2020 ஆம் ஆண்டு மகிந்திரா நிறுவனம், நிறைய எஸ்.யூ.வி ரக கார்களை சந்தையில் இறக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு சான்றாக தற்போது சில படங்கள் கிடைத்துள்ளன. மகிந்திரா வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் மிகவும் பிரபல காரான ‘தார்’, இந்த மாதத் தொடக்கத்தில் சாலைகளில் பயணம் செய்ததைப் பார்க்க முடிந்தது.
இந்நிலையில் மிகவும் பிரபலமான ‘ஸ்கார்பியோ’ காரின் சில புகைப்படங்கள் தற்போது லீக் ஆகியிருக்கின்றன. ஸ்கார்பியோ-வின் இந்த புதிய வகையில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் எனவும் 2020-ல் அது சந்தைக்கு வரும் எனவும் சொல்லப்படுகிறது.