சாம்பியன் ஆன பார்சிலோனா அணி

ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனாவில் நடைபெற்ற லாலிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணியும், லெவன்டி அணியும் மோதின. இந்த ஆட்டத்தின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் 62 வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் லா லிகா சாம்பியன் பட்டத்தை பார்சிலோனா அணி 8வது முறையாக கைபற்றி உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள்

மே 19 அன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற இடைதேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் விவரம்.

இலங்கை ஜனாதிபதியின் உத்தரவு

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பின் எதிரொலியாக இலங்கை ஜனாதிபதியின் உத்தரவு

வீரர்களை பாராட்டும் டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் தமிழக வீராங்கனை- வீரருக்கு வாழ்த்துகள்! ஆசிய விளையாட்டுப் போட்டியின் வலு தூக்கும் பிரிவில் தங்கம் வென்றிருக்கும் சென்னையைச் சேர்ந்த ஆர்த்தி அருண், வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ள திருச்சி மேலகல்கண்டார் கோட்டை அ.மணிமாறன் ஆகியோரைப் பாராட்டி மகிழ்கிறேன்.இவர்கள் சர்வதேச அளவில் மேலும் பல பதக்கங்களை வென்று தேசம் போற்றும் சாதனைகளைப் புரிந்திட வாழ்த்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.

 

 

வன்மையாக கண்டிக்கும் டிடிவி தினகரன் அவர்கள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் பாதிக்கும் என்ற காரணத்தால்தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கெயில் திட்டத்திற்காக விவசாய நிலங்களில் குழாய் பதிக்கப்படுவதை எதிர்த்தார்கள்.ஆனால் மூச்சுக்கு முந்நூறு முறை ‘இது அம்மாவின் ஆட்சி’ என்று சொல்லி ஏமாற்றும் இவர்கள், அம்மா எதிர்த்து வந்த திட்டங்களை தொடர்ந்து அதிகாரிகளையும், காவல்துறையினரையும் குவித்து செயல்படுத்துகிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக அப்பணிகளை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி,உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழ்நாடு சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் காவல் ஆய்வாளராக இருந்த காதர் பாஷா உள்ளிட்ட பல அதிகாரிகள்  பழங்கால சிலைகளை கடத்தல் கும்பல்களுக்கு விற்றதாக குற்றசாட்டு எழுந்தது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை துவங்கிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி  பொன் மாணிக்கவேல் திடீர் என இரயில்வே ஐ.ஜி யாக தமிழக அரசால் பணிமாற்றம் செய்யமாட்டார்.இந்நிலையில் காவல் துறை ஐ.ஜி யாக இருந்து ஓய்வு பெற்ற நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து காவல் துறை அதிகாரிகள் 66 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுக்களை விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி அதிரடியாக இன்று தள்ளுபடி செய்தது. தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்க பட்ட நிலையில் தற்போது காவல் துறை அதிகாரிகளின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடதக்கது.

தமிழக வீரரை வாழ்த்தும் டிடிவி தினகரன் அவர்கள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியின் 4 x 400 மீ  கலப்பு தொடர் ஓட்டப்பந்தயத்தில்  வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவ் உள்ளிட்ட இந்திய அணியினருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றும் திருச்சி, லால்குடியைப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ், இதன் மூலம் தமிழகத்திற்குப் பெருமை தேடித்தந்திருக்கிறார். எதிர்காலத்தில் அவர் நிறைய வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

 

உலக கோப்பைலும் தாக்கத்தை ஏற்படுத்துமா ரஸ்ஸல் புயல்?

அடுத்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்கும் உலக கோப்பைக்கான விண்டீஸ் அணி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.ஜேசன் ஹோல்டர் தலைமையிலான அந்த அணியில் ரஸ்ஸல் இடம்பெற்று உள்ளார். தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் கலக்கி வரும் ரஸ்ஸல் உலக கோப்பைலும் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.

அனுபவமிக்க நட்சத்திர வீரர் பொலார்டு அணியில் இடம்பெறாதது அந்நாட்டு ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தபோதிலும் கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், லீவிஸ், நிகோலஸ் பூரன், ஹெட்மயர் என பேட்டிங்கில் வலுவான அணியாகவே விண்டீஸ் உலககோப்பையில் களம் இறங்குகிறது.


உலக கோப்பைக்கான விண்டீஸ் அணி முழு விவரம்:

ஹோல்டர் (கேப்டன்), ஆண்ட்ரியூ ரசல், ஆஸ்லெ நர்ஸ், கார்லஸ் பிராத்வொய்ட், கிரிஸ் கெய்ல், டேரன் பிராவோ, ஈவன் லீவிஸ், ஃபேபியன் ஆலன், கீமர் ரோச், நிக்கோலஸ் பூரன், ஓஸ்னே தாமஸ், ஷாய் ஹோப், சனோன் கேப்ரியல், செல்டன் காட்ரல், சிம்ரன் ஹெய்ட்மர்.