+1,+2 தேர்வு முடிவுகள் எப்போது?

தமிழ்நாடு மற்றும் புதுசேரியில் உள்ள +2 மாணவர்களுக்கான பொது தேர்வை மொத்தம் உள்ள 2944 தேர்வு மையங்களில் 861107 மாணவ மாணவிகள் எழுதினர். இந்த ஆண்டு முதல் பாடம் ஒன்றுக்கு 100 மதிப்பெண்கள் விதம் 600 மதிபெண்களுக்கு தேர்வுகள் நடைபெற்றன. மொழி பாடங்களில் இரண்டு தாள்களுக்கு பதிலாக ஒரே தாளாக தேர்வு நடைபெற்றது.

பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் 06.03.2019 அன்று தொடங்கி 22.03.2019 அன்று முடிவடைந்தது.  தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 914 மையங்களில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவர்களும், புதுச்சேரியில் 40 மையங்களில் 14 ஆயிரத்து 985 மாணவர்களும் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், இந்த பொதுத் தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் 11 மண்டலங்களில் இன்று தொடங்கியுள்ளது. இன்று துவங்கி ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதையடுத்து, ஏப்ரல் 19ம் தேதியன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், மே 8ம் தேதியன்று 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *