சி.வி. ராமன் வாழ்க்கை சரிதம்

இந்தியா உருவாக்கிய மிகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுள் ஒருவர், சி.வி. ராமன் ஆவார். அவரது முழு பெயர் சந்திரசேகர வேங்கட ராமன். அவரது படைப்புகளில் முன்னோடியான ஒளிச்சிதறளுக்கு, சி.வி. ராமன் அவர்கள் 1930 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். முழுமையாக இந்தியாவிலேயே படித்து நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய அறிஞர் என்ற பெருமைப் பெற்ற சர். சி. வி. ராமன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது கண்டுப்பிடிப்புகள் பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு:

சந்திரசேகர வெங்கட ராமன், தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 7, 1888 ஆம் ஆண்டு பிறந்தார். சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மா அவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்:

சந்திரசேகர வேங்கட ராமன் அவர்களின் தந்தை கணிதம் மற்றும் இயற்பியலில் ஒரு பேராசிரியராக இருந்தால், அவர் வீட்டில் ஒரு கல்வி சூழலைக் கொண்டிருந்தார். அவர் 1902 ஆம் ஆண்டு, சென்னையிலுள்ள பிரெசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். 1904ஆம் ஆண்டு, பி.ஏ பட்டபடிப்பல் தேர்ச்சி பெற்று முதல் மாணவானக திகழ்ந்த இவர், இயற்பியலுக்கான தங்கப்பதக்கதையும் பெற்றார். அதிக மதிப்பெண்கள் பெற்று 1907 ஆம் ஆண்டு எம்.ஏ. பட்டம் பெற்றார்

சி. வி.ராமனின் ஆராய்ச்சிகள்:

இந்தியாவில் அந்த காலக்கட்டத்தில் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது. அதனால், 1907 ஆம் ஆண்டு, ராமன் அவர்கள் இந்திய நிதித் துறையில் சேர்ந்தார். அவரது அலுவலக நேரம் முடிந்த பிறகு, அவர் கல்கத்தாவில் அறிவியல் அபிவிருத்திக்கான இந்திய சங்கத்தின் ஆய்வகத்தில் அவரது பரிசோதனை ஆய்வை மேற்கொண்டார். அதே ஆய்வகத்தில் அவர் ஒலியியல் மற்றும் ஒளியியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.

விருதுகளும், அங்கீகாரங்களும்:

  1917- இல் கல்கத்தா பல்கலைக்கழகம் சி. வி. ராமன் அவர்களுக்கு இயற்பியலில் ‘ சார் தரகநாத் பாலித் பேராசிரியர்’ என்ற பதவியை வழங்கியது அடுத்து பதினைந்து ஆண்டுகளாக அங்கு அவர் இருந்த காலத்தில் அவரது ஒளியியல் மற்றும் ஒளி சிதறலுக்கான ஆராய்ச்சிப் பணி உலக அளவிலான அங்கிகாரத்தை பெற்றது. லண்டன் ராயல் சொசைட்டியில் அவர் 1924ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1929 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசால்  இவருக்கு “நைட் ஹீட்” என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியாரால் ‘சர்’ பட்டமும் அளிக்கப் பட்டது. 1930ல், தனது இயற்பியலுக்கான ஒளி சிதறல் ஆராய்ச்சிக்காக சர் சி.வி. ராமன் அவர்களுக்கு  ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு “ராமன் விளைவு” என்று பெயரிடப்பட்டது.

பிறப் பணிகள்

1930ல் பெங்களூரில் புதிதாக நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகத்தில், சி.வி. ராமன் அவர்கள் இயக்குனராக சேர்ந்தார். பின்னர், இயற்பியல் பேராசிரியராக அங்கு இரண்டு வருடங்கள் பணியில் தொடர்ந்தார். சார் சி.வி.ராமன் நடத்திய சில ஆராய்சிகள்: சோதனை மற்றும் கோட்பாட்டு ஆய்வுகளானது.

1947 ஆம் ஆண்டில், அவர் சுதந்திர இந்தியாவின் புதிய அரசாங்கத்தில் முதல் தேசிய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் இருந்து  ஓய்வு பெற்றார். பின்னர், ஒரு வருடம் கழித்து,  பெங்களூரில் ‘ராமன் ஆராய்ச்சி நிலையம்’ நிறுவி, அங்கு அவர் தனது மரணம் வரை பணிபுரிந்தார்.

இறப்பு

சர் சி.வி. ராமன் அவர்கள், நவம்பர் 21, 1970 அன்று இறந்தார்.

 

டிடிவி தினகரன் அவர்களின் வாழ்த்து செய்தி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் பனிரெண்டாம் வகுப்பு (ப்ளஸ் டூ) பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். அவர் கூறிய வாழ்த்து செய்தியில் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு உங்களை அழைத்துச்செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும் இத்தேர்வினை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.பிரகாசமான எதிர்காலம் உங்கள் ஒவ்வொருவருக்கும் காத்திருக்கிறது . உங்களின் கனவுகளை எட்டிப்பிடித்துச் சாதனையாளராக மிளிர மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். இறையருளிடம் உங்களுக்காக வேண்டுகிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.

அபினந்தன் நாளை விடுவிப்பு

நேற்று பாகிஸ்தான் விமானத்தை துரத்தி சென்ற இந்திய விமானம் சுட்டு விழ்த்த பட்டதில் இந்திய வீரர் அபினந்தன் பாகிஸ்தான் வீரர்களால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்தியா விமானி அபினந்தனை நாளை விடுவிக்க உள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அறிவித்து உள்ளார்.

நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு?

சென்னை தாம்பரம் மாடம்பாக்கத்தில் விமான வீரர் அபிநந்தன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களது பெற்றோர்களிடம் ஆறுதல் தெரிவித்து உள்ளார் தமிழ்நாடு பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.அபிநந்தன் அவர்கள் நலமுடன் விரைவில் திரும்ப மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது எனவும் நடவடிக்கைகள் வெற்றி பெற நாமும் பிராத்திப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.

போர் வீரனை கண்ணியமாக நடத்த வேண்டும் _ விவேக்

நேற்று பாகிஸ்தான் விமானத்தை  துரத்தி சென்ற இந்திய விமானம் சுட்டு விழ்த்த பட்டதில் இந்திய வீரர் அபினந்தன் பாகிஸ்தான் வீரர்களால் கைது செய்யப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் விவேக் எப்பாடு பட்டாவது விமானப்படை வீரர் அபி நந்தனை பாதுகாப்பாக மீட்டு வரல் வேண்டும் என்பதே நம் இறைஞ்சல்.போர் வீரனை கண்ணியமாக நடத்தவேண்டும் என்பது விதி. ஆனால் அங்கு அது நடக்காதோ என்பதே நம் அச்சம் என தன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

 

ஒன் மேன் ஷோ காட்டிய மேக்ஸ்வெல்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியானது பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 190 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 38 பந்துகளில் 72 ரன்களும், ராகுல் 27 பந்துகளில் 46 ரன்களும், தோனி 23 பந்துகளில் 40 ரன்களும் குவித்தனர்.

அடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 194 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அந்த அணியின் மேக்ஸ்வெல் 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உதவியுடன் 55 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்று அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

 

அர்சி ஷார்ட் 28 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைபற்றி உள்ளது. சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

46 சிக்ஸர்கள் பறக்கவிடப்பட்ட ஒரு நாள் போட்டி

வெஸ்ட்இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது ஒரு நாள் போட்டியானது ஸ்ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 418 ரன்கள் குவித்தது.

ருத்ர தாண்டவம் ஆடிய இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் 12 சிக்ஸர்கள்,13 பவுண்டரிகள் உதவியுடன் 77 பந்துகளில் 150 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் 88 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து காட்ரெள் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஹேலஸ் 82 ரன்களும், பேட்ஸ்டோ 56 ரன்களும் குவித்தனர்.

அடுத்து 419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்கம் முதலே அடித்து ஆடியது. அந்த அணியின் கிறிஸ் கெய்ல் 97 பந்துகளில் 14 சிக்ஸர்கள்,11 பவுண்டரிகளுடன் 162 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.

டேரன் பிராவோ 61 ரன்கள் எடுத்து மார்க் உட் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். கடைசி மூன்று ஓவர்களில் 32 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரே ஓவரில் நான்கு விக்கெட்களை இழந்து 29 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வி அடைந்தது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நர்ஸ் 43 ரன்களிலும் பிரத்வெயிட் 50 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறியது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 48 ஓவர்களில் 389 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ஆட்ட நாயகன் விருதை இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் பெற்றார். இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் 24 சிக்ஸர்களும், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 22 சிக்ஸர்களும் அடித்தது குறிப்பிடதக்கது.

மனம் மிகவும் வேதனைப்படுகிறது _ டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் திரு.அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்  என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது எனவும் அதிலும், அவரை பாகிஸ்தான் இராணுவம் விதிகளை மீறி காயப்படுத்துவதுபோல் நடந்துகொள்ளும் காணொளியைக் காணும்பொழுது மனம் மிகவும் வேதனைப்படுகிறது என கூறியுள்ளார்.

மேலும் அவர் மத்திய அரசு எவ்வித காலதாமதமின்றி சர்வதேச விதிகளுக்குட்பட்டு அபிநந்தனை மீட்டுக் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்துகிறேன். அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்பிட ஒவ்வொரு இந்தியரும் பிரார்த்திக்கும் இந்நேரத்தில் அவரது குடும்பத்தினர் மனதைரியத்துடன் இருக்கும்படி வேண்டிக்கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.

நேற்று பாகிஸ்தான் விமானத்தை  துரத்தி சென்ற இந்திய விமானம் சுட்டு விழ்த்த பட்டதில் இந்திய வீரர் அபினந்தன் பாகிஸ்தான் வீரர்களால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தேதி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்கவில் மே மாதம் எட்டாம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதாக அதிபர் சிரில் ராமபோசர் அறிவித்து உள்ளார். மேலும் அன்று வாக்காளர்களுக்கு ஏதுவாக பொது விடுமுறை தினம் அறிவிக்கபட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் கீழ் சபையில் பெருபான்மை பெறும் கட்சியின் தலைவரே அதிபராக தேர்ந்தெடுக்கபடுவார்.

சீனா, இந்தியா, ரஷ்யா மாநாட்டில் சுஷ்மா

சீனாவில் வூஜென் நகரில் நடைபெற்று வரும் சீன, இந்தியா, ரஷ்யா மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சுஷ்மா ஜெய்ஷ் .இ. முகமது பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவு அளிக்கிறது எனவும் காஷ்மீரில் உள்ள புல்மாவா மாவட்டத்தில் நடந்த தாக்குதலுக்கு பிறகும் பாகிஸ்தான் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுஷ்மா குற்றம் சாட்டியுள்ளார்.