17 வயது சிறுவனிடம் தகாத உறவு

திருவனந்தபுரம் 17 வயது சிறுவனிடம் தகாத உறவு வைத்த 45 வயது பெண் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.கேரள மாநிலம் திருவனந்தபும் அருகே பொழியூரை சேர்ந்த 17 வயது சிறுவன் அப்பகுதி பள்ளியில் பிளஸ்ஒன் படித்து வருகிறார்.

இந்த சிறுவன் வீட்டில் தகராறு செய்வது, டிவியை உடைப்பது, சாப்பிடாமல் இருப்பது போன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.இதனால் மனவேதனையடைந்த பெற்றோர் குழந்தைகள் நல அதிகாரியிடம் சிறுவனை கவுன்சிலிங் அழைத்து சென்றனர்.

அவர்கள் விசாரித்ததில் , விடுமுறை நாட்களில் பக்கத்தில் உள்ள சித்தி வீட்டுக்கு அந்த சிறுவன் அடிக்கடி சென்று வருவது வழக்கம். அவ்வாறு சென்ற போது சித்தி வீட்டு பக்கத்தில் உள்ள 45 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த பெண்ணின் வீட்டுக்கும் சிறுவன் அடிக்கடி சென்று வந்துள்ளார். இதை பயன்படுத்தி சிறுவனை அந்த பெண் தனது ஆசைகளுக்கு பயன் படுத்தியுள்ளார். இதற்கு வசதியாக சித்தி வீட்டில் நின்று படிப்பதாக சிறுவன் கூறியதை பெற்றோர் ஏற்காததால் வீட்டில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்,என்பது தெரிய வந்தது.அந்த பெண் மீது பொழியூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *