பரியேறும் பெருமாள் BABL விமர்சனம்

பரியேறும் பெருமாள் BABL விமர்சனம்ப.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம்தான் பரியேறும் பெருமாள் BABL

திருநெல்வேலியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்து அரசு சட்ட கல்லூரிக்கு படிக்க வரும் தாழ்த்தபட்ட பிரிவை சேர்ந்த ஒரு மாணவன் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படத்தின் மயக்கதை.2005 ஆம் ஆண்டில் நடப்பது போல் பயணிக்கிறது படத்தின் கதை.

பரியேறும் பெருமாள் ஆக நடித்துள்ள கதிர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜோதி மகாலட்சுமி ஆக வரும் ஆனந்தியும் கொடுத்த கதாபாத்திரத்தை சரியாக செய்து உள்ளார். தாத்தாவாக வரும் கராத்தே வெங்கடேசன், பூ ராம்,யோகி பாபு, மாரிமுத்து ஆகியோரின் கதாபாத்திரங்களும் படம் முடிந்து வெளியே வரும் போது மனதில் நிற்கின்றன.

பாடல்களும், சந்தோஷ் நாராயணன் இசையும் கதையோடு ஒன்றி வருகிறது. படம் ஆரம்பித்து 5 நிமிடங்களில் கதையோட்டம் தெரிந்து விடுவது படத்தின் குறையாகும். படத்தின் கிளைமாக்ஸ் வழக்கமான படங்களை போல் அல்லாமல் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. ப.ரஞ்சித்ன் கருத்துகள் படத்தில் சிதறி கிடக்கின்றன.

வெற்றி நம் விரல் நுனியில்..!

மெதுவாக சிந்தனை செய்யுங்கள், ஆனால் விரைவாக செயல்படுத்துங்கள்.

பிறருக்கு உதவியாக வாழும் வாழ்க்கையே மேம்பட்ட வாழ்க்கையாகும்.

அறிவு மௌனத்தை கற்றுத்தரும். அன்பு பேசக் கற்றுத்தரும்.

எந்த செயலிலும் வேகமும், விவேகமும் இருக்க வேண்டும்.

அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.

சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை.

சொல்லில் நிதானம் சுகத்தை கொடுக்கும்.

சிந்தனையும் செயலும் ஒன்றாகிவிட்டால் வெற்றி நிச்சயம்.

வாழ்க்கையில் வெற்றிப்பெற தேவை சுறுசுறுப்பும், ஊக்கமும் தான்.

மனதை ஒரு நிலைப்படுத்தினால் வெற்றி நம் விரல் நுனியில்.

வாழ்க்கை தத்துவங்கள் !!

ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌விடும்.

உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி,

இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை,

தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல.

அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

எதை இழந்தீர்கள் என்பது முக்கியமல்ல, என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில், வாழ்நாட்கள் போதாது

ஏனெனில் இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம்.

சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..!

அறிவு இருந்தால் அனைத்தையும் உருவாக்கலாம், அந்த அறிவை பெற ஒன்றே ஒன்றுதான் தேவை. அது ஒழுக்கம்.

எதை வேண்டுமானாலும் புள்ளி விவரங்களால் அளந்திட முடியும், உண்மையைத்தவிர.”

விதைகள் தங்களுக்கு பிடித்த இடத்தை தேடி முளைப்பதில்லை. அதற்கு கிடைத்த இடங்களில் தன்னை செடியாகவோ, மரமாகவோ மாற்றிக்கொள்கின்றன. அதைப்போலதான் மனிதனின் வாழ்க்கையும் இருக்க வேண்டும். விழுந்துவிட்டோமே என்று எண்ணாமல் விழுந்த இடத்தில் இருந்து எழுந்து முன்னேறிச் செல்லுங்கள். வாழ்க்கை வரமாகும்.

மற்றவர்களின் தவறுகளை தீர்மானிப்பது எளிது. ஆனால் நமது தவறை உணர்வது கடினம்.

உன் அறிவு ஒரு விளக்கு, மற்றவர்கள் தங்கள் மெழுகுவர்த்திகளை அதில் ஏற்றிக்கொள்ளட்டும்.

செல்வம் பெருகப் பெருக ஆசை அதிகமாவது போல, அறிவு பெருகப் பெருக அதில் ஆர்வம் அதிகமாகும்.

அறிவு ஆட்சி செய்யும் இடத்தில், ஆற்றல் துணை செய்யும்.

அறிவாளி முன்யோசனையின் மூலம் தீயவற்றைத் தவிர்க்கிறார்.

அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது அது மனதை ஒருமுகப்படுத்துவது.

அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையை ஒரு குழந்தையின் புன்னகையை போல எதிர்கொள்ளுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்.

கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை. கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.

அழகைப் பற்றி கனவு காணாதீர்கள். அது உங்கள் கடமையைப் பாழாக்கி விடும்.

கடமையைப் பற்றி கனவு காணுங்கள். அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல. உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே.

எவ்வளவு நேரம் தூக்கம் தேவை?

மூன்றில் ஒருவர் இரவில் நன்றாகத் தூங்குவதில்லை. பெரும்பாலானவர்களுக்கு 8 மணி நேர உறக்கம் அவசியம். சிலருக்கு அதைவிட குறைந்த நேரம் போதும்.
உங்கள் உடலுக்கு எவ்வளவு நேரம் தூக்கம் தேவை என்பதை முதலில் அறியுங்கள். அவ்வளவு நேரம் தூங்குவதை உறுதி செய்யுங்கள்.

தொடர்ந்து போதிய தூக்கமில்லாமல் இருந்தால் அது உடல் நலத்தை கடுமையாக பாதிக்கும். உடல் பருமன், நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவை இதனால் உண்டாகும்.

நன்றாகத் தூங்கினால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும். மன நலமும் மேம்படும். நீரிழிவுக்கான வாய்ப்புகள் குறையும். பாலியல் வாழ்க்கையும் சிறக்கும்.

ஒரு நாள் சரியாகத் தூங்காவிட்டால், மறுநாள் அதிகம் தூங்குங்கள். பல மாதங்கள் போதுமான தூக்கம் இல்லாவிட்டால், மீண்டு வரவே சில வாரம் தேவை.

கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா.

மியான்மரில் ரோஹிஞ்சா சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறியதால் அவருக்கு எதிராக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த, முன்பு பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மரில் மக்களாட்சியை நிறுவ மேற்கொண்ட முயற்சிகளுக்காக ஆங் சான் சூச்சிக்கு 1991இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ரோஹிஞ்சா இன மக்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலைகள் தொடர்பாக மியான்மர் ராணுவ அதிகாரிகளை விசாரணை செய்ய வேண்டும் என்று ஐ.நா கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டு காலமாக மியான்மரில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களால் இதுவரை சுமார் ஏழு லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரை விட்டே வெளியேறியுள்ளனர்.

சூச்சி இன்னும் கௌரவ குடியுரிமைக்குத் தகுதியானவராக உள்ளாரா என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேள்வி எழுப்பிய மறு நாளே ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அவையின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

 

பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போது மாதவிடாயை காரணம் காட்டி 10 முதல் 50 வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டத்தின் 14ஆம் பிரிவை மீறுவதாக உள்ளதென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று, வெள்ளிக்கிழமை, இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதி ரோஹின்டன் நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் இந்த அமர்வில் அங்கம் வகித்தனர்.

பழக்க வழக்கங்களும் நடைமுறையும் பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமான வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டுமென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் கன்வில்கர் ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

சபரிமலை கோயில் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் சொந்தமான கோயில் இல்லை என்பதால் பழைய வழக்கங்களையே பின்பற்ற முடியாது என்று நீதிபதி நாரிமன் தன் தீர்ப்பில் கூறியுள்ளார். பிறப்பின் அடிப்படையில் வழிபாட்டு உரிமையை மறுக்க முடியாது என்றும் பெண்களை நுழைய அனுமதி மறுக்கும் வழக்கம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“அனைவருக்கும் சம உரிமை உண்டு. சில ஆண்களின் கண்ணோட்டத்தின் அடிப்படையில் விழுமியங்களை முடிவு செய்ய முடியாது. பெண்களால் கோயிலுக்கு விரதம் இருக்க முடியாது என்பதால் அவர்களின் அனுமதியை மறுப்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது,” என்று நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

“இந்த விதிமுறையே இழிவானது. மாதவிடாயை காரணம் காட்டி அனுமதி மறுப்பது பெண்களின் தனிப்பட்ட கண்ணியத்துக்கு எதிரானது. இதுவும் ஒரு வகையான தீண்டாமைதான்,” என்று சந்திரசூட் கூறினார்.

இந்த அமர்வில் அங்கம் வகித்த பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா, “மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஏனெனில், பிற மத வழிபாட்டு இடங்களிலும் இது பெரிய தாக்கத்தை உண்டாக்கும்,” என்று மாறுபட்ட, சிறுபான்மை தீர்ப்பை அளித்துள்ளார்.

“பகுத்தறிவுக்கு உற்பட்டதோ இல்லையோ, எல்லா மக்களும் தங்கள் நம்பிக்கையை பின்பற்ற மதசார்பற்ற ஜனநாயகத்தில் இடம் உண்டு. அதை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது. சம உரிமைக் கோட்பாடு வழிபாட்டு உரிமையை மீறும் வகையில் இருக்கக் கூடாது,” என்று இந்து மல்கோத்ரா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

 

உலகில் சிறந்த கல்விமுறை கொண்ட நாடு.

உலகிலேயே மிக வெற்றிகரமான கல்விமுறையை ஃபின்லாந்து நாடு பின்பற்றுகிறது. என்று உங்களுக்கு தெரியுமா? அங்கு மாணவர்கள் மிகக் குறைந்த நேரமே பள்ளியில் செலவிடுகிறார்கள். அதுமட்டுமில்லை. தேர்வுகளும் வீட்டுப்பாடங்களும் மிகக் குறைவே.

சர்வதேச மாணவர் மதிப்பீட்டின்படி, ஃபின்லாந்து நாட்டு மாணவர்கள் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு, மற்ற நாடுகளைவிட அதிக நேரம் படிப்பதில் செலவிடுகிறார்கள்.

ஆனால், 1960களின் இறுதிவரை, 10 சதவீத ஃபின்லாந்து மாணவர்கள் மட்டுமே மேல்நிலைபள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார்கள்.

புதுமையான சீர்த்திருத்தங்கள்:

தலைநகர் ஹெல்சின்கியில் இருக்கிறது விக்கி பள்ளி. இங்கு பணக்காரர்கள் மற்றும் பணிபுரியும் வர்கத்தின் குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக அமர்கின்றனர்.

பள்ளிக்கட்டணம் என்று எதுவும் கிடையாது. மேலும், பள்ளிக்கு தேவையான அனைத்தும் இலவசம்.

முதல்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 940 மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அவர்களுக்கு மருத்துவ மற்றும் பல் மருத்துவ உதவிகளும் உண்டு. இவை உளவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவோடு நடக்கிறது.

சமமில்லாத வருமானம், ஏழ்மை உள்ளிட்டவையும் கல்வி முறைகளை மேம்படுத்துவதில் முக்கிய தாக்கம் செலுத்துவதை புரிந்து கொள்ள முடிவதாக மேலும் அவர் புத்தகத்தில் பசி எழுதியுள்ளார்.

மக்கள் நலன்:

ஃபின்லாந்து அரசின் பெரியளவிலான சமூக திட்டங்களும், அந்நாட்டு கல்விக் கொள்கைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுகிறது. 51.6 சதவீதம் என்ற விகிதத்தில், உலகில் அதிக வரி வசூலிக்கும் நாடு ஃபின்லாந்து. அதனால் இத்திட்டங்கள் சாத்தியாமாகின்றன.

எனினும், 2018ஆம் ஆண்டின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலை ஐ.நா வெளியிட்டதில், ஃபின்லாந்து முதலிடம் பிடித்தது.

பசி சல்பர்க் கூறுகையில், “சிறிய மற்றும் குறைந்த மக்கள் தொகை (5.5 மில்லியன் மக்கள்) கொண்ட நாடான ஃபின்லாந்தில், கல்விக் கொள்கைகள் வகுத்து, சமூக திட்டங்களை செயல்படுத்துவது என்பது சற்று எளிதாக இருக்கும். பெரிய மற்றும் பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் நாடுகளில் இது கடினமானது” என்கிறார்.

“நேர்மை, நியாயம் மற்றும் சமூகநீதி ஆகியவை ஃபின்லாந்து மக்களின் வாழ்வில் ஆழமாக கலந்துள்ளது. மக்களிடத்தில் மிக அதிகமான பொறுப்பு உள்ளது. அப்பொறுப்பு தங்கள் வாழ்க்கைக்கானது மட்டுமல்ல, பிறர் வாழ்க்கைக்கானதும்”.

 

இனிமேல் ஆதார்: எங்கு தேவை

  •  எந்த ஒரு தனியார் நிறுவனங்களும் உங்கள் ஆதார் விவரங்களை கேட்கக்கூடாது.
  •  தனியார் நிறுவனங்களுக்கு தகவல்களை தர அனுமதி தரும் ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது.
  •  மொபைல் போன் நிறுவனங்களுக்கு ஆதார் எண் தர வேண்டிய அவசியமில்லை.
  • வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டியதில்லை.
  •  வங்கிகளுக்கு இனிமேல் ஆதார் எண் வழங்க வேண்டிய அவசியம் இல்லை.
  •  பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆதார் எண்ணை கேக்கக் கூடாது.
  • வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம்.
  •  பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்.
  •  அரசு மானியம், உதவி பெற உங்களுக்கு தகுதி இருந்தால் ஆதார் எண்ணை  காட்டி அதனை தடுக்க முடியாது.
  •  தனிநபரின் தகவல்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

 

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பங்களாதேஷ்..

கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம்

தமிழ்நேரலை

நேற்று அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ள பங்களாதேஷ் அணி இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா என அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். நாளை துபாயில் மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் அந்த அணி பலம் வாய்ந்த இந்தியாவுடன் மோதுகிறது.