சுமத்ரா: இந்தோனேஷியாவில் இன்று கடும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பாண்டா கடற்கரை பகுதியில் நடந்த இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் விவரம் ஏதும் அறியப்படவில்லை.
பப்புவா பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 22 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் தொடர்ந்து 3 முறை உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் துறை ஆய்வகம் தெரிவிக்கிறது.
சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
நிலநடுக்கம் உணரப்பட்டபோது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் அவசர வழி மூலம் வெளியேறியதை நேரில் பார்த்ததாக உள்ளூர்வாசி ஒருவர் கூறினார்.