பொறுப்பாளர்கள் அறிவிப்பு

அதிமுக சார்பில் இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களை அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

வேட்பாளர் துணை முதல்வர் சந்திப்பு

அதிமுக சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளர் துணை முதல்வரை சந்தித்தார்.

ஓ பி எஸ் தனபால் சந்திப்பு

சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபால் ஓ பி எஸ் நேரில் சந்தித்து ஆதரவு   தெரிவித்துள்ளார் இது குறித்து ஓ பி எஸ் ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

கீழடி ஆய்வுகள் அதிர்ச்சி

கீழடி அகழாய்வுகள் புதிய தகவல்கள்  கொண்டுள்ளன  அது பழைய தமிழர்களின் தொன்மையையும் பெருமையும்  உள்ளது இது குறித்து தி மு க தலைவர் மு க ஸ்டாலின் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் சமஸ்க்ரிதமா ?

தி மு க தலைவர் மு க ஸ்டாலின்  அண்ணா பல்கலைக்கழகத்தில் பாட திட்டம் முறையில் ஏற்பட்டுள்ள  குறித்து தனது ட்விட்டரில்  தெரித்துள்ளார்.

டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை? ஸ்டாலின் கண்டிப்பு

டெங்குவைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசின் அலட்சியத்தால் ரோகித், மகாலட்சுமி என்ற இரு பச்சிளங்குழந்தைகளின் உயிர் பறிபோயிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது!, #Dengue வைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு தனது ட்விட்டரில் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

இரயில்கள் தனியார்வசம்? எதிர்ப்பு

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களைப் பராமரிக்கும் பணிகளைத் தனியாரிடம் கொடுத்து சிறப்பாக செயல்படுத்துவதில் தவறில்லை.அதேநேரத்தில்,ரயில்பாதைகளையும்,ரயில்களை இயக்குவதையும் தனியார்வசம் ஒப்படைப்பது சரியான முடிவாக இருக்காது என  டி டி வி  தினகரன்  தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் 

 

மு.க.ஸ்டாலின் கடிதம்

தி மு க  தலைவர்  மு.க.ஸ்டாலின் அவர்கள், மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் (தனிபொறுப்பு) திரு. பிரகலாத் சிங் பாட்டீல் அவர்களுக்கு, கீழடியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எழுதியுள்ள கடித விவரம்:

தமிழர்களின் சங்க காலம் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்கிற அரிய கண்டுபிடிப்பை, கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வின் மூலம் அறிந்து கொண்டது தொடர்பாக, உங்களின் மேலான கவனத்திற்கு இதை நான் கொண்டு வருகிறேன். இந்த அரிய கண்டுபிடிப்பானது, கலாச்சார வரலாற்றில், மிகப் பெரும் திருப்புமுனை என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.

தமிழக தொல்லியல் துறை, `கீழடி – வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’ என்கிற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழ் எழுத்து வடிவங்கள் கி.மு.6-ஆம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது என்பதற்கு உரிய சாட்சியமாக அமைந்துள்ளது.

கீழடியில் நடைபெற்ற நான்காம் கட்ட அகழ்வாய்வில், தமிழர்கள் இலக்கியத்திலும் எழுத்துக் கலையிலும் 2600 ஆண்டுகளுக்கு முன்னரே வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர் என்பதை, மறுக்கமுடியாத சான்றாகத் தெரிய வந்துள்ளது.

பழங்கால தமிழர் நாகரிகம் என்பது, உலகின் மிகப் பழமையான நாகரிகம் என்று சொல்லப்பட்டு வந்த பிறகு, மேலும் வலு சேர்க்கும் வகையில் இது உள்ளது. அத்துடன் இந்திய வரலாற்றையே, இனி தமிழர்கள் வரலாற்றிலிருந்து தான், முன்னோக்கி பார்க்க வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

கீழடியில், நான்காவது முறையாக நடத்தப்பட்ட அகழ்வாய்வின் கண்டு பிடிப்புகள், கரிம மாதிரிகள் உள்ளிட்டவைகள், அமெரிக்காவிலும், இத்தாலியிலும் உள்ள புகழ் வாய்ந்த சோதனை கூடங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில், வேளாண் தொழில்களில் காளைகள் – மிருகங்களை, தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் கலாச்சார பாரம்பர்ய நிகழ்வுகள், வேளாண் சமூக அமைப்புகள் அப்போதே இருந்து வந்துள்ளதற்கான தேவையான அனைத்து சான்றுகளும், அந்த அகழ்வாய்வின் கண்டுபிடிப்பில் இருந்ததாகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப் பட்டவைகளை வைப்பதற்காக, உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப் பட வேண்டும். இது குறித்து மாநிலங் களவையிலும், தற்போது மக்களவையிலும், நாடாளுமன்ற கழகக் குழுத் துணைத் தலைவர் கனிமொழி அவர்கள், நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்.

கீழடிக்குப் பிறகு அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலம் சனோவ்லி என்கிற இடம் பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதைப்போல கீழடி அகழாய்வுப் பகுதியும் பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு வரும், வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே இருக்கும் சென்னை மண்டல அலுவலகத்துடன் தென் தமிழகத்திற்காக, மதுரையிலும், தொல்லியல் துறை அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

கீழடியில், அகழாய்வுப் பணிகள் துவக்கப்பட்ட அதே கால கட்டத்தில், குஜராத் மாநிலம் வாட் நகரிலும் அகழாய்வுப் பணி தொடங்கப்பட்ட நிலையில், அங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட திட்ட மிட்டுள்ளதைப் போல, கீழடியிலும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை, பார்வைக்கு வைக்க அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வேண்டும் என்றும், நான் கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க உதவிட அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; மதுரையில் தொல்லியல் துறையின் சார்பில் கிளை அலுவலகம் ஏற்படுத்த வேண்டும்; கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்; என்று மத்திய அரசிடம் மீண்டும் நான் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

DRDO ல் ஸ்டெனோகிராஃபர் வேலை

224 ஸ்டெனோகிராஃபர் , கிளெர்க்,  12TH, 10TH On 13/09/2019,

12TH, 10TH ஸ்டெனோகிராஃபர் , கிளெர்க்:

1. Post Name: ஸ்டெனோகிராஃபர் Grade-II (English Typing) – Pay at level 4 (Rs 25500-81100)

2.  தகுதி : 12th Class   recognised Board or University.

3. தேவையான தகுதிகள்: 10 minutes @ 80 words per minutes.

Transcription: 50 minutes (English) (only on computers).

வயது : 18 – 27 Years

கட்டணம் :  Rs. 100/- (Rupees one hundred only)

. பெண்கள் மற்றும்   SC/ST/PWD/ESM  கட்டண விலக்கு  அளிக்கப்பட்டுள்ளது

T20 மற்றும் டெஸ்ட் அணிகள் விவரம்

இங்கிலாந்து  நியூஸிலாந்து  ஆரம்பமாக  உள்ளன அதன் ஒரு  அணி தனது டி20 மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான வீரர்களை அறிவித்துள்ளது அதன் விவரம்  பின்வருமாறு….

டி20 அணி வீரர்கள்:-

1. மோர்கன், 2. பேர்ஸ்டோவ், 3. டாம் பான்டோன், 4. சாம் பில்லிங்ஸ், 5. பேட் பிரவுன், 6. சாம் குர்ரன், 7. டாம் குர்ரன், 8. ஜோ டென்லி, 9. லெவிஸ் கிரேகோரி, 10. கிறிஸ் ஜோர்டான், 11. சாகிப் மெஹ்மூத், 12. தாவித் மலன், 13. மேத்யூ பார்கின்சன், 14. அடில் ரஷித், 15. ஜேம்ஸ் வின்ஸ்.

 

நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி வீரர்கள் வருமாறு:-

ஜோரூட் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டுவர்ட் பிராட், பர்னஸ், பட்லர், கிரவுலி, சாம் குரன், டென்லி, ஜேக் லீச், சகீப்மகமூத், பார்க்கின்சன், ஒலி போப், டோமினிக் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், கிரிஸ் வோக்ஸ்.