விசா தேவையில்லை

இந்த வருடத்திற்க்கான மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலில் முதலிடத்தில் சிங்கப்பூர் கைப்பற்றி உள்ளது. மற்ற நாடுகளின் விபரம்.

தரம் நாடுகள் விசா இல்லாமல் செல்லும் நாடுகளின் எண்ணிக்கை
1 சிங்கப்பூர் 159
2 ஜெர்மனி 158
3 சூவிடன்,கொரியா 157
4 டென்மார்,இத்தாலி,பிரான்ஸ்.ஸ்பெயின்,

நார்வே,ஜப்பான்,இங்கிலாந்து

156
5 சூவிஸ்,நெதர்,பெல்ஜியம்,ஆஸ்திலியா,

போர்ச்சுகல்

155
6 மலேசியா,அயர்லாந்து,அமெரிக்கா 154
7 இந்தியா 66

 

மொத்தம் 193 நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை பெற்றது. குடிமக்கள் பராமரிப்பு மற்றும் திட்டமிடுதல் நான்காவது இடத்தை பிடித்ததுள்ளது. ஜெர்மனி இதில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதில் இந்திய குடிமக்கள் 66 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். கடந்த வருடம் 75-ம் இடத்தில் இருந்தது.

 

ராஜபக்சேவுக்கு அதிர்ச்சி?

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்குக் குழப்பங்கள் அதிகரித்து உள்ளது.அங்கு பதவி ஆசைபிடித்த ராஜபக்சே,சிறிசேனா அரசு மக்கள் விரோத போக்கை கடைப்பிடித்து வருகிறது. அவர்கள் சட்டவிதிகளைக் காற்றில் பறக்க விடுக்கிறார்கள்.

இலங்கை அதிபர் ராஜபக்சேயை பிரதமரக அறிவித்தார். ஆனால் பாரளமன்ற சபாநாயகர் விக்கிரமசிங்கை பிரதமரக அரிவித்துள்ளார்.இதனால் அங்குக் கடும் குழப்பத்தின் விளைவாகத் தெளிவற்ற நிலையில் அரசாங்கம் சென்று கொண்டுள்ளது. ராஜபக்சே கூட்டணிக்கு எதிராக நேற்று மாபெரும் பேரணி நடந்தது. அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது மதியம் முதல் அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டது.இது ராஜபக்சேவுக்குக் கடும் பின்னடைவு என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்க ராஜபக்சே பதவிக்கு வருவதை விரும்பவில்லை என தெரிகிறது.

வேகப்பந்து வீச்சாளருக்கு எச்சரிக்கை

வளர்ந்து வரும் இளம் வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமதுக்கு உலகக் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வெஸ்ட் இண்டிஸ் வீரர் சாமுவேல்ஸ் அவுட்டாகி சென்ற பொழுது உணர்ச்சி பிழம்பாகத் திகழ்ந்தார் கலீல் அவர்கள் தனது உணர்ச்சிகளை மிகவும் ஆக்ரோஷமான முறையில் தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார். இது கிரிக்கெட் விதிமுறைகளைத் தாண்டிய செயலாகச் சர்வதேச கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. தனது தவறை ஒப்புக்கொண்டதால் எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டு உள்ளது

வாழைப்பழம் உண்டா இல்லையா?

இந்திய கிரிக்கெட் நிர்வாகக் குழுவும் அணி நிர்வாகமும் இணைந்து ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தனர். அதில் 2019-ல் நடைபெறும் உலககோப்பை வெல்வது எவ்வாறு, அது சம்பந்தமான பலம்,பலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த காலங்களில் இங்கிலாந்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறிந்து தெளிவாக விவாதித்து உள்ளார்கள்.

கடந்த காலங்களில் இந்திய வீரர்களுக்கு வாழைப்பழம் கூடுதலாகத் தர மறுக்கப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவற்றைச் சரிசெய்ய, தற்பொழுது தமது கையிருப்பில் அதிக வாழைப்பழக்களை வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோலி மற்றும் ரவிசாஸ்திரியின் முக்கியக் கோரிக்கையான பெண் தோழிகளைக் கூட அனுமதிப்பது பற்றியும் கடுமையாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிக்கிறது. வீராத்கோலி பெண் தோழி இருந்தால் தான் கவனம் சிதறாது எனவும் சில வீரர்கள் கவனம் சிதறிவிடும் எனத் தெரிவித்தாகவும் தெரிகிறது. இதன் முடிவு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. இவர்கள் ஆடுகளங்களில் திறமையாகச் செயல்படுவது எப்படி என்று விவாதித்தாகத் தெரியவில்லை. உள்ளரங்குகளில் எவ்வாறு சொகுசாக இருப்பது என்று அதிகம் விவாதித்தாகத் தெரிகிறது.

சிபிஐ கோர்ட் அதிரடி?

புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ அசோக்ஆனந்த் மீது அளவுக்கு அதிகமான சொத்துச் சேர்ததாக வழக்குத் தொடரப்பட்டது. அது சம்பந்தமான விசாரனை சிபிஐ கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இவர் தட்டாச்சாவடி தொகுதி எம்எல்ஏ ஆவார். இவரது வழக்கு விசாரனை புதுச்சேரி சிபிஐ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அதன் தீர்ப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. அவரும்,அவரது தந்தையும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வருட சிறை தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.   ரூ 1.57 கோடி மதிப்புள்ள சொத்துக்களைப் பரிமுதல் செய்ய உத்தரவிட்டு உள்ளது. கட்டத்தவறினால் மேலும் 3-மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்க உத்தரவிட்டு உள்ளது.

 

உயர்நீதி மன்றம் உத்தரவு

தீபாவளி தினத்தை முன்னிட்டு பல திரைப்படங்கள் வெளிவருகின்றன, அவற்றில் பெருபான்மையான படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்பதே அரிதாக உள்ளது.கிடைக்கும் திரையரங்களில் கூடுதல் காட்சிகளை ஓட்டி கல்லாகட்ட பெரும்பாடு படுகிறார்கள்.

ஏனென்றால் எந்தப்படமாக இருந்தாலும் ஒருவாரத்துக்கு மேல் தியேட்டருக்கு ரசிகர்கள் வருவதில்லை. இதைப் புரிந்து கொண்டு கூடுதல் காட்சிகளைப் போட்டு ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு வரவைக்க விரும்புகிறார்கள். சில சமயங்களில் ஏழு காட்சிகள் கூடத் திரையிட்டு வசூலை குவிக்கிறார்கள். இதற்க்கு உயர்நீதி மன்றம் கடுவாளம் போட்டு உள்ளது.

வீதிமுறைகளை மீறி காட்சிகளைக் கூடுதலாக்க கூடாது என உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் பல திரையரங்குகளில் கூடுதல் பணத்தையும் வசூலிக்கின்றன. இதனையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்தால் சரி.

குடியுரிமை யாருக்கு?

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றத்திலிருந்து பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். விசா சம்பத்தமான முறைகளில் பலத்த மாற்றங்களைச் செய்துவருகிறார். அதன் எதிரொலியாக வெளிநாட்டினர்களின் விசா முறைகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் எற்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக அமெரிக்கக் குடியுரிமை இல்லாத ஒருவருக்குப் பிறக்கும் குழந்தை அமெரிக்கக் குடிமகனாக முடியாது எனத் தெரிவித்து உள்ளார். 85 வருடங்களாக இருந்த விதிமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது வெளிநாட்டினருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இச்சட்டம் விரைவில் சட்டமாக வாய்ப்புள்ளது.

எஸ்பிஐ ?

இந்தியாவின் முன்னனி வங்கி நிறுவனமான எஸ்பிஐ வங்கி அதிரடி

முடிவுகளை எடுத்து வருகிறது. அது மக்களுக்கு மிகுந்த தொந்தரவை ஏற்படுத்தி வருகிறது.

இதன் விளைவுகளை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ATM-களில் ரூ.20,000-க்கு மேல் எடுக்கமுடியாது எனத் தெரிவித்து உள்ளது.

முன்பு ரூ.40,000-ம் என்பது அதிக வரம்பாக இருந்தது.இப்பொழுது ரூ.20,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பல ஆயிரம் கோடி பணத்தைத் தனது வங்கி கணக்கில் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.