” மம்தா சொல்லும் காரணம்”

அடுத்த வாரம் நடக்கப்போகும் நீத்த அயோக் சந்திப்பில், கலந்து கொள்ளப் போவதில்லை” என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு க் கடிதம் எழுதியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
அவர் மேலும், “நீத்தி அயோக் அமைப்பிற்கு நிதி சார்ந்து முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை. அதேபோல மாநிலத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் அதிகாரமும் இல்லை. எனவே, அந்த அமைப்பின் சந்திப்பில் கலந்து கொள்வது எந்தப் பயனையும் தராது.

நமது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை ஆதரித்தது திட்ட கமிஷன். பொருளாதாரம் மற்றும் வளங்களை பகிர்ந்தளிப்பதில் அது நல்ல பங்கைச் செய்து வந்தது. ஆனால் அந்த அமைப்பை நீங்கள் தன்னிச்சையாக கலைத்துவிட்டீர்கள்.

அது குறித்து மாநிலத்தின் முதல்வர்கள் இடத்தில் கூட எந்த விவாதமும் யோசனையும் பெறப்படவில்லை” என்று கூறியுள்ளார். இதற்கு முன்னரும் மம்தா பானர்ஜி, நீத்தி அயோக் கூட்டங்களுக்குச் செல்வதை தவிர்த்து வந்தார்.
வரும் ஜூன் 15 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நீத்தி அயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இது 5வது நீத்தி அயோக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *