அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டுக்கொலை !

வாஷிங்டன்:அமெரிக்காவில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, இந்தியர் நான்கு பேர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில், சந்திரசேகர், 44, என்ற இந்தியர், அங்குள்ள நிறுவனம் ஒன்றில், கம்ப்யூட்டர் தகவல் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றி வந்தார்.சந்திரசேகர், அவர் மனைவி லாவண்யா, 41, அவர்களின், 15 மற்றும் 10 வயது மகன்கள், துப்பாக்கியால் சுடப்பட்டு, இறந்து கிடந்ததை, சனிக்கிழமை காலையில், விருந்தினர் ஒருவர் பார்த்துள்ளார்.அவர் அலறி அடித்து, சாலைக்கு ஓடி வந்து, கதறியுள்ளார். அதைப் பார்த்த சிலர், போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

போலீசார் வந்து ,நான்கு பேரது உடல்களையும் அப்புறப்படுத்தி, விசாரணை நடைபெற்று வருகிறது .நால்வர் கொலை நடந்த போது, சந்திரசேகர் வீட்டின் பிற அறைகளில், இரண்டு குழந்தைகளுடன், இரண்டு பெரியவர்கள், விருந்தினர்களாக தங்கியிருந்தனர். அவர்களிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.சந்தேகத்திற்கு உரிய யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்கள் என, போலீசார் தெரிவித்தனர்.