நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகப் பெரிய கூட்டணியில் உருவான 2.0 எவ்வாறு உள்ளது.
திரையுலகின் பிரபலமானவர்களின் கூட்டு முயற்சியில் உருவான 2.0 இன்று வெளிவந்து உள்ளது. படத்தின் மையக்கரு செல்போனினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியது.
பறவைகள்பற்றிய ஆராய்ச்சி வல்லுனாராக அக்ஷய் குமார் நடித்துள்ளார். அவர் தனது ஆராய்ச்சிமூலம் கதிர் வீச்சுகளால் பறவைகள் பாதிக்கப்படுவதை உணர்கிறார். அந்தக் கதிர் வீச்சுச் செல்போன்கள் மூலம் உருவாகுவதை உணர்ந்து, அதைத் தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். அதாவது அலைபேசியின் கதிர்வீச்சை குறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறார். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
பிறகு நீதிமன்றத்திலும் நிராகரிக்கப்படுகிறது. இந்த வேதனை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்.
அக்ஷய் குமார் மீண்டும் மறுபிறவி எடுத்துப் பறவைகளின் உதவியுடன் பறவை மனிதனாக மாறுகிறார்.
அவரது நோக்கம் செல்போன்கள் இருந்தால் தானே கதிர்வீச்சு என்று நினைத்துச் செல்போன்களை மறைத்துவிடுகிறார். தொடர்ந்து செல்போன்கள் காணமல் போவதால் அரசாங்கத்துக்குத் தலைவலி ஏற்படுகிறது.
அதனால் அரசாங்கம் ரஜினிகாந்த் உதவியை நாடுகிறது. இந்தியாவின் சிறந்த ரோபோ விஞ்ஞானியாக ராஜினிகாந்த் நடித்துள்ளார்.
ரஜினிகாந் தனது கடும் முயற்சியால் ரோபோ 2.0 –வை உருவாக்கிறார். ரோபோ 2.0-க்கும், பறவை மனிதன் அக்ஷய் குமாருக்கும் இடையில் நடக்கும் யுத்தமே கதை.
இறுதியில் பறவை மனிதனா அல்லது 2.0-வா யாருக்கு வெற்றி என்பதே மீதி கதை.
ரோபோ விஞ்ஞானியாக ரஜினிகாந்த் சிறப்பாக நடித்துள்ளார். அவரது உதவியாளராக எமிஜாக்சன் நடித்துள்ளார். எமிஜாக்சன் வாழ்வில் சிறப்பான கதாபாத்திரம் கிடைத்துள்ளது.
வில்லனாக அக்ஷய் குமார் மிரட்டியுள்ளார். பறவை மனிதனாக நம்மையெல்லாம் அதிரவைத்துள்ளார்.இவரது தோற்றமும் நடிப்பும் மிரள வைத்துள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் பின்னனி இசை உலகதரத்தில் உள்ளது.
இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் வந்த படங்களில் தொழில்நுட்பத்தில் இப்படம் முதலிடத்தைப் பிடிக்கும்.கற்பனைக் காட்சிகளைக் கலந்து விருந்தாக்கி உள்ளார்.
கதை அமைப்பில் சுஜாதா இல்லாத குறை அங்காங்கே தெரிகிறது. கண்மூடி கொண்டு ரசித்தால் பிரமாண்டம் சற்று யோசித்தால் எல்லாம் கற்பனையே.