உலகக் கோப்பை 2019: பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் மோதல்!

சர்ஃப்ராஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணி 2017ம் ஆண்டு சாம்பியன் கோப்பையை வென்ற நம்பிக்கையோடு 2019 உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ளது. இன்றைய போட்டியில் அந்த அணி அதிரடி வீரர்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் சேவைக்கான தேர்வினை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தகுதியுள்ள பொறியியல் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு 30 மட்டுமே. எஸ்சி, எஸ்டிம் எம்பிசி/டிசி, பிசி மற்றும் பிசிஎம், விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழியில் போதுமான அறிவு இருக்க வேண்டும். விரும்புகிறவர்கள் tnpsc.gov.in. என அதிகாரப்பூர்வ வளைத்தளத்தில் தங்களின் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும். எழுத்து மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு… Continue reading தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

திரு K.அண்ணாமலை அவர்கள் அதிமுகவில் இணைத்தார்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று,நேரில் சந்தித்து அமமுக கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.K.அண்ணாமலை அவர்கள் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மோடி அரசில் இடம்பெற்ற 24 கேபினட் அமைச்சர்களின் ! – விவரம் உள்ளே!!

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் மாலை 7 மணி அளவில் நடைபெற்றது இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோரும், பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். முதலில் பிரதமராக நரேந்திர மோடி உறுதி எடுத்துக் கொண்டார். இதையடுத்து 24 பேர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களின் விவரம்- 1. ராஜ்நாத் சிங். 2. அமித் ஷா 3.… Continue reading மோடி அரசில் இடம்பெற்ற 24 கேபினட் அமைச்சர்களின் ! – விவரம் உள்ளே!!

அக்னி நட்சத்திரம் நிறைவு:

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரக் காலம் மே 3-ஆம் தேதி தொடங்கியது. அதன் பிறகு, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. பல மாவட்டங்களில் அனல் காற்று வீசியது. இதனால் கடந்த ஒரு மாதமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், அக்னி நட்சத்திரக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதன்பிறகு, வெப்பநிலை படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, நேற்று அனல் காற்றுடன் கடும் வெயில் காணப்பட்டது. எனினும், மாலை நேரத்தில் ஒரு… Continue reading அக்னி நட்சத்திரம் நிறைவு:

நேசமணி கதாபாத்திரத்திற்கு பிராத்தனை செய்யும் ரசிகர்கள்!

சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்த ஃப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் கட்டட வேலைகளைச் செய்யும் கான்ட்ராக்டர். கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில் வடிவேலுவின் தலையில் ரமேஷ் கண்ணா சுத்தியலைப்போடுவதை நகைச்சுவையாக சித்திரித்திருப்பார் இயக்குநர். அந்த புகைப்படம் தற்போது உலக அளவில் ப்ரே ஃபார் நேசமணி என்கிற ஹாஷ்டாக் ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது இந்த போட்டோ வைரலாக என்ன காரணம். ஃபேஸ்புக்கில் உள்ள Civil… Continue reading நேசமணி கதாபாத்திரத்திற்கு பிராத்தனை செய்யும் ரசிகர்கள்!

அதிமுகவில் யாருக்கு மத்திய அமைச்சர் பதவி?

அதிமுகவில் யாருக்கு மத்திய அமைச்சர் பதவி? ஜெயக்குமார் பதில்மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார். மாலை பதவியேற்க உள்ள நிலையில், மோடி அமைச்சரவையில் யார் யார் பங்கேற்கிறார், யார் புறக்கணிக்கப்படுகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில், தமிழகத்தில் அதிமுகவில் அமைச்சரவையில் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வைத்திலிங்கம் அமைச்சரவையில் இடம்பெறலாம்… Continue reading அதிமுகவில் யாருக்கு மத்திய அமைச்சர் பதவி?

அஜித்தின் அடுத்த படம் தல60

போனிகபூர் தயாரிப்பில் “நேர்கொண்ட பார்வை” படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை வித்யாபாலன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் இன்னும் பலர் நடித்து வருகின்றனர். இப்படம் அஜித்தின் 59வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்தையும் எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். அஜித்திடம், வினோத் அரசியல் கலந்த திரில்லர் கதை மற்றும் ஆக்‌ஷன் கதை ஒன்றையும் கூறினாராம். அரசியல் கதையில் விருப்பமில்லாத அஜித், ஆக்‌ஷன்… Continue reading அஜித்தின் அடுத்த படம் தல60

உலகின் மிகப்பெரிய கட் அவுட்

இந்தியாவில் சினிமாவையும், சினிமா கலைஞர்களையும் கொண்டாடுவது போல் மக்கள் கொண்டாடும் ஒரு விஷயம் வேறில்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு சினிமாவை நேசிக்கக்கூடிய ரசிகர்கள் இந்தியாவில் அதிகம். ஒவ்வொரு முன்னணி நடிகர்களின் திரைப்படம் வரும் பொழுது ஊர் முழுக்க போஸ்டர்கள், பேனர்கள், உயர்ந்த கட்அவுட்டுகள் வைத்து அந்த கலைஞனை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். அந்த விதத்தில் இந்த ஆண்டு தொடங்கத்தில் உலகிலேயே நீளமான கட்அவும் அஜித்திற்கு அவருடைய ரசிகர்கள் வைத்து கொண்டாடினார்கள். இவருக்கு முன்பு கேரளாவில் விஜய்க்கு… Continue reading உலகின் மிகப்பெரிய கட் அவுட்

உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் எடுக்கப் போகும் புதிய அவதாரம்..!

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இன்று முதல் இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இந்த உலகக் கோப்பையில் ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர், வர்ணனையாளராக களமிறங்க உள்ளார். இதன் மூலம் தனது கிரிக்கெட் வாழ்வில் புதிய இன்னிங்ஸை சச்சின் தொடங்க இருக்கிறார். இன்று லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து – தென் ஆப்ரிக்கா நாடுகளுக்கு இடையில் தொடரின் முதல் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியின் போதே டெண்டுல்கர், வர்ணனையாளராக பங்கேற்க உள்ளார். மேலும் சச்சின், இன்று… Continue reading உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் எடுக்கப் போகும் புதிய அவதாரம்..!