உக்ரைன் பிரிந்து சென்று தனி நாடானது. இப்பொழுது தனி நாடாக உருவெடுத்து செயல்பட்டு வருகிறது. ரஷ்யா தனது படைபலத்தை அதன் எல்லையோரம் குவித்து வருகிறது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இது சம்பந்தமாக ரஷ்யா அதிபரும்¸ அமெரிக்கா அதிபரும் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஆனால்¸ இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ரஷ்யா… Continue reading வல்லரசுகள் மோதல்?

ஆஸ்திரேலியா செர்பியா சண்டை?

கோவிட் காலத்தில் நாடு முழுவதும் ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவியிருந்த நிலையில், உலக அரங்கில் விளையாட்டு துறையில்; கோவிட் ஆதிக்கம் கடுமையாக இருந்தது. ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இதில் முன்னனி வீரர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை¸ ஆதலால் களையிழந்து போய்விட்டது ஓபன் டென்னிஸ். தடுப்பு ஊசிக்கு எதிரான கொள்கை கொண்டவரும்¸ உலக நம்பர் ஒன் வீரருமான செர்பியா நாட்டை சேர்ந்த நோவக் டிஜோகோவிக்-ஐ ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் வாரியம் தொடர்பு கொண்டு அவரை… Continue reading ஆஸ்திரேலியா செர்பியா சண்டை?