2018 ஆம் ஆண்டிற்கான  ஐசிசி விருதுகள்

அசர வைக்கும் விராட் கோலி:

 

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இந்த வருடத்துக்கான சிறந்த டெஸ்ட் வீரர், ஒரு நாள் போட்டி வீரர் மற்றும் கிரிக்கெட்டின் உயரிய விருதான சர் கர்பீல்டு சோபர்ஸ் ஆகிய மூன்று விருதுகளை வென்று அசத்தி உள்ளார்.

 சிறந்த புதுமுக வீரர்:

ஐசிசி 2018 ஆம் ஆண்டின் சிறந்த புதுமுக கிரிக்கெட் வீரராக இந்தியாவை சேர்ந்த ரிஷப் பாண்ட் ஐ தேர்வு செய்து உள்ளது.

சிறந்த உத்வேக வீரர்:

2018 ஆம் ஆண்டின் சிறந்த உத்வேக வீரராக ஐசிசியால் நியூசிலாந்து வீரர் கனே வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார். வீரரின் ஒழுக்கம் மற்றும் நடத்தையின் அடிப்படையில் இந்த விருது வழங்கபடுவது குறிப்பிடதக்கது.

கிரிக்கெட் ரசிகர்களின் தேர்வு:

கிரிக்கெட் ரசிகர்களால் 2018 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் நிகழ்வு ஆக 19  வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட் உலககோப்பையை இந்திய அணி வென்றது தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

சிறந்த டி20 பெர்பார்மன்ஸ்:

ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் 2018 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹராரேவில் 172 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்தார். சிறந்த டி20 பெர்பார்மன்ஸ் ஆக ஐசிசியால் இந்நிகழ்வு தேர்வு செய்யபட்டு உள்ளது.

சிறந்த அசோசியேட் வீரர்:

ஐசிசி வழங்கும் சிறந்த அசோசியேட் வீரர்க்கான விருதை ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் காலும் மெக்லியோட் வென்றார்.இவர் உலக கோப்பை தகுதி சுற்று மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் சதம் அடித்தது குறிப்பிடதக்கது.

சிறந்த நடுவர்:

2018 ஆம் ஆண்டின் சிறந்த நடுவராக குமார் தரும சேனா ஐசிசியால் தேர்வு செய்யபட்டு உள்ளார். இரண்டாவது முறையாக இந்த விருதை அவர் பெறுகிறார்.

ஐசிசியின் சிறந்த ஒருநாள் அணி:

ரோஹித் சர்மா    –(இந்தியா)

பேர்ட்ஸ் டோ       –(இங்கிலாந்து)

விராட் கோலி       –(இந்தியா)       கேப்டன்

ரூட்                        –(இங்கிலாந்து)

ரோஸ் டெய்லர்   –(நியூசிலாந்து)

பட்லர்                    –(இங்கிலாந்து) விக்கெட் கீப்பர்

பென் ஸ்டோக்ஸ்–(இங்கிலாந்து)

முஸ்தபியர்          –(பங்களாதேஷ்)

ரசித்கான்               –(ஆப்கானிஸ்தான்)

குள்தீப் யாதவ்      –(இந்தியா)

பும்ரா                       –(இந்தியா)

ஐசிசியின் சிறந்த டெஸ்ட் அணி:

லாதம்                     –(நியூசிலாந்து)

கருணாரட்ன         –(இலங்கை)

வில்லியம்சன்      –(நியூசிலாந்து)

விராட் கோலி        –(இந்தியா) கேப்டன்

ஹென்ரி நிக்கோல்ஸ் –(நியூசிலாந்து)

ரிஷப் பாண்ட்          –(இந்தியா) விக்கெட் கீப்பர்

ஹோல்டர்               –(வெண்டீஸ்)

ரபடா                         –(தென் ஆப்ரிக்கா)

லியோன்                  –(ஆஸ்திரேலியா)

பும்ரா                         –(இந்தியா)

முஹம்மது அப்பாஸ்–(பாகிஸ்தான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *