பாஜக தலைவர் பொறுப்பில் அமித் ஷவே நீடிப்பார் என தகவல் தெரிகின்றன அடுத்த 6 மாதங்களுக்கு அமிஷ் பொறுப்பில் நீடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன
அமித் ஷா தலைமையின் கீழ் பாஜக தேர்தலை எதிர்கொண்டது இந்த தேர்தலில் கூட்டணி இருந்தாலும் பாஜக மட்டுமே தனித்து 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது
தேர்தல் வெற்றிக்கு பின்னர் மீண்டும் 2 வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்
அவர் அமைத்த அமைச்சரவையில் அமித் ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. முன்னதாக அமித் ஷாவின் கட்சியின் தேசிய தலைவர் பதவிக் காலம் முன்பே முடிந்துள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்காக பொறுப்பு நீட்டிப்பு செய்யப்பட்டது.
தற்போது அமித் ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பதால், தலைமை பொறுப்பு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த 6 மாதங்களுக்கு பாஜக தலைவராக அமித் ஷாவே நீடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.